Breaking News
recent

சுப்ஹுக்கான அதானின் போது ஸஹர் உணவு சாப்பிடுதல்


Yousuf-Al-Qrdavi
  • முன்அடுத்தது
கேள்வி - தூக்கம் மிகைத்தல் போன்ற நிர்ப்பந்தமான காரணங்களுக்காக ஸுப்ஹின் அதான் சத்தம் கேட்கும் போது அது முடிவடையும் வரை தொடர்ந்து ஸஹர் உணவை சாப்பிட முடியுமாஅல்லது அதான் சத்தம் கேட்டவுடனேயே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வது அவசியமா?

பதில் - குறித்த நாட்டின் அல்லது பிரதேசத்தின் புவியியல் அமை வுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்ட ஸுப்ஹ் அதானிற்கான நேரம் உறுதியாகிவிட்டால் அல்லது ஸுப்ஹிற்கான அதானை சேவியுற்றால் உண்ணல்பருகல் ஆகிய நடவடிக்கைகளை நிறுத்துவது அவசிய மானதாகும். மேலும் ஒருவர் தனது வாயினுள் உணவுக் கவளம் காணப்படும்போது அதானை சேவியுற்றால் அதனை துப்பிவிடுவது அவசியமானதாகும்.
ஒருவருக்கு ஸுப்ஹ் அதானின் நேரம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் அதற்குரிய நேரம் உறுதியாகும் வரை உண்ணல் பருகல் போன்றவற்றில் ஈடுபடலாம். எனினும்இன்று இவ்வாறான சந்தேக மான நிலைகள் உருவாகும் வாப்புகள் மிகக்குறைவு. ஏனெனில்இன்று பரவலாக அனைத்து இஸ்லாமிய வீடுகளிலும் தொழுகைக் கான நேர அட்டவணைகளும் கடிகார வசதிகளும் காணப்படுகின்றன.
ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் "நான் ஸஹர் சாப்பிடும்போது சந்தேகம் ஏற்பட்டால் அதனை நிறுத்திவிடுகிறேன்" என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் "சந்தேகம் நீங்கி ஸுப்ஹ் அதானின் நேரம் உறுதியாகும் வரை சாப்பிடுவீராக" என்று கூறினார்கள். மேலும் இமாம் அஹ்மத் அவர்கள் "ஸுபஹ் நேரம் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் அதன் நேரம் உறுதியாகும் வரை சாப்பிட முடியும்" என்ற கருத்தைக் கூறியுள்ளார்கள்.
இமாம் நவவி (ரழி) அவர்கள் "பஜ்ருடைய நேரம் அனுமதிக் கப்பட்டது என்ற கருத்தில் ஷாபி மத்ஹபின் இமாம்கள் உடன் படுகின்றனர்" என்று கூறுகின்றார். ஏனெனில் அல்லாஹ் திருமறை யில் பஜ்ருடைய நேரம் தெளிவாகும்வரை ஸஹர் உணவு உட் கொள்வதை அனுமதித்துள்ளான். எனவே இச்சந்தேகம் பஜ்ருடைய நேரத்தின் வருகையை உறுதிப்படுத்து வதாக அமையாது. இவ்வாறான சந்தேகமான நிலையில் உண்ணல்பருகல் என்ப வற்றை மேற்கொள்ள முடியும்.
"இன்னும் பஜ்ருடைய நேரத்தில் (இரவு என்ற) கறுப்பு நூலி லிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளி வாகும் வரை உண்ணுங்கள் பருகுங்கள்." (பகரா: 187)
பஜ்ருடைய நேரம் வருவதற்கு சிறிதளது நேரத்திற்கு முன்பே உண்ணல்பருகல் போன்றவற்றை நிறுத்தும் ஒரு வழமை எம்மில் காணப்படுகின்றது. இச்சேயற்பாடு தொடர்பாக அல்குர்ஆன்அல் ஸுன்னா என்பவற்றில் எவ்வித ஆதாரங்களும் கிடையாது. மேலும் இது மார்க்கத்தில் அதிகப்படுத்தும் அல்லது அத்துமீறிச் சேல்லும் நிலையாகும். எமது இவ்வழமை ஸஹர் உணவை பிற்படுத்துமாறு பணிக்கும் ஹதீஸ்களுக்கு முரணானதாக அமைந்துள்ளது.
(கலாநிதி யூசுப் அல்-கர்ளாவியின் பதாவா முஆஸிரா’ என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.