எகிப்து தேர்தல்: இஹ்வானுல் முஸ்லிமீனின் முர்ஸி தொடர்ந்து முன்னிலை

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில் 13 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய ஓட்டுப்பதிவு நேற்று வரை 2 நாட்கள் நடந்தது. 

ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணி உடனே தொடங்கியது. ஆனால் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே இஹ்வானுல் முஸ்லிமீன் கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் இருப்பதாக அறிவித்துள்ளது. 

எகிப்து அரசியல் சட்டப்படி 50 சதவீதம் ஓட்டுகளை பெறுபவர்தான் அதிபராக முடியும். இந்த தேர்தலில் 50 சதவீத ஓட்டுகளை யாரும் பெற முடியாவிட்டால் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர் புதிய அதிபராக அறிவிக்கப்படுவார். 

இதற்கிடையே முடிவுகள் வருகிற 29-ந்தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. புதிய அதிபர் வருகிற ஜூலை 1-ந்தேதி பதவி ஏற்பார் என தெரிகிறது.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.