Breaking News
recent

அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல்; சமுதாய ஒற்றுமைகாக போட்டியிலிருந்து விலகிய வேட்பாளர்கள்! அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாதின் முதல் வெற்றி!!


 "அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" இன்று காலை மரைக்கா பள்ளியில் கூடியது. தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேலத்தெரு, மிஸ்கீன் பள்ளி சங்கம் தவிர ஷம்சுல் இஸ்லாம் சங்கம், கீழத்தெரு சங்கம், தரகர் தெரு சங்கம், நெசவுத் தெரு சங்கம், கடல்கரைத் தெரு சங்கம் ஆகிய 5 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, அப்துல் லத்தீப் ஆலிம் அவர்கள் தலைமை ஏற்க, ஷம்சுல் இஸ்லாம் சங்க துணைத் தலைவர்-ஹாஜி.எம்.எஸ். ஷிஹாபுத்தீன் அவர்களும் பேராசியர் ஹாஜி.அப்துல் காதர் அவர்களும் வழி நடத்தினார்கள்.


அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.அப்துல் அஜீஸ்,திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஹெச்.அஸ்லம்,மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டிடும் ஆதம்.செய்யத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் முனாஃப் சார்பாக அக்கட்சியின் நரக தலைவர் கே.கே.ஹாஜா அவர்களும் கலந்துக்கொண்டனர்.


சுயட்சை வேட்பாளராக களமிறங்க விரும்பிய ஹாஜா(தரகர் தெரு),எம்.ஐ.அகமது அன்வர் ஆகிய இருவர் மட்டுமே கலந்துக்கொண்டனர். அனைவரும் முறையாக அழைக்கப்பட்டிருந்தும் சிலர் வரவில்லை;தனது சார்பாக யாரையும் அனுப்பவுமில்லை!


ஒற்றுமை பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டுகளைப் பற்றிய பேச்சுகளுக்குபின் ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. சிறுது நேரத்திற்குபின் ஹாஜா(தரகர் தெரு) அவர்களும் எம்.ஐ.அகமது அன்வர் அவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஆதம்.செய்யத் அவர்களும் ”சமுதாய ஒற்றுமைதான் முக்கியம் அரசியலும் பதவிகளும் அல்ல” என்ற தங்களது கருத்தை பதிவு செய்து போட்டியிலிருந்து விலகினர்.அல்ஹம்துலில்லாஹ்! அவர்களின் சமுதாய ஒற்றுமை முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவானாக!

ஷம்சுல் இஸ்லாம் சங்க துணைத் தலைவர் ஹாஜி.எம்.எஸ்ஷிஹாபுத்தீன் அவர்கள் அதிரை பிபிசி இணையத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:
Unknown

Unknown

1 கருத்து:

  1. ஹாஜா(தரகர் தெரு),எம்.ஐ.அகமது அன்வர் இவர்கள் போட்டியில் இருந்து விலகி கொண்டு அல்லாஹ் காட்டிய வழியில் சேர்ந்துகொண்டார்கள்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.