மூன்றாம் ஆண்டில் அதிரை போஸ்ட்

மூன்றாம் ஆண்டில் காலடி வைப்பது
சாதனையல்ல அது ஒரு காலகடத்தலே!
காகிதப்பூவாய் மணம் வீசாத பத்திரிக்கை
பல பத்திரிக்கையின் எண்ணிக்கையில் சேர்த்தி மட்டுமே நேர்த்தியல்ல.
அதிரை போஸ்ட் இதுவரை சாதித்தது என்ன?
நம் மக்களிடம் நல்லதை போதித்ததா?
இல்லை இதன் செய்தி மற்றவைரை பாதித்ததா?
வாசகர் சொல்லட்டும்.
இன்னும் கடக்க போகும் காலத்தில்
கடமையே கண்ணாய் இருப்பது அவசியம்.
ஊரின் செய்தியை பிராதானமாக கொள்வதும்,
சமூக அக்கரையில் கவனம் கொள்வதும்
தீயதை தள்ளி நன்மை சொல்வதும்
இதன் தலையாகக்கடமையாக இருக்கனும்
சிறக்கனும்.
crown

7 கருத்துகள்:

  1. மூன்றாண்டில் தடம் பதிக்க இருக்கும் அதிரை போஸ்ட் க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.சொன்னபடி இனி ஊரின் வளர்ச்சிக்கு ஊன்றுகோளாக திகழட்டும்

    பதிலளிநீக்கு
  2. 3ம் ஆண்டு சாதனையல்ல என்று அவையடக்கத்துடன் சொன்னாலும் சாதனைதான் என்று நான் சொல்கிறேன்...காரணம் என்னவெனில் நீங்கள் ஏதோ ஆரம்பித்தோம் நேரம் கிடைக்கும் போது பதியலாம் என "சும்மா" இருந்து விடாமல் தொடர்ந்து பதிவது...பிரயோஜனமான விசயங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமே ..சாதனை ...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்தும் நெஞ்சங்களோடு நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்... !

    நிச்சயம் சாதனைதான் !

    தொடரட்டும் அவையடக்கம், அனுசரனை, முன்னெச்சரிக்கை, பதிவுலக சகோதரர்களை மதிக்கும் பக்குவம் !

    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  4. இறை நம்பிக்கை இல்லாதவன் நான். ஆகவே இறைவனுக்கு பயந்து எழுதவில்லை. இறைவனுக்கு பயந்து செயல்படுவதென்றால், இறைவன் என்ன ஒரு அடக்குமுறையாளனா? நிச்சயமாக நீங்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
    இறைவனுக்கு பயந்தாலும் பயப்படாவிட்டாலும் நாம் சந்திக்கிற ஒரு புள்ளி சக மனிதர்களின் நலனில் அக்கறையும் ஈடுபாடும். அந்த உணர்வோடு அதிரை பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
    அ. குமரேசன்

    பதிலளிநீக்கு
  5. ஊர் செய்திகள் பலவற்றையும் அதிரை போஸ்ட் மூலம் அறிந்துவந்தேன் உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. அல்ஹம்துலில்லாஹ்
    கருத்து சொன்ன
    எம்.ஹெச்.ஜஹபர் சாதிக் காக்கா ஜாஹிர் ஹுஸைன் காக்கா, லால்பேட்டை.காம்.அபு இபுறாஹிம் காக்கா,தீக்கதிர் நாளிதழ் துணையாசிரியர் குமரேசன் அண்ணன்,ஷாஹூல் ஹமீத் காக்கா உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை போஸ்டின் நன்றிகள்!
    இன்ஷாஅல்லாஹ் நமது ஊடக சேவை தொடரும்...

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்