மக்காவுக்கும் துருக்கிய தலைநகரான ஸ்தன்பூலுக்குமிடையில் அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை துருக்கி ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1900 ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கத்தினால் அடிக்கல் நாட்டப்பட்ட பழைய ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் 2241 கிலோ மீற்றர் நீளமான தூரத்தை 24 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்கின்றது துருக்கிய அரசாங்கம்.
ரயில் போக்குவரத்து வேலைத்திட்டம் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் பூர்த்தியாக்கப்படும் என்றும், இதன் மூலம் வருடாந்தம் 2 மில்லியன் பேர் புனித மக்காவுக்கு செல்ல முடியும் என்று துருக்கி அறிவித்துள்ளது. சிரியா ஊடாக செல்லும் இந்த ரயில் போக்குவரத்து சேவை பிராந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
IT IS HIGHLY APPRECIATED. AL HAMDULILLAH. AFTER A PROLONGED INTERVAL, ATLEAST THE PLAN IS EXECUTED NOW. CONNECTING THE MUSLIM NATION FROM CONTINENT TO CONTINENT.
பதிலளிநீக்குBUT THERE SHOULD BE VERY MUCH ALERT TO TACKLE AND THWART ANY ALIEN TERROR PLOT.
MOHAMED THAMEEM