Breaking News
recent

ஷம்சுல் இஸ்லாம் சங்க பெயரில் போலி திருமணச் சான்றிதழ்: சட்ட நடவடிக்கை எடுக்கிறது!

1)  ஷம்சுல் இஸ்லாம் சங்க பெயரில் போலி திருமணச் சான்றிதழ்: சட்ட நடவடிக்கை எடுக்கிறது!
திரை ஷம்சுல் இஸ்லாம் சங்க பெயரில் போலி திருமணச் சான்றிதழ் ஒன்று குவைத்தில் அதிரை சகோதர்களின் பார்வைக்கு வந்தது. அதனை அவர்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தின் கவணத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதனை முழுமையாக ஆய்வு செய்த சங்க நிர்வாகம்,அந்த சான்றிதழ் போலியானதுதான் என்பதை கண்டுப்பிடித்தனர். இந்த போலி சான்றிதழை வைத்து 'நோட்டரி பப்லிக்' அத்தாட்சியும், தமிழ்நாடு அரசுக் காஜியின் சான்றிதழும் பெறறுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஷம்சுல் இஸ்லாம் சங்க சட்ட தரணியின் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளார்.

இந்த போலி சான்றிதழ் குற்றத்தில் ஈடுபட்டவர் அதிரைப்பட்டினத்தை சாரதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழிப்போடு இருந்து செயல்பட்ட குவைத் அதிரை சகோதர்களையும் துரித நடவடிக்கை எடுத்த நிர்வாகத்தையும் பாராட்டுகிறோம்.

 2)  புரிந்துணர்வு!


25 அக்டோபர், 2010 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க பெயரில் போலி வலைப்பூ;எச்சரிக்கை ரிப்போர்ட்! ஒரு பகீர் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து, ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வெளியிட்ட அறிக்கையையும் 27 அக்டோபர், 2010 அன்று போலி வலைப்பூவை நிறுத்துக!ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேண்டுகோள்!! என்ற தலைப்பில் மீண்டும் செய்தி வெளியிட்டோம்.

இந்நிலையில்,ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதில் முனைந்த வலைப்பூவினர்களை முறையாகத் தொடர்பு கொண்டு, அதிரை போஸ்டால் சுட்டிக்காட்டப்பட்ட வலைப்பூவை நிறுத்தும்படிக் கோரியது. அவர்கள் சில நாட்களுக்கு பின், அதற்குச் சம்மதித்து ஒப்படைத்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மறுபக்கம், அதிரை போஸ்டும் அந்த வலைப்பூவினர்களும் தொடர்ந்து கருத்து பரிமாற்றத்தில் ஈடுட்டதில் அவர்கள் தவறான என்னத்தின் அடிப்படையில் வலைப்பூவை துவக்கவில்லை. மாறாக நல்ல ஆரோக்கியமான என்னமே அவர்களிடம் இருந்தது என்பதை புரிந்துக்கொண்டோம்.

என்ற போதும் பதிவு செய்யப்பட்ட ஒரு நிருவனத்தின் பெயரில் அவர்கள் அனுமதியில்லாமல் அவர்கள் பெயரில் தளத்தை இயக்குவது பல குழப்பங்களுக்கு வித்திடும் என்ற நமது வாதத்தின் மீதிருந்த நியாயத்தையும் புரிந்துக்கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்கு அதிரை போஸ்டின் பிரத்யோக நன்றியையும் பாராடுக்களும்! இந்த வலைப்பூ விசயத்திலும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் துரிதமாக செயல்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

3) ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிகாரப்பூர்வ இணைய தள துவக்கம்!

இப்படி எல்லா விசயங்களிலும் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சங்க நிர்வாகம், சங்க அதிகாரப்பூர்வ இணைய தளத்தையும் துவக்கியுள்ளது.

இது குறித்து அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம்.http://shamsulislamsangam.blogspot.com/ சங்கத்தின் நிகழ்வுகள்,திட்டங்கள்,தீர்மானங்கள்,அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் வெளியிடப்படும்.

சங்க நிர்வாகம் ஒளிவு மறைவற்ற முறையில் செயல்பட வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளது.அதன் நடவடிக்கைகளில் ஒன்றே இணைய தளம்.சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்ட முஹல்லாவாசிக்கு என்ன தகவல் கிடைத்ததோ அதே தகவல் உலகில் எந்த நிலத்தில் இருந்தாலும் மற்றோரு முஹல்லாவாசிக்குக் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறது.

எனவே, உலகம் முழுவதும் வாழும் முஹல்லாவாசிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிகராப்பூர்வ இணைய தள சுட்டியையும் அதிரை போஸ்ட் கொடுத்துள்ளது.

4) கொஞ்சம் இதையும் படிங்க‌...!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துரித நடவடிக்கைகள், அழகிய மாற்றங்கள்,மேம்படுத்தப்பட்ட நிர்வாகம்,மக்கள் பிரச்சினை தீர்ப்பு இப்படி எல்லா நல்ல விசயங்களுக்கும் கைகோர்த்து வரும் அதிரை போஸ்ட், இதில் பிழை ஏற்படின் அதை தெரிந்தே செய்தால் அதனையும் மக்கள் முன் வைப்போம். என்பதை சங்கத்திற்கும்,முஹல்லாவாசிகளுக்கும் எமது வாசகர்களுக்கும் தெரிவிக்கிறோம்.
Unknown

Unknown

5 கருத்துகள்:

  1. அபுஇபுறாஹிம் கூறியது...//Well Done அதிரை POST ! keep it up !//

    அபுஇபுறாஹிம் காக்கா, உங்களின் வருகை,ஆதரவு,கருத்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. முறையான/தெளிவான பதிவு உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. Adirai (Cmp) Irfy,

    // முறையான/தெளிவான பதிவு உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள்//

    நன்றி சோதரரே!

    பதிலளிநீக்கு
  4. ஷம்சுல் இஸ்லாம் சங்க சட்ட தரணியின் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளார்.
    இந்த விசயத்தில் சங்கம் முறையாகவும் விரைவாகவும் செயல்பட அல்லாஹ் உதவிபுரிவனகவும்!

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.