தமிழ்நாட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) பாஸ்போர்ட்டை நிரப்ப வரும் பொதுமக்கள் ரூ.100 கட்டினால், அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பிக்கொடுக்கிறார்கள்.
பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு சேவை வழங்குபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.100 கட்டணம் செலுத்தினால் அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பி, பாஸ்போர்ட் அதிகாரியிடம் நேர்முக பேட்டிக்கு நேரம் வாங்கி தரும் ஏற்பாடுகளையும் செய்து விடுவார்கள்.
இதன் மூலம் தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இந்த பணியில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். தற்போது சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
பாஸ்போர்ட் சேவைகளை ஆன்லைனிலும் நேரடியாக பதியமுடியும் http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink
THANKS FOR DETAIL
பதிலளிநீக்கு