Breaking News
recent

முஸ்லிம்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகள்?


இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மையின சமூகமாக வியாப்பகம் பெறும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றதொரு நிலையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. அப்போது நாட்டில் சிங்களவர் பெரும்பான்மையினராகவும், தமிழர் இரண்டாவது நிலையிலும், முஸ்லிம்கள் மூன்றாவது நிலையிலும் காணப்பட்டனர்.
தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியைத் தாண்டியுள்ளதாக புள்ளி விபரத்தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த அழிவுகள், அதிகமான தமிழர்களின் வெளிநாட்டு புலப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களினால் தற்போது இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையினராக விளங்குவதாக நம்பப்படுகிறது.
சனத்தொகை கணக்கெடுப்பு நேர்மையாக நடைபெறுமாயின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட இப்போது சில மாதங்களுக்குமுன் கூறியிருந்தார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீனும் இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையினர் என்ற தகவல் தமக்கும் கிடைத்ததாகவும், அதற்கு சாத்தியமிருப்பதாகவும் சுட்டிக்காடடினார்.
இருந்தபோதும் தற்போது இலங்கையில் முஸ்லிம்கள்தான் இரண்டாவது பெரும்பான்மையினர் என்கிற செய்தி மகிழ்வுக்குரியதே. (அல்ஹம்துலில்லாஹ்)
ஆனாலும் இங்கு ஆபத்தும் நிறைந்திருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கை முஸ்லிம் உம்மா மீது தற்போது சிங்கள கடும்போக்காளரின் பார்வை திரும்பியுள்ளது. இதன் விளைவுதான் ஆளடையாள அட்டைக்கு தொப்பி அணிந்து படம் பிடித்தல் பற்றிய சர்ச்சை, குர்பான் கொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள், அநுராதபுர தர்கா தகர்ப்பு, சிங்கள மொழிமூல பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகள் எதிர்கொள்ளும் திட்டமிட்ட சவால்கள் மற்றும் தம்புள்ள பள்ளிவாசலை சேதப்படுத்தியமை என பட்டியல் நீளமானது.
முஸ்லிம்கள் அதிகமான பிள்ளை பெறுகின்றனர், எனவே சிங்களத் தாய்களும் அதிகமான பிள்ளைகளை பெற்று தாய் நாட்டை பாதுகாக்க முன்வாருங்கள் என சிங்கள வீரவிதான மற்றும் மற்றும் ஜாதிக்கஹெல உறுமய மேற்கொண்ட பிரச்சாரங்களை நாம் மறந்துவிட முடியாது. சிங்களத் தாய்மார்கள் அதிகம் பிள்ளைகள் பெறும்போது அவர்களுக்கு விருது வழங்கப்படும் சம்பவங்கள் இன்றும் தொடரவே செய்கிறது.
இவ்வாறான நிலையில் இலங்கை சனத்தொகையில் முஸ்லிம்கள் இரண்டாவது நிலையில் காணப்படுகின்றனர் என்ற என்ற செய்தியை சிங்கள கடும்போக்காளர்களினால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே எதிர்காலங்களிலும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள், பாரபட்சங்கள், சீண்டல்கள், தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என சிங்கள கடும்போக்காளர்கள் நெருக்குவாரங்கள் அதிகரிக்கலாம்.
எனவே இவ்விடயத்தில் உடனடியானதும், காலத்திற்கு பொருந்தக்கூடியதுமான வேலைத்திட்டங்கள் முஸ்லிம் சமூகுத்தின் சார்பில் முன்னெடுக்கப்டுதல் அவசியமாகிறது.
இதுவிடயத்தில் அகில இலங்கை உலமா சபை, சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் அமைப்புக்கள், முஸ்லிம் சார்பு ஊடகங்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் உயர் நலனுக்காக செயற்படுவது அவசியமானது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!!
நன்றி – யாழ் முஸ்லிம் வலைத்தளம்
Unknown

Unknown

1 கருத்து:

 1. இலங்கை முஸ்லிம்கள் மிகவும் கவனமாக

  செயல் பட வேண்டும் எந்த காரணம் கொண்டும்

  தீவிர வாதம் கையில் எடுக்காமல் ..அமைதி யாக

  விட்டுகொடுக்கும் மனப்பான்மை மூலம் அல்லாஹ்

  உதவியால் இலங்கை இஸ்லாமிய நாடாக மாறுவது நிச்சயம்

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.