Breaking News
recent

அதிரை “மாட்டுக்கறி” விவகாரம்: குற்றச்சாட்டை நிருபித்தார் சேர்மன் அஸ்லம்! தமுமுக நிலை என்ன?

Unknown

Unknown

52 கருத்துகள்:

 1. இனி மேலும் தோண்டி துருவி மாறி மாறி சங்கடபடுவதர்க்கு மாற்றாக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நாம் அனைவரும் மார்க்க அடிப்படையில் விடை காண்பது அவசியம் .

  1 .அந்த மாடு உயிருடன்தான் அறுக்கப்பட்டுள்ளது .அது தவறா ?

  2 .குறிப்பிட்ட அந்த மாடு அறுபடவில்லை என்றால் ஒன்றோ அல்லது இரண்டு தினங்களில் இறந்திருக்கும் ,அந்நிலையில் அது உயிரோடு இருக்கும்போதே அதை அறுத்ததை தவறு என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வருவது மார்க்க அடிபடையில்லா ? அல்லது சொந்த கணிப்பிலா?(இதற்க்கு மு.இ. ஷாஹ்பி காக்கா விளக்கம் அளித்திருந்தார்கள் )

  3 .சினை மாடு என்றாலும் அந்த மாட்டின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது என்ற காரணத்தினால் அதை அறுக்க அனுமதி உண்டா?.

  இதற்க்கான மார்க்க அடிப்படையிலான பதிலை பெறாமல் மீண்டும் மீண்டும் பதில் சொல்லுவதை தவிர்ப்பது நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரியாம இருக்கட்டுமே...
   நீங்க லண்டன்ல இருந்துக்கிட்டு அதிரை விசயம் புரியாது
   இங்க வந்து பாருங்க 110டிகிரி வெயில் அடிக்குது.

   நீக்கு
 2. கேட்டது ஆயிரம் கேள்விகள்,பதிலோ ஒன்றுக்கு
  இது நேர்மையான ஆதாரபூர்வமான பதில் இல்லை .நீங்கள்தானே பதிலை சொல்லிக்கொடுத்து கேள்வியயும் கேட்கிறீர்கள்.சகோ.அஹமது ஹாஜா ஆதாரத்துடன் காட்டிய நகல்கள்களுக்கு தாங்கள் பதிலே சொல்லாமல் சாக்கு போக்கு சொல்கிறீர்கள்.எங்களுக்கு தேவை நகல்களுக்கான பதிலே தவிர வடிவேலு ,சந்தானம் காமெடி அல்ல ..மேலும் இத்துடன் சகோதர்கள் இருவரும் சமுதாய ஒற்றுமைகாக்க ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வாருங்கள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுகாதாரம் மார்க்க விசயத்தில் ஏன் வடிவேலு ,சந்தானம் காமெடி என்று சினிமாவை கொண்டுவருகிறீர்கள்

   நீக்கு
  2. சுகாதாரம் மார்க்க விசயத்தில் ஏன் வடிவேலு ,சந்தானம் காமெடி என்று சினிமாவை கொண்டுவருகிறீர்கள்// சுகாதாரம் மார்க்க விசயத்தில் ஏன் இந்து முன்னனி பஜகா ட்ட லட்டர் வாங்கனும்?

   ஐயா இவர்கள் லாம் இருக்கட்டும். லண்டன்ல வங்கி ஏமாற்று தொடர்பு...சாராய கடையில் வேலை, மட்ட கார்டு வியாபாரம் இப்படியே அதிரை மக்கள் சம்பாதிக்கிரங்கலாமே அதுக்கு இஸ்லாத்த தாவா செஞ்சிங்கலா?
   அத மொதல்ல செய்ங்க

   நீக்கு
 3. மாடு இறந்துப்பொற நிலையில் அறுத்தார்கள் என்றால், அறுக்கப்பட்டது “பசு” மாடு, நமதூரில் மாட்டுக்கரி சாப்பிடுபவர்கள் மிகச்சிலரே (ஆட்டுக்கறி விலை அதிகம், இறைச்சி சாப்பிடனும் என்பதற்காகவே கொஞ்சமேனும் விலைக்குறைந்த மாட்டுக்கறி வாங்குகிறார்கள். அதுலேயும் காளை மாடு மட்டும்தான் சாப்பிடுவார்கள். பசு மாடு அறுத்து சாப்பிடுவது சரியா, இதில் மார்க்கத்தில் விளக்கம் உண்டா? தெளிவு பெறுவதற்காக கேட்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. பிரட்சனைக்கான பதிலா ?
  அஸ்ஸலாமு அலைகும்
  1. மார்கெட்டில் மாடு அறுத்து விபற்து சம்மந்தமான பிரட்சனையில் த.மு.மு.க மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகிய இருதரப்புக்கும் இருந்த கருத்து வேற்றுமைகளையும் அதற்கான வாசகர்களின் கருத்துக்களையும் இத்தளதில் நாம் இது வரையில் பார்த்தோம்.இது சம்மந்தமாக நமது சகோதர இனயதளமான அதிரைபோஸ்டுக்கு .பேரூராட்சி தலைவர் அவர்கள் கொடுதுள்ள பேட்டியில் இந்த விசயதை திசைதிருப்ப முயல்வதை அரிய முடிகின்றது. இந்தபிரட்சனை என்ன? துலுக்காபள்ளி மார்கெட்டில் மாடு அறுத்து விற்கலாமா கூடாதா என்பதா? எப்படிபட்ட மாட்டை அருப்பது என்பதா?, அல்ல பேரூராட்சி தலைவர் வீட்டு திருமனதில் பங்கேற்கவில்லை என்பதா?. த.மு.மு.க வால் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஒரே ஒருபிரட்சனைக்கு (அடிபட்ட மாடு) மட்டும் தான் பதில் சொல்லியுள்ள பேரூராட்சி தலைவர் அதுவும் மார்கப்படி கூடும் என்பதால் அதுவும் மக்கள் எதிர்பார்த்த பதில் அல்ல. மற்றபடி த.மு.மு.க வின் ஏனைய அனைத்து குற்றசாட்டுகளுக்கும் நீங்கள் (பேரூராட்சி தலைவர்) ஏன் பதில் சொல்லவில்லை அப்படியானால் மற்றகுற்றச்சட்டுகளை நீங்கள் ( பேரூராட்சி தலைவர்) தவறு என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா? மக்கள் எதிர்பார்த்த பிரட்சனைக்கான பதிலை சொல்ல மறுப்பதன் மூலம் நீங்கள் தான் (பேரூராட்சி தலைவர்) பொய்யர் என்றால் தவரில்லை தானே?
  2.மூன்றாவது நபரின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சொன்ன தலைவரின் செயல் நகைப்புக்குரியதாய் உள்ளது. எனேன்றால் அவர் கேள்வி கேட்பது த.மு.மு.க விடம் தான் அந்த இயகதில் இவர்சொன்ன மூன்றாவது நபறும் நிர்வாகியாக உள்ளார் எனவே நீங்கள்(தலைவர்)விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரும் கேள்வி கேட்கத்தான் செய்வார் அதற்கு பதில் சொல்வது உங்கள்(தலைவவர்) மீது தார்மீக கடமை தானே
  3.மூன்றா வது நபரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்ற தலைவர், தனக்கு சதகமான விசயம் என்று கருதி மூன்றாம் நபர்சொன்ன விசயமான ஷாஹுல்ஹமீது தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிகை எடுக்கப்படும் என்று சொன்ன அதற்கு மட்டும் பதில் அளிதுள்ளதன் மூலம் தான் ஒரு சந்தர்பவாதி என்று நிருபிக்கின்றார் தானே
  4. தலைவர் வீட்டு திருமனத்துக்கு யார்யார் வரவில்லை என்பதெல்லம் அதிரை பேரூராட்சியின் பிரட்சனையோ பொதுமக்களின் பிரட்சனையோ அல்ல எனவே இந்த பதிலையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை தானே
  5.தலைவர் சொல்லியுல்ல ஒரேஒரு பதிலையும் எற்பதற்கு ஐயமாக உள்ள்து.ஏனென்றால் அதுவும் தலைவர் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் தான் எந்தமதிரியான (தனக்கு சாதகமான) பதிலை எதிர்பாற்கின்றாறோ அந்த பதிலை வரவலைகும் விதத்திலேயே தலைவரின் கேள்வி அமைந்துள்ளது அதிலும் மாடு விற்றவர் மாடு இறக்கும் தருவாயில் இருந்தது என்று சொல்கின்றார்.ஆனால் தலைவர் பேட்டியில் ஒருஇடதில் அவரிடம் மாடு செத்துவிட்டது தானே என்று சொல்கின்றார்.இது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது தானே
  எனவே பிரச்சனைகள் ஒன்று அதற்கான பதிலோ வேருஒன்றுமாக இறுப்பது பேரூராட்சி தலைவர் மீதான த.மு.மு.க வின் குற்றச்சாட்டுகள் அனைத்தயும் நியாய மானதுதான் என்று எற்றுக்கொள்ளும் விததில் உள்ளது தானே
  வஸ்ஸலாம்

  பதிலளிநீக்கு
 5. தம்பி புகாரிக்கு.
  இந்த விஷயத்தில் அண்ணனும் தம்பியும் கங்கணம் கட்டிக்கொண்டு பேட்டிகளாகவும் கருத்துக்களாகவும் தெரிவிக்கும் நீங்கள் சித்தீக் பள்ளி விவகாரம் சாந்தி சிரிக்கும் போது எங்கு சென்றீர்கள்?

  சந்தேகம்கங்கள்.

  இதுல எங்க குடும்பமும் பங்கெடுத்துள்ளது.
  அந்த பள்ளிவாசல் இடத்தில் எங்கள் சொந்தங்களும் வீடு கட்ட உள்ளார்கள் .
  அந்த வீட்டையும் நாங்களே காண்ட்ராக்ட் எடுத்து கட்ட இருக்கிறோம் .

  வேணாம் இன்னும் இருக்கு தனி மடலில் சந்திப்போம் இன்ஷா அல்லா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஸ்ஸலமு அலைகும்
   அதிரை நியூஸ்அதிரைநியூஸ் என்ற பெயரில் எனது கருத்துக்கு பதில் சொல்லியுல்ல நீங்கள் யார் என்று எனக்கு தெரியவிலை ஆனால் நீங்கள் என்னை தம்பி என்றதால் அந்த உரிமையில் காகா என்கின்றேன் வருங்காலதில் உங்களை யார் என்று எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.நம் அனைவருக்கும் இறைவன் நேரான அருள் புரியட்டும் நிற்க்க. என்னுடைய கருத்து சம்மந்தப்பட்ட பிரச்சனையேய் பற்றியதுதான். ஆனால் தாங்களும் பேரூராட்சி தலைவரை போன்று பிரட்சனையெய் திசை திருப்புகின்றீர்கள். சம்மந்தப்பட்டதுக்கு கருத்து சொல்லுங்கள் அதுதான் ஆரோக்கியமானது என்பது உங்களுக்கும் தெரியும் என நம்புகின்றேன். என்றாலும் நீங்கள் கேட்டதால் சித்தீக் பள்ளி பிரட்சனையில் பள்ளியின் சுவற்றை கடப்பாறைக் கொன்டு சுவற்றை தாக்கியப்போது சுவற்றில் சாய்ந்துக் கொன்டு அதைதடுத்தது என் காகாவும் வேறு ஒன்றிரன்டு நபர்கள் மட்டும் தான் காகா. இதுவும் நீங்கள் கேட்டதால் தான் சொல்கின்றேன். பிரட்சனையெய் திசைதிருப்ப முயலவில்லை. வஸ்ஸலாம்

   நீக்கு
 6. http://www.satyamargam.com/1941[url][/url]

  அஸ்ஸலாமு அலைக்கும்.

  கேள்வி : உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட ஒட்டகம்/ஆடு/மாடு/பறவை போன்றவை விபத்திலோ வேறு காரணங்களினாலோ அடிபட்டிருந்தால் அவற்றை இறப்பதற்கு முன்னர் ஹலாலான முறையில் அறுத்துச் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

  - சகோதரர் ஷாஃபி, மின்னஞ்சல் வழியாக  பதில்: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் ...

  அல்லாஹ் நமக்கு உண்ண அனுமதிக்கும் விலங்குகளில்/பறவைகளில் மூன்று அம்சங்கள் ஒன்றோடொன்று கலந்திருக்க வேண்டும்.
  1. அனுமதிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
  2. உயிரோடிருக்க வேண்டும்.
  3. அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டவையாக இருக்க வேண்டும்.

  இவற்றை விளக்கும் இறைவசனம்:
  "(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாத பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டது, கழுத்து நெறித்துச் செத்தது, அடிபட்டுச் செத்தது, கீழே விழுந்து செத்தது, கொம்பால் முட்டப்பட்டுச் செத்தது, (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தது ஆகியவை உங்கள் மீது ஹராமாக்கப்பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்ட விலங்கு/பறவைகளில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர ..." (5:3).

  மேற்கண்ட வசனம், உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளேயானாலும் அவை விபத்தினால் இறந்து விடுமாயின் அவற்றின் இறைச்சியை உண்ணக்கூடாது என நேரடியாகத் தடுக்கிறது. ஆகவே, உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகளுள்
  1. தானாகச் செத்தவை
  2. விபத்தினால் செத்தவை
  3. உயிரோடிருந்த நிலையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவை
  ஆகியவற்றை உண்பதற்கு அனுமதில்லை என்று விளங்குகிறோம்.

  உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் விபத்தினால் காயமடைந்த நிலையில் இறக்கும் தருவாயில் இருக்குமாயின் அவற்றை முறைப்படி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உண்ணலாம் என்பதற்கு நபிமொழிகளில் சான்று உள்ளது!

  'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். "நபி(ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்கும்வரை சாப்பிடாதீர்கள்!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதைச் சாப்பிடுமாறு கூறினார்கள்.
  - அறிவிப்பாளர் கஅபு இப்னு மாலிக் (ரலி) (நூல்கள் - புகாரி 2304, 5502; இப்னுமாஜா; அஹ்மத்; முவத்தா மாலிக்).

  கேள்வியில் கேட்டுள்ளபடி செத்துவிடும் என்கிற நிலையிலுள்ள விலங்குகளை/பறவைகளை அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து, அவற்றைப் பயனுள்ள, ஹலால் உணவாக ஆக்கிக்கொள்ளலாம்.

  மேலும், வேட்டைக்குப் பழக்கப்படுத்தப்பட்ட வேட்டைநாய்/சிறுத்தை போன்ற விலங்குகளும் ராஜாளி போன்ற பறவைகளும் வேட்டைக்கு அனுப்பப்படும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்பட்டு, அவை நமக்காக வேட்டையாடிய ஹலாலான விலங்குகள்/பறவைகள் உயிரோடிருந்தாலும் செத்துவிட்டாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி உண்பதற்கு ஆகுமானவையாகும் (இறைவசனம் 5:4இன் சுருக்கக் கருத்து). இதுவே இஸ்லாம்!

  (இறைவன் மிக்க அறிந்தவன்)

  பதிலளிநீக்கு
 7. ---
  இந்தக் காணொளியின் தொடக்கத்தில் ௦௦:48 வினாடியிலிருந்து ௦1:00 நிமிடம் வரை,
  மகிழங்கோட்டை-கீழக்காடு பகுதி, வடிவேல் என்பவரிடம், "நீங்க என்னிடம் தகவல் ஒன்னு சொன்னீங்க, என்னுடைய பசு மாடு ஒன்னு ரயில்ல அடிபட்டு அரை உயிராய் இருக்கும்போது நான் ஆயிரம் ரூபாய் விலை பேசி விற்றேன், அந்தக்கறியை அவர் வெட்டி விற்றார் என்று..." என அஸ்லம் சொல்லிகொடுக்க, விற்றதாகச் சொல்லப்படும் பெரியவர் ஆமோதிக்கிறார்.

  மாறாக,

  காணொளியின் 02:55 - 23:59 நேரத்தில் நாலே வினாடிகளில்,
  "அப்ப நீங்க ரயில்ல அடிபட்ட செத்த மாட வித்தது உண்மை" என்று அஸ்லம் சொல்லிக் கொடுக்க விற்றதாக சொன்னவர் "உண்மை" என்று மட்டும் அடுத்த வினாடியில் (02:59-03:00) சொல்கிறார்!

  எது உண்மை?
  அரை உயிராய் விற்றதா அல்லது செத்த மாட்டையா? இரண்டையும் சொல்லிக் கொடுப்பது அஸ்லம்! நேரெதிரான இரண்டுக்கும் தலையாட்டுவது மகிழங்கோட்டை-கீழக்காடு பகுதி, பெரியவர் வடிவேல்!!

  அரை உயிராய் இருந்த பசுமாடு ஒன்று மற்றும் செத்த மாடு மற்றொன்று. ஆக மொத்தம் இரண்டு வெவ்வேறானவையா?

  பொய் சொல்பவன் அரை-குறை அறிவுள்ள மனிதர்களிடமே மாட்டிக் கொள்ளும்போது பேரறிவாளனான அல்லாஹ்விடம் தப்புவது எப்படி?

  தவறிழைப்பது மனிதர்களின் இயல்பு. செய்த தவறை மறைக்க தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருப்பவனை அல்லாஹ் மன்னிப்பது கடினம்.

  இதற்கு மேலும் தவறிழைக்காமல் தன்னிலை உணர்ந்து, குறித்த சம்பவத்தில் இஸ்லாமிய இயல்பைப் பேணி ஹலாலான மாட்டுக்கறி அதிரையில் கிடைக்க உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கும் சாவன்னாவுக்கும் மற்ற அனைவர்க்கும் உரிமம் கிடைக்கச் செய்வது அ.பே.த. அஸ்லத்தின் கடமை.

  அதே சமயம், இஸ்லாத்தில் தடையோ குற்றமோ அல்லது சட்ட விரோதமோ இல்லாத நிலையில், தனது வியாபாரம் பாதிக்கும் என்று அஞ்சி "ரயிலில் அடிபட்ட மாட்டை அறுத்து விற்கவில்லை" என்று சாவன்னா பொய் சொல்லத் தேவையில்லை. "உணவளிப்பவன் அல்லாஹ்; அதை எவனாலும் தடுக்கவியலாது" என்பதை நினைவில் கொள்ளவும்.

  துப்பறியும் பத்திரிக்கையாளன் அ.போஸ்ட் அ.ர.ஹிதாயத்துல்லாஹ், அநியாயப் பரப்புரைகளுக்கு துணை நிற்காமல் குறித்த சம்பவத்தில் நல்லிணக்கம்-ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. ஷாஃபி காக்கா இதுக்கும் கொஞ்சம் விளக்கம் தாங்க..
  அதாவது ஒரு நாட்டுக்கு டூரிஸ்ட் விசா வாங்கி கொண்டு அந்த நாட்டிலேயே சட்டவிரோதமாக தங்கி வேலை செய்யலாமா?
  இது ஒரு நம்பிக்கை துரோகம் இல்லையா?
  ஒருவர் இந்தியாவில் விசா எடுபதர்க்கு எவ்வளவோ பொய்கள் கூறி நான் ஒரு பிஸ்னஸ் மேன் எனக்கு விசா வேண்டும் என் வங்கிகணக்கில் இவ்வளவு பணமுள்ளது என பம்மாத்து காட்டி விஸா வாங்குவது மார்க்க சட்டப்படி கூடுமா?
  இந்த மோசடியால் சம்பாதிக்கும் பணம் ஹலாலா ஹராமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் விடுங்க பாஸ் . மார்க்க அடிப்படையில் குடும்பத்தை பிரிந்து எவ்வளவு நாள் இருக்கலாம்.

   நீக்கு
  2. அதிரை மஜ்லீஸ் பெயரில் எழுதும் அஸ்லம் அவர்களின் பெரிய காக்கா மகன் முபீன், ஒங்க குடும்ப தொழிலே அது தானே... நீங்க இதை பற்றி பேச எந்த அருகதையுமில்லை...

   ச்சீ சூடு சுரனையில்லாதவனுக...

   நீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 10. அஸ்ஸலாமு அலைக்கும்
  செய்துகொண்டிருக்கும் வியாபாரத்தை, சுத்தமாக, முறைப்படி அரசு அனுமதி பெற்று செய்ய சொல்கிறார்கள்.
  அதற்க்கு - ஹதீஸ் தெரியும் என்பதால் - ஹதீஸை சொல்லி, மார்கத்தை இழுத்து தவறுக்கு துணை போக முயல்கிறார்கள்.
  அடிப்பட்ட பிராணியை அதாவது கோழி சேவல் போன்றவற்றை, அதன் உரிமையாளன் அறுத்து தானே தின்பான் தனது குடும்பத்தினருக்கு கொடுப்பான்.
  ஆனால் அடிப்பட்ட மாட்டை - குறைந்த விலைக்கு வாங்கி மக்களுக்கு உண்மையை சொல்லாமல் விற்பதற்கு இதுபோன்று ஹதீஸ்களைகளையும், குர் ஆன் வசனங்களையும் துணைக்கு அழைப்பது ஏன்?
  ஒருவரை எதிர்க்கவேண்டும் என்பதற்காக - தவறுக்கு துணை போவது அதுவும் அல்லாஹ்வின் வேதத்தை துணைக்கு அழைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்தால் நல்லது..இல்லையெனில் ஒவ்வொருவரும் எல்லாவித தவறும் புரிந்து விட்டு தமக்கு தேவையான - ஹதீஸ்கள் குர் ஆன் வசனங்களை திரிக்கும் ஆபத்து உள்ளது.

  பதிலளிநீக்கு
 11. மேலும், அதிரை சேர்மனுடன் உரையாடியவர் ஒரு கிராமவாசி...அவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அதாவது பேட்டி அளிப்பது போன்றவை புதிய அனுபவமாக இருக்கும்...இதில் போய் வியாக்கியானம் புரிந்து - அதில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது இவர்களின் நோக்கம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காகா நீங்க சென்னையில் இருந்து ஊர்வந்து பாருங்க உன்மையான் நிலவரம் புரியும். மேலோட்டமா பாக்காம உன்மை என்னாவா இருக்கும் என்று தீர விசாரித்து பாருங்க நானும் என் தோழர்களும் அவருக்கு ஆதரவா இருந்தோம்தான். நான் எந்த இயக்கமும் இல்ல.
   பொது கருத்து வரும் போது தீரவிசாரிச்சு முடிவு எடுங்க

   நீக்கு
 12. அதிரை செய்திகளை படிக்கும் பெரியோர்களே, சிறுவர்களே, உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

  <<<<<<<<<<<<<
  சகோதரர் மு.இ. ஷாஃபி சொன்னது....

  http://adiraipost.blogspot.com/2012/07/blog-post_03.html
  இந்தக் காணொளியின் தொடக்கத்தில் ௦௦:48 வினாடியிலிருந்து ௦1:00 நிமிடம் வரை,
  மகிழங்கோட்டை-கீழக்காடு பகுதி, வடிவேல் என்பவரிடம், "நீங்க என்னிடம் தகவல் ஒன்னு சொன்னீங்க, என்னுடைய பசு மாடு ஒன்னு ரயில்ல அடிபட்டு அரை உயிராய் இருக்கும்போது நான் ஆயிரம் ரூபாய் விலை பேசி விற்றேன், அந்தக்கறியை அவர் வெட்டி விற்றார் என்று..." என அஸ்லம் சொல்லிகொடுக்க, விற்றதாகச் சொல்லப்படும் பெரியவர் ஆமோதிக்கிறார்.

  மாறாக,

  காணொளியின் 02:55 - 03:59 நேரத்தில் நாலே வினாடிகளில்,
  "அப்ப நீங்க ரயில்ல அடிபட்ட செத்த மாட வித்தது உண்மை" என்று அஸ்லம் சொல்லிக் கொடுக்க விற்றதாக சொன்னவர் "உண்மை" என்று மட்டும் அடுத்த வினாடியில் (02:59-03:00) சொல்கிறார்!

  எது உண்மை?

  அரை உயிராய் விற்றதா அல்லது செத்த மாட்டையா? இரண்டையும் சொல்லிக் கொடுப்பது அஸ்லம்! நேரெதிரான இரண்டுக்கும் தலையாட்டுவது மகிழங்கோட்டை-கீழக்காடு பகுதி, பெரியவர் வடிவேல்!!>>>>>>>>>>>>>>>>>

  அன்பர் ஷாஃபி குறிப்பிட்ட இந்த இரட்டை நிலைபாடை சரிவர கேட்காத சென்னையிலிருந்து ஜால்ரா தட்டும் பே. த. ம-யோகி நண்பருக்கு, அமீரகத்திலிருந்து சினிமா டயலாக் அடிக்கும் பே. த. நண்பர், அமெரிக்காவிலிருந்து அறிந்தோ அறியாமலோ தவறி பின்னூட்டமிடும் பே.த அண்ணன் போல் இருப்பவருக்கும், மற்ற பே. த தக்லீத் செய்துள்ள அனைத்து ஆஹா ஓஹோ அபிமானிகளுக்கு இது ஒர் செட்டப் என்பது புரிந்திருக்குமோ இல்லையோ ஆனால் இந்த காணொளியை பார்த்த சாதாரண மக்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் இது ஒரு செட்டப் வேலை என்று.அதிரை பே.த. பிடித்த பீடை இந்த மாட்டுகறி சமாச்சாரம்... இந்த பீடைக்கு காரணம் வெக்கங்கேட்டுத்திரியும் பேரூராட்சி தலைவரின் பெரும் மதிப்பிற்குறிய ஆலோசர்கள் (அள்ளக்கைகள்). இவர்களை பற்றி அதிர்ச்சி தகவல்கள் விரைவில் விபரங்களுடன் வெளிவர இருக்கிறது.பாவம் இந்த பேரூராட்சி தலைவர் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களை ஆலோசகர்களாக்கிக்கொள்ளாமல் இந்த அள்ளக்கைகளின் வலையில் அறிந்தோ அறியாமலோ சிக்கி, தான் என்ன செய்கிறேன் என்று அவருக்கு தெரியவில்லை.. பாவம் நம்பி ஓட்டுப்போட்ட மக்கள்.

  Chennai - 600 001

  பதிலளிநீக்கு
 13. நிஸார் அஹமது5 ஜூலை, 2012 7:58 pm
  மேலும், அதிரை சேர்மனுடன் உரையாடியவர் ஒரு கிராமவாசி...அவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அதாவது பேட்டி அளிப்பது போன்றவை புதிய அனுபவமாக இருக்கும்...இதில் போய் வியாக்கியானம் புரிந்து - அதில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது இவர்களின் நோக்கம்..
  ----------------------------------------------------------------
  நிசார் காக்கா சலாம் ,
  ஓகே அந்த கிராமவாசிக்கு தெரியாது சரி .அஸ்லம் காக்கவும் செத்தது என்று ஏன் சொல்ல வேண்டும் ?

  பதிலளிநீக்கு
 14. //நிஸார் அஹமது5 ஜூலை, 2012 7:58 pm

  மேலும், அதிரை சேர்மனுடன் உரையாடியவர் ஒரு கிராமவாசி...அவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அதாவது பேட்டி அளிப்பது போன்றவை புதிய அனுபவமாக இருக்கும்...இதில் போய் வியாக்கியானம் புரிந்து - அதில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது இவர்களின் நோக்கம்..//

  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் தம்பி...இதெல்லாம் உங்க வேலையே இல்லையே..

  புது படம் ஏதாவது ரிலீஸாயிருக்கும் போய் ஒங்க தளத்துல விமர்சனம் எழுதுங்க... இல்லாட்டி பழைய ரஜினி படத்தை பற்றி விமர்சனம் எழுத்துங்க... ஜால்ரா அடிக்க ஆள் நிறைய அங்கே இருக்கு...

  இந்த விசயத்தில் கருத்துச்சொல்ல ஒங்களுக்கு எந்த தகுதியுமில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. சகோதரர் அஹமத் பயாஸ் என்ற நண்பர் விளக்கம் அளிக்க முடியாமல் கோபத்தில் அனைவரையும் வாய்க்கு வந்தபடி எழுதியிருப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
   உண்மையை சொல்லுகிறவன் பொறுமை காப்பான்...
   தன்னை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புபவர்கள் கோபத்தில் கத்துவார்கள்....அதைப்போன்று அஹமத் பயாஸ் என்பவருடைய நிலையை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்...

   நீக்கு
  3. //நிஸார் அஹமது5 ஜூலை, 2012 7:58 pm

   மேலும், அதிரை சேர்மனுடன் உரையாடியவர் ஒரு கிராமவாசி...அவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அதாவது பேட்டி அளிப்பது போன்றவை புதிய அனுபவமாக இருக்கும்...இதில் போய் வியாக்கியானம் புரிந்து - அதில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது இவர்களின் நோக்கம்..//

   தம்பி நிஸாரு…
   கிராமவாசியாக இருந்தாலும் பேட்டி எடுக்கக்கூடியவர் ஒரு நடுநிலையான பத்திரிக்கையாளனாகவோ அல்லது இணையதளத்தில் உள்ள கேடுகெட்டவனாகவோ இருந்திருந்தால் கூட பரவாயில்லை, பேட்டி எடுப்பவர் உங்கள் நண்பர் நம்முடைய மாண்புமிகு பேரூராட்சி தலைவர் S.H. அஸ்லம் அவர்கள். இது என்ன பேட்டியா… சின்ன புள்ளைளுவளுக்கு அ, ஆ … ABCD…. 1234 சொல்லிக்கொடுகிறது மாதிரியில ஈக்குது. சொல்லும் சம்பவம் உண்மை என்றிருந்தால் வடிவோலு அண்ணன் அவர்கள் தயக்கத்துடன் சொல்ல வேண்டியதில்லை, சம்பவத்தை தொடர்ந்து சொல்லியிருக்க வேண்டும். ஒரு வார்த்தை ஒரு வார்த்தையாக கேள்விகளுக்கு பதிலளிப்பதிலிருந்து தெரியவில்லையா இது ஒர் செட்டப் என்று. அடிப்பட்ட மாட்டை வித்தியலா? என்று ஒரு முறையும் அடிபட்டு செத்த மாட்டை தானே வித்தியலா? என்று இரண்டாவது முறையும் கேட்கும் கேள்விகளுக்கு, ஆமாம் உண்மை என்று தலையாட்டும் வடிவேலு அண்ணனின் சொல்லிலிருந்து தெரிகிறது இது முழுக்க முழுக்க செட்டப் வேலை என்று. கேள்விகள் அனைத்தும் true or false question answer மாதிரி இருக்கும் போதே அறிவுள்ளவன் எவனுக்கு தெரியும் இது ஒரு சேட்டப் வேலை என்று. இந்த சேட்டப் வேலைக்கு அனுதாபத்துடன், ரொம்பத்தெளிவாக நீங்கள் வக்காளத்துவாங்கியது நீங்கள் சினிமா விமர்சனத்துக்கு என்று மர்மயோகி என்ற தளத்தில் உள்ள உங்கள் தெளிவான சினிமா விமர்சனங்களே யாபகத்திற்கு வந்தது அதற்காக தான் அந்த கருத்து போட்டேனே தவிர, கோபட்டல்ல.. ஹி ஹி ஹி..

   நீக்கு
 15. //நிஸார் அஹமது5 ஜூலை, 2012 7:58 pm

  மேலும், அதிரை சேர்மனுடன் உரையாடியவர் ஒரு கிராமவாசி...அவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அதாவது பேட்டி அளிப்பது போன்றவை புதிய அனுபவமாக இருக்கும்...இதில் போய் வியாக்கியானம் புரிந்து - அதில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது இவர்களின் நோக்கம்..//

  தம்பி நிஸாரு,
  இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... இது மாதிரி செட்டப் பேட்டி கொடுப்பது என்பது அண்ணன் வடிவேலுவுக்கு புதுஅனுபவம் என்பது உண்மை தான்...

  தகவலுக்காக... மாட்டுகறி வியாபாரி சாகுல் ஹமீதுவிடம் கொஞ்சம் உரசிப்பார்க்கும் முயற்சியில் அண்ணன் வடிவேலு கடந்த இரண்டு மூன்று நாட்களாக அதிரை துலுக்கா பள்ளி மார்க்கெட்டில் வந்து நிற்பதை பார்த்தால் அடுத்த பேரூராட்சி தலைவர் தேர்தல்ல நம்ம அண்ணன் வடிவேலு நிற்க போறாரு போல தெரியுது..ஹ்ஹி.. ஹ்ஹிஹீ...

  பதிலளிநீக்கு
 16. காணவில்லை காணவில்லை
  இந்த தளத்தில் பிநூடம்மிட்டு வந்த மார்க்க அறிஞர்(?) ஷாபி அவர்களை காணவில்லை
  காணாமல் போன அன்று நீல நிர சட்டை அணிந்திருந்தார் மேலும் இந்த தளத்தில் அவ்வபோது மார்க்க சம்பந்தமான சில வார்த்தைகளை ஒரு சிலருக்கு சாதகமாக பதிந்து வந்தவர்.
  இவரை பற்றி தகவல் தெரிந்தால் பின்வரும் நம்பருக்கு தகவல் தர வேண்டுகிறோம்.

  பிகு: உங்களது எழுத்தை காணாமல் கோடானு கோடி மக்கள் மார்க்க அறிவிள்ளமாலும் உணவிருந்து உன்ன முடியாமலும் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள் எனவே நீங்க எங்கிருந்தாலும் பரவாயில்லை நீங்கள் செய்த தவறை எல்லாம் நாங்கள் மன்னித்து விட்டோம் எனவே நீங்கள் உடனடியாக திரும்பி வர வேண்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரை மஜ்லிஸ் பெயரில் எழுதும் அஸ்லம் அவர்கள் காக்கா மகன் முபீன், பதிவுக்கு தொடர்புடைய கருத்தை பதியுங்கள்... உங்க சாச்சா அண்ணன் வடிவேலுவுக்கு எடுத்த பாடம் நல்லா இருந்துச்சா ? இல்லையா? இத உட்டுப்புட்டு பதிவுக்கு சம்பந்தமில்லாமல் நீ ஏன் கக்கூசுக்கு போனா? நீ ஏன் அம்மனமா இருந்தா? என்ற ஸ்டைலில் கேள்விகள் கேட்டு ஒங்க சாச்சா மேல் உள்ள உள்ள விசுவாசத்தை காட்டிக்கிட்டே இருக்கியலே...

   முதல்ல உங்க சாச்சா, அதான் எங்க மாண்புமிகு சேர்மன் அவர்கள் எடுத்த ஸ்பெசல் கிளாஸ் பத்தி கருத்துச்சொல்லுங்க தம்பி....அப்புறம் ஷாஃபி, ஹனபி, மாலிக்கி, ஹம்பலி சட்டமெல்லாம் பேசுவோம்.

   நீக்கு
 17. மாட்டுகறி பீடையின் சுருக்கம்…

  மாட்டுகறி வியாபாரி சாகுல்ஹமிது தனக்கு போரூராட்சி நிர்வாகத்திலிருந்து மாடு அறுக்க கறி விற்க தடை செய்ய முயற்சி செய்து, நோட்டீஸ் ஒட்ட வந்து தொந்தரவு செய்கிறார்கள், லைசன்ஸ் கேட்டால் தரமாட்டாங்கிறாங்க… இதற்கு இந்து முன்னனி பிஜெபி லெட்டார்களை பேரூராட்சி வைத்து தடை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று ஒரு பேட்டி கொடுத்தார், இது அ.எக்ஸ்பிரசு, அ.போஸ்ட், அ.நிருபர் போன்ற தளங்களில் வெளிவந்தது. இது முழுக்க முழுக்க மாடு அறுப்பது, மாட்டுகறி விற்பது தொடர்பான ஒர் வியாபாரியின் குமுரலே தவிர இது ஒரு கட்சியின் பேட்டியல்ல.

  தமுமுக காரனுவொ மாட்டுக்கறி வியாபாரத்தை தடை செய்ய எல்லா முயற்சிகளையும் செய்த மாண்புமிகு பேராட்சி தலைவரை கண்டித்து போஸ்டர் அடித்து வெளியிட்டனர். அரசியல் என்று வந்துவிட்டால் வாழ்த்து போஸ்டர், கண்டன போஸ்டர் எல்லாம் ஜகஜம் என்று எடுத்துக்கொள்ள அனுபவமில்லாத அஸ்லத்திற்கு கோபம் ஏற்பட்டுவிட்டது.

  இதை தொடர்ந்து மாண்புமிகு போரூராட்சி தலைவர் தானாகவோ ஒரு பேட்டி (அறிக்கை) வெளியிட்டார். இதுவே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். இவர் மாட்டுக்கறி தொடர்பாக மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தால் பரவாயில்லை தேவையில்லாமல் சிறுபிள்ளைதனமாக அள்ளக்கைகளில் ஆலோசனைகளின் பேரில் பழைய பிரச்சினைகளையெல்லாம் பேசியதே பிரச்சினை பெரிதாக காரணமாகிவிட்டது. இதுவே அவருடைய வண்டவாளம் தண்டவாளங்களை ரோட்டுக்கு கொண்டுவர காரணமாகி போய்விட்டது.

  தமுமுகவை சீண்டியதால் அவனுவ சும்மா வாயை வைத்துக்கொண்டு இருக்காமல் பழைய கதைகளுக்கு, பதிலளித்துள்ளானுவோ..
  தமுமுக காரனுவலோட பதில்கள் ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லாமல் வழக்கம்போல் மாண்புமிகு பேரூராட்சி தலைவர் அவர்களே அவருடைய நெருங்கிய நண்பர் ஒட்டா என்ற பட்டப்பெயருள்ளவரின் உதவியுடனும், வட்டிவியாபாரத்திற்கு துனைபோகும் ஒரு நபருடன் மற்றும் west என்ற பெயரின் தெருவில் உள்ள முக்கிய இரண்டு நண்பர்களின் உதவியுடன் திடீர் என்று தொப்புக்காரர் அப்பாவி அண்ணன் வடிவோவிடம் true or false (சரியா? அல்லது தவறா?) கேள்விகள் கேட்டு ஒரு வீடியோவை எடுத்து போட்டி என்ற பெயரில் அதிரை போஸ்ட் இணையத்தில் வெளியிட்டார்கள், மற்ற தளங்கள் இது போலி, செட்டப் என்பதால் வெளியிடவில்லை போலும். இதற்கு மாண்புமிகு பேரூராட்சி தலைவர் அவர்களின் அவருடைய நெருங்கிய நண்பர் நிஸார் போன்றவர்கள் இதற்கு ஆஹா ஓஹோ எப்படி எங்கள் தலைவர் நிரூபித்துவிட்டார் என்று மார்த்தட்டி தங்களுடைய தக்லீதை உலகுக்கு தங்களின் அறியாமையால் வெளிடுத்திவிட்டார்கள். அதிரை மஜ்லிஸ் பெயரில் எழுதும் முபீன் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் நீ ஏன் கக்கூசுக்கு போனா? நீ ஏன் அம்மனமா இருந்தா? என்று கருத்துப்போட்டு தன் சின்னத்தா செய்த தவறை மூடிமறைத்து திசைதிருப்ப போராடி தன்னுடை குடும்ப விசுவாசத்தை காட்டிவிட்டார்..

  இந்நிலையில் புதிதாக நுழைந்திருக்கும் இந்த அக்ரிகல்சர் சேக்காதியாக்கா… பாவம் இந்த மனுசன் நல்ல பெயருடன் இருந்தார் ஒரு காலத்தில், மாண்புமிகு பேரூராட்சி தலைவர் அஸ்லத்துடன் சேர்ந்ததால் எல்லா மரியாதையும் பாழாக்கிவிட்டார். திரும்பவும் சீனுக்கு வந்து அவமானப்படவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் போல தெரிகிறது. அடித்தல் திருத்தலுடன் வந்திருக்கு இந்த கடித்தம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அந்த சந்தேகங்களை தம்பி நிஸார் இனி எடுத்துரைப்பார்… எங்கப்பா சோடா…

  இனி தம்பி நிஸார் பக்கம் பக்கமா எழுதுவாருருருருருருரு………..

  கொஞ்ச லேட்டா வரட்டா……

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
   பக்கம் பக்கமாக எழுதவோ - அல்லது உங்களைப்போல சோடா குடித்துக்கொண்டு பேசவோ நான் அரசியல் வாதி அல்ல..
   தமுமுகவுக்காக இவ்வளவு மூச்சு வாங்க வக்காலத்து வாங்கும் நீங்க, வடிவேலு அவர்களின் பேட்டி செட்டப் தான் என்றால்...நீங்களும் அவரிடம் ஒரு விளக்கம் கேட்டு கொள்ளலாம்தான்...உண்மையை எல்லாரும் அறிவார்கள்...வடிவேலு தான் செட்டப் செய்துதான் பேட்டி கொடுத்தேன் என்று சொன்னால் - நானும் உங்கள் வாதத்தை ஏற்றுகொள்கிறேன்..

   நீக்கு
  3. தம்பி நிஸாரு,

   என்னுடைய கருத்துக்களை ஒன்று பல முறை படித்துவிட்டு கருத்திடுங்களேன்...

   தமுமுக காரனுவலுவுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று சொல்லுவதை என் கருத்தின் மூலம் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

   என்னுடைய கருத்துக்கள் பேரூராட்சி தலைவர் மேல் உள்ள கோபமல்ல.. அவர் ஊருக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.. ஆனால் அவரை சுற்றியுள்ள அள்ளக்கைகளும், உங்களை போன்ற நெருங்கிய நண்பர்களும் அவரை நெறிபடுத்த தவறிவிட்டீர்கள், ஊர் நலனில் அவரை அக்கரை செலுத்துவதற்கு ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, உசுப்பேத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திவருகிறீர்கள்... இதுவே என்னை போன்ற நடுநிலையாளர்கள் அவரின் தவறை சுட்டிக்காட்டுகிறோம். அள்ளக்கைகளின் வலையிலிருந்து அஸ்லம் வெளிவரவேண்டும்,, நல்ல அரசியல் அனுபவம் மற்றும் நிர்வாக திறன் படைத்தவர்களின் ஆலோசனைகளின் பேரில் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், இதனடிப்படையில் அனைவரையும் அரவணைத்து ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் என்பதே ஊரில் உள்ள அனைவரின் விருப்பம்.

   அவர் கொடுக்கும் பேட்டிகள் அவரின் அனுதாபிகள் வேண்டுமானால் சந்தோசமடையலாம்... ஆனால் இது போன்ற மாறி மாறி பேட்டி கொடுத்து சிறுபிள்ளைதனமான போக்கை பார்க்கும் பொதுமக்கள் அனைவருக்கும் எரிச்சலே வருகிறது. தயவு செய்து ஊருக்கு சென்று பாருங்கள். இவருக்கு ஓட்டு போட்டது கண்டவனுடன் சண்டை போடுவதற்கா? அல்லது ஊருக்கு நல்லது செய்யவா? என்ற கேள்வி ஒவ்வொரு மக்களிடமும் ஏன் சில அஸ்லத்தின் அனுதாபிகளிடமும் எழுகிறது என்பது தான் உண்மை... ஊருக்கு சென்று நிலவரத்தை பார்த்துவிட்டு அஸ்லத்திற்கு ஜால்ரா அடிக்கிறதா அல்லது அஸ்லத்தின் தவறை சுட்டிக்காட்டுவதா என்று முடிவு செய்யுங்கள்...

   இப்போதிருக்கும் மேட்டர்.. மாட்டுகறி தொடர்பானதே...

   1) ஒரு மாடு மார்கெட்டில் அறுப்பதால் சுகாதார சீர்கேடா? அல்லது 50 ஆடுகள், 100க்கணக்கான கோழிகள், 1000 கணக்கான மீன்கள் ஆகியவற்றின் கழிவுகளால் சுகாதார சீர்கேடா? மனசாட்சியுடன் சிந்தியுங்கள்..

   2) அதிரையில் மட்டுகறி வியாபரம் செய்ய தடைவிதிக்க கோரி பட்டுக்கோட்டை பஜக, பட்டுக்கோட்டை இந்து முன்னனியிடமிருந்து, மார்கெட்டின் சுகாதாரத்திற்கு வேட்டுவைக்கும் மீன் வியாரிகளிடமிருந்து, முத்தம்மாள் தெரு நலப்பேரவையிடமிருந்தும் மனு வந்து (வர வைத்து) இதை பொதுமக்களிடமிருந்து வந்துள்ள மனுக்களை அதிரை பொதுமக்களிடமிருந்து வந்துள்ள மனு என்று ஊர் மக்களை ஏமாற்றி தன் அரசியல் காழ்புணர்வை அந்த பாவபட்ட கறிக்கடைகாரர்மேல் காட்டுவது எவ்வகையான நியாயம் என்பதை மனசாட்சியுடன் சிந்தித்துப்பாருங்கள்...

   3) அடிப்பட்ட மாடை அருப்பது மார்க்கத்தில் அனுமதியுள்ளது, அது ஹலால் என்றிக்கும்போது, யாரவது அந்த மாடை அறுத்து விற்பதில் தவறில்லை. உண்பதற்கு ஹலால் என்றிருக்கும் போது காசு கொடுத்துவாங்கியவன் அதை விற்பதற்கு என்ன தடை ஏதுமில்லையே.. நாம் சார்ந்திருக்கு ததஜ சென்னை தலைமையகத்துக்கு சென்று இது தொடர்பான கேள்வியை கேட்டு தெளிவான பதிலை பெற்று இங்கு எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்ளலாமே.. ஏன் உங்கள் மனசாட்சி இதற்கு இடம் தர மறுக்கிறது? மனசாட்சியுடன் சிந்துத்துப்பாருங்கள்.

   4) ஒருவன் ஒரு தவறை என்றோ செய்தான் என்று உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம், அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கிறான் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவன் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.. அடிபட்ட மாட்டை அறுத்து வியாபாரம் செய்வது உங்கள் வாதப்படி தவறு என்று வைத்துக்கொள்வோம்... இன்று மார்கெட்டில் உள்ள சாவுல் ஹமிது அடிபட்டை மாட்டையா ஒவ்வொரு நாளும் அறுத்துவியாபாரம் செய்கிறார்? மனசாட்சியே இல்லையா... சிந்திக்க வேண்டாமா.. ஏன் மாட்டுகறி விசயத்தில் இந்த அக்கப்போர் என்பதில் அஸ்லத்திடம் தெளிவான ஆதாரமில்லாமல் இனியும் அவர் இதில் கவனம் செலுத்தினால் அவமானப்படப்போவது அஸ்லம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிரை முஸ்லீம் சமுதாயமே என்பதில் சந்தேகமே இல்லை...   சும்மா தமாசுக்கு சோடா கேட்டேன்... நான் ஒன்றும் அரசியல்(வி)வாதியல்ல, இயக்க(வி)வாதியல்ல, உங்களை போன்ற வெள்ளிநிலா மற்றும் சினிமா விமர்சன பத்திரிக்கையாளனல்ல... ஒரு சாதரண நடுநிலை சிந்தனையாளன்.

   நம்முடைய சகோதரர்கள் இப்படி குழயடிச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை காண சகிக்காமலே இது போன்று எழுத தோன்றுகிறது. இன்ஷா அல்லாஹ்.. உங்கள் ஆலோசனைகளின் பேரில் நல்ல விசேசங்கள் மன்னிக்கவும் விசயங்களை எழுத முயற்சி செய்கிறேன் நேரம் கிடைத்தால்.. :>)

   அற்புத எழுதாற்றல் உள்ள நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் நம்முடை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை சந்தித்து நெறிபடுத்த முயற்சி செய்யுங்கள்.. நானும் இணையத்தின் மூலம் அவர் தவறு செய்தால் நளினமாக சுட்டிக்காட்ட முயற்சி செய்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

   என் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.. அல்லாஹ் நம் எல்லோரையும் ஒற்றுமை படுத்துவானாக...

   நீக்கு
  4. ஒரே ஒரு வேதனை எதிர்க்கு எதிரி நண்பன் என்பது போலே எல்லா ஊர் நிகழ்வுகளும் உள்ளது.

   தமுமுக vs SDPI ஆதரவு திமுக

   தமுமுக vs ததஜ ஆதவவு திமுக

   தமுமுக vs திமுக ஆதரவு SDPI + ததஜ + சுன்னத ஜமாத் + தர்ஹா கூட்டம் + மவ்லத் கூட்டம் + முக்கியமாக ஊரு ரெண்டுபட்டால் கொண்டாடும் முனாஃபிக்குகள்.

   நான் இப்படி குறிப்பிடுவதால் என்னை தமுமுக காரன் என்று நீங்கள் குறிப்பிட்டால் அது உங்கள் அறியாமை... ஆனால் இது தான் உண்மை..

   ஊருக்கு சென்று உண்மையை அறிந்துவிட்டு தயவு செய்து கருத்திடுங்கள்...

   நீக்கு
 18. பாயஸ் அஹமது அவர்களுக்கு சமிபத்தில் உங்களுடைய பின்னோடங்களை அதிரை போஸ்டில் பார்த்தேன் எதோ அதிரை மஜ்லிஸ் என்கின்ற பெயரில் நான் எழுதுகிறேன் என்று தவறாக நினைத்து கொண்டு கண்டபடி பின்னோட்டத்தில் எனது பெயரை கலங்கப்படுதுகிறிர்கள் .நான் விரும்பி பத்திரிக்கை தொழிலுக்கு வந்தவன் .யாருடைய சிபாரிசு இல்லாமல் என்னுடைய சொந்த முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டு முன் அதிரை எக்ஸ்பிரஸில் இணைந்து பல ஊரு செய்திகளை பதிந்து வருகிறேன்.நான் ஒன்றும் கட்சிக்கோ,இயக்கதுக்கோ ஜால்ரா அடிப்பவன் அல்ல. அதுபோல் யவன பத்தியும் நான் விமர்சனம் பண்ணுவது எழுதுவது என்னுடைய வேலை அல்ல. இதோ என்னுடைய தொலை பேசி என் 9791013168 உங்களுக்கு திராணி இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

  ----mubin (tidings...)

  பதிலளிநீக்கு
 19. வேலை இல்லை யா நண்பர்களே... உங்களுக்கு ஏன் இந்த நேரம் வீண்ணடிப்பு... அல்லாஹ் உங்களை பார்க்கின்றான்.

  பதிலளிநீக்கு
 20. பாய்ஸ் அஹமது அவர்களின் பதிலே கானோம்.ஏன் உங்களுக்கு திராணி இல்லையா? நீங்கள் தமுமுக இயக்கத்துக்கு ஆதராவாக பின்னோட்டம் எழுதுபவரோ ?அல்லது ஷாஃபி என்னும் நபருக்கு ஆதராவாக பின்னோட்டம் எழுதுபவரோ ? நீங்கள் யாராக இருந்தாலும் சரி.போலி பெயர்களில் எழுதாமல் என்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் இல்லையேனில் நான் தற்போது அதிரையில் தான் இருக்கின்றேன்.சந்திப்பதாக இருந்தாலும் சொல்லுங்கள்? நான் வந்து உங்களை சந்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. உங்கள் பின்னூடங்களை சரி பார்த்து அனுமதிகவும்.

  பதிலளிநீக்கு
 22. தம்பி முபீன்..கொஞ்சம் பொறுங்க....
  "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வாங்க...நம்ம சகோதரர் அஹமது பயாஸ் (? ) அல்லது அந்த போலி பெயரில் பின்னூட்டமிட்ட யாரோ ஒரு நபர் அஸ்லம் மேல உள்ள கோவத்துல எல்லார் மேலயும் பாஞ்சி பிராண்டிக்கிட்டு இருந்தாரு..
  .
  இப்போ நீங்க சவால் உட்டவுடன் பாவம்..அவர் என்ன செய்வாரு.....உங்களுக்கு பதில் சொல்வதற்காகவோ அல்லது உங்க கேள்விய ஜீரணிக்க முடியாமலோ எங்கோ மூலையில உக்காந்து "சோடா" குடிச்சுகிட்டு இருக்காரு போல இருக்கு..!!!

  அவர் எழுத்துல திறமை உள்ளவரா தெரியுறாரு...இந்த திறமைய நல்ல வழியில பயன்படுத்தாமா யார் யாருக்கோ ஜால்ரா அடிக்க பயன்படுத்துராறு. திறமைசாலிகள் எல்லாரும் தைரியசாலிகளா இருப்பாங்கன்னு நாம எதிர்பார்க்கலாமா? ..பாப்போம்....லேட்டாதானே வர்ரெண்டு சொல்லி இருக்காரு...லேட்டா வந்தாலும் வருவாரு போல இருக்கு...

  பதிலளிநீக்கு
 23. பாயாஸ் அஹமது அவர்களுக்கு
  மாட்டுக்கறி பிரிச்சினையை மார்க்கப் பிரச்சினையாக்கியோதொடு மட்டுமல்லாமல், தமுமுகவிற்கு முட்டுக்கொடுத்தவர்களுக்கான பதிலைத்தான் நான், கொடுத்தேன்..
  அவர்களுக்கு வால் பிடிப்பதற்காக, எல்லாரையும் பாய்ந்து பிராண்டி எல்லாம் தெரிந்தவர்போலவும், பிரச்சினைக்கு சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டுள்ளீர்கள்..அதில் ஜால்ரா..அல்லக்கைகள் போன்ற வார்த்தை பிரயோகங்கள் நிச்சயம் உங்களுக்குள் எவ்வளவு கோபம் ஒரு தனிப்பட்ட அசலம் மீது இருக்கிறது என்று விளங்குகிறது..
  அதே போல நான் - நண்பர் "ஒட்டா" தமீமிடம் விசாரித்தேன்.
  நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல அவர்கள் வேறு யாரையும் அழைத்து செல்லவில்லை..தமீமும் அசலம் இருவர் மட்டுமே வடிவேலு என்பவரை சந்திக்க சென்றுள்ளனர்..
  அதேபோல நீங்கள் பொய்யாக குறிப்பிட்டுள்ளதுபோல அவர்கள் வேறு யாரையும் அழைத்து செல்லவில்லை...எதையும் தீர விசாரிக்காமல் நீங்கள் எழுதுவதிலிருந்து தெரிகிறது நீங்கள் எப்படிப்பட்ட நோக்கத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று..அப்படி உங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்றால் நீங்கள் அந்த வடிவேலுவை உங்களது தமுமுக நண்பர்களுடன் சென்று சந்தித்து உண்மையை அறிந்து கொள்ளலாம்..இன்னும் தமீம் உங்களுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறார்..அவரது தொலைபேசி எண் 9500694003.
  மேலும் நீங்கள் அஸ்லாத்தின் காக்கா மகன் முபீனையும் தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள்..அவரும் தனது தொலைபேசி என்னை கொடுத்து பேச சொல்லி இருந்தும் நீங்கள் எண் பேச தயாராக இல்லை...உண்மையாளர் என்றால் எந்த பயமும் இல்லாமல் தெளிவாக இருக்கவேண்டும்...அல்லது எல்லாம் தெரிந்தவர்போல எழுதுவதை நிறுத்தவேண்டும்...

  என் வாதம் என்ன வென்று புரியாமலும் என்னை பற்றி எல்லாம் தெரிந்தவர் போல என்மீதும் பாய்ந்து இருக்கிறீர்கள்..
  பேரூராட்சியின் நடவடிக்கை "விற்கப்படும் இறைச்சி முறைப்படி சுத்தமாக அறுக்கப்பட்டு - மக்களை பாதிக்காமல் இருக்கவேண்டும்" என்பதுதான். இதில் ஏன் மார்க்கத்தை இழுத்து தவறுக்கு துணை போகிறீர்கள்..
  ஹலாலாக அறுக்கவேண்டும் எனபது நமது கடமை..அதை அவர் செய்யத்தான் வேண்டும்..அதை அசலம் தடுக்கவில்லை..சுத்தமாக வியாபாரம் செய்..முறைப்படி பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வியாபாரம் செய் என்கிறார்..இதில் என்ன குறை கண்டீர்கள்..
  மாட்டுக்கறி வியாபாரம் செய்ய - அரசின் அனுமதிதான் தேவையே தவிர ..தமுமுகாவின் போஸ்டரோ எதிர்போ தேவை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..விஷயத்தை தெரிந்து கொண்டு எழுதுங்கள்..

  பதிலளிநீக்கு
 24. நிஜார் காக்கா சரியாக சொன்னீர்கள். தமுமுக தனது பக்கம் நியாயம் இருந்தால் வடிவோல் அண்ணான் சொன்னது பொய் என்று நிருபிக்க வேண்டியதுதானே?
  தமுமுகவே தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மொவ்னமாக இருக்கும் போது பயாஸ்,சாபி போன்ற எடுபிடிகள் கூச்சல் போடுவது ஏன்

  பதிலளிநீக்கு
 25. தம்பி நிஸாரு,

  என்னுடைய கருத்துக்களை ஒன்று பல முறை படித்துவிட்டு கருத்திடுங்களேன்...

  தமுமுக காரனுவலுவுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று சொல்லுவதை என் கருத்தின் மூலம் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

  என்னுடைய கருத்துக்கள் பேரூராட்சி தலைவர் மேல் உள்ள கோபமல்ல.. அவர் ஊருக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.. ஆனால் அவரை சுற்றியுள்ள அள்ளக்கைகளும், உங்களை போன்ற நெருங்கிய நண்பர்களும் அவரை நெறிபடுத்த தவறிவிட்டீர்கள், ஊர் நலனில் அவரை அக்கரை செலுத்துவதற்கு ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, உசுப்பேத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திவருகிறீர்கள்... இதுவே என்னை போன்ற நடுநிலையாளர்கள் அவரின் தவறை சுட்டிக்காட்டுகிறோம். அள்ளக்கைகளின் வலையிலிருந்து அஸ்லம் வெளிவரவேண்டும்,, நல்ல அரசியல் அனுபவம் மற்றும் நிர்வாக திறன் படைத்தவர்களின் ஆலோசனைகளின் பேரில் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், இதனடிப்படையில் அனைவரையும் அரவணைத்து ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் என்பதே ஊரில் உள்ள அனைவரின் விருப்பம்.

  அவர் கொடுக்கும் பேட்டிகள் அவரின் அனுதாபிகள் வேண்டுமானால் சந்தோசமடையலாம்... ஆனால் இது போன்ற மாறி மாறி பேட்டி கொடுத்து சிறுபிள்ளைதனமான போக்கை பார்க்கும் பொதுமக்கள் அனைவருக்கும் எரிச்சலே வருகிறது. தயவு செய்து ஊருக்கு சென்று பாருங்கள். இவருக்கு ஓட்டு போட்டது கண்டவனுடன் சண்டை போடுவதற்கா? அல்லது ஊருக்கு நல்லது செய்யவா? என்ற கேள்வி ஒவ்வொரு மக்களிடமும் ஏன் சில அஸ்லத்தின் அனுதாபிகளிடமும் எழுகிறது என்பது தான் உண்மை... ஊருக்கு சென்று நிலவரத்தை பார்த்துவிட்டு அஸ்லத்திற்கு ஜால்ரா அடிக்கிறதா அல்லது அஸ்லத்தின் தவறை சுட்டிக்காட்டுவதா என்று முடிவு செய்யுங்கள்...

  இப்போதிருக்கும் மேட்டர்.. மாட்டுகறி தொடர்பானதே...

  1) ஒரு மாடு மார்கெட்டில் அறுப்பதால் சுகாதார சீர்கேடா? அல்லது 50 ஆடுகள், 100க்கணக்கான கோழிகள், 1000 கணக்கான மீன்கள் ஆகியவற்றின் கழிவுகளால் சுகாதார சீர்கேடா? மனசாட்சியுடன் சிந்தியுங்கள்..

  2) அதிரையில் மட்டுகறி வியாபரம் செய்ய தடைவிதிக்க கோரி பட்டுக்கோட்டை பஜக, பட்டுக்கோட்டை இந்து முன்னனியிடமிருந்து, மார்கெட்டின் சுகாதாரத்திற்கு வேட்டுவைக்கும் மீன் வியாரிகளிடமிருந்து, முத்தம்மாள் தெரு நலப்பேரவையிடமிருந்தும் மனு வந்து (வர வைத்து) இதை பொதுமக்களிடமிருந்து வந்துள்ள மனுக்களை அதிரை பொதுமக்களிடமிருந்து வந்துள்ள மனு என்று ஊர் மக்களை ஏமாற்றி தன் அரசியல் காழ்புணர்வை அந்த பாவபட்ட கறிக்கடைகாரர்மேல் காட்டுவது எவ்வகையான நியாயம் என்பதை மனசாட்சியுடன் சிந்தித்துப்பாருங்கள்...

  3) அடிப்பட்ட மாடை அருப்பது மார்க்கத்தில் அனுமதியுள்ளது, அது ஹலால் என்றிக்கும்போது, யாரவது அந்த மாடை அறுத்து விற்பதில் தவறில்லை. உண்பதற்கு ஹலால் என்றிருக்கும் போது காசு கொடுத்துவாங்கியவன் அதை விற்பதற்கு என்ன தடை ஏதுமில்லையே.. நாம் சார்ந்திருக்கு ததஜ சென்னை தலைமையகத்துக்கு சென்று இது தொடர்பான கேள்வியை கேட்டு தெளிவான பதிலை பெற்று இங்கு எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்ளலாமே.. ஏன் உங்கள் மனசாட்சி இதற்கு இடம் தர மறுக்கிறது? மனசாட்சியுடன் சிந்துத்துப்பாருங்கள்.

  4) ஒருவன் ஒரு தவறை என்றோ செய்தான் என்று உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம், அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கிறான் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவன் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.. அடிபட்ட மாட்டை அறுத்து வியாபாரம் செய்வது உங்கள் வாதப்படி தவறு என்று வைத்துக்கொள்வோம்... இன்று மார்கெட்டில் உள்ள சாவுல் ஹமிது அடிபட்டை மாட்டையா ஒவ்வொரு நாளும் அறுத்துவியாபாரம் செய்கிறார்? மனசாட்சியே இல்லையா... சிந்திக்க வேண்டாமா.. ஏன் மாட்டுகறி விசயத்தில் இந்த அக்கப்போர் என்பதில் அஸ்லத்திடம் தெளிவான ஆதாரமில்லாமல் இனியும் அவர் இதில் கவனம் செலுத்தினால் அவமானப்படப்போவது அஸ்லம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிரை முஸ்லீம் சமுதாயமே என்பதில் சந்தேகமே இல்லை...  சும்மா தமாசுக்கு சோடா கேட்டேன்... நான் ஒன்றும் அரசியல்(வி)வாதியல்ல, இயக்க(வி)வாதியல்ல, உங்களை போன்ற வெள்ளிநிலா மற்றும் சினிமா விமர்சன பத்திரிக்கையாளனல்ல... ஒரு சாதரண நடுநிலை சிந்தனையாளன்.

  நம்முடைய சகோதரர்கள் இப்படி குழயடிச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை காண சகிக்காமலே இது போன்று எழுத தோன்றுகிறது. இன்ஷா அல்லாஹ்.. உங்கள் ஆலோசனைகளின் பேரில் நல்ல விசேசங்கள் மன்னிக்கவும் விசயங்களை எழுத முயற்சி செய்கிறேன் நேரம் கிடைத்தால்.. :>)

  அற்புத எழுதாற்றல் உள்ள நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் நம்முடை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை சந்தித்து நெறிபடுத்த முயற்சி செய்யுங்கள்.. நானும் இணையத்தின் மூலம் அவர் தவறு செய்தால் நளினமாக சுட்டிக்காட்ட முயற்சி செய்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

  என் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.. அல்லாஹ் நம் எல்லோரையும் ஒற்றுமை படுத்துவானாக...

  பதிலளிநீக்கு
 26. ******அதேபோல நீங்கள் பொய்யாக குறிப்பிட்டுள்ளதுபோல அவர்கள் வேறு யாரையும் அழைத்து செல்லவில்லை...எதையும் தீர விசாரிக்காமல் நீங்கள் எழுதுவதிலிருந்து தெரிகிறது நீங்கள் எப்படிப்பட்ட நோக்கத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று..அப்படி உங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்றால் நீங்கள் அந்த வடிவேலுவை உங்களது தமுமுக நண்பர்களுடன் சென்று சந்தித்து உண்மையை அறிந்து கொள்ளலாம்..இன்னும் தமீம் உங்களுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறார்..அவரது தொலைபேசி எண் 9500694003.*******

  என்னுடைய கருத்துக்களை பல முறை படித்துவிட்டு கருத்திடுங்களேன்...

  நான் குறிப்பிட்டது இன்னார் உதவியுடன் என்றுதானே குறிப்பிட்டேனே தவிற. அவர்களை அழைத்துச்சென்றார்கள் என்று குறிப்பிட்டேனா? சுட்டிக்காட்டுங்களேன்
  .அறிவாளித்தனமா பதில் அளிப்பதாக நினைப்போ ஒங்களுக்கு.

  அலைபேசி எண் கொடுக்கு அளவுக்கு ஒ-தமீம் ஒன்றும் விஐபி இல்லையே.

  "இப்போதிருக்கும் மேட்டர்.. மாட்டுகறி தொடர்பானதே..." என்ற வாசகங்களை தொடர்ந்து நான் சொன்ன 4 மேட்டர்களை நிதானமாக சிந்தித்து பார்த்து பதில் தாருங்கள்.நீங்கள் கேட்கும் அறிவாளித்தனமான கேள்விகளுக்கு அங்கு பதிலும் உள்ளது.

  முபீனுடைய பதில் பார்த்தேன், மறுத்துள்ள அவர் செயல் விரைவில் ஆதாரத்துடன் நிரூபனமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். சின்னபிள்ளை தனத்துக்கு பதிலளிப்பது நேர விரையம்.

  அவசியம் ஏற்பட்டால் அவரை தொடர்பு கொள்வேன்.

  பதிலளிநீக்கு
 27. அடிபட்ட மாட்டிம் இறச்சி எப்படி சுகாதரமற்றது என்று ஆதரத்துடன் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  மாட்டுகறிகடைக்காரனுக்கு ஏன் இன்னும் பேரூராட்சி லைசன்ஸ் கொடுக்க மறுக்கிறது?

  நான் ஒன்னும் அதிரை பேரூராட்சி தலைவரில்லை வடுவேலுவிடம் துப்பறியும் செட்டப் பேட்டி எடுக்க. என்னை பொருத்தவரை அஸ்லம் & தமுமுக செயல்பாடுகள் இரண்டும் ஒன்றே. மாட்டிக்கொண்டு முழிப்பது ஏழை கறி வியாபாரியும் அப்பாவி அதிரை மக்களும் தான்...

  பதிலளிநீக்கு
 28. ரியாஸ் அஹமது என்ற பெயரில் எழுதும் பொருக்கி எவன்? என்னைத் தெரியாவிட்டால் நிஜாரிடம் கேள். அநாகரிகமாகக் கருத்திடுபவன் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 29. ரியாஸ் அஹமது என்ற பெயரில் எழுதும்
  பொருக்கி எவன்?
  என்னைத் தெரியாவிட்டால்
  நிஜாரிடம் கேள்.
  அநாகரிகமாகக் கருத்திடுபவன்
  அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 30. //அலைபேசி எண் கொடுக்கு அளவுக்கு ஒ-தமீம் ஒன்றும் விஐபி இல்லையே.//
  ஓஹோ..வி ஐ பி இடம் மட்டும்தாம் பேசுவீர்களோ?

  //முபீனுடைய பதில் பார்த்தேன், மறுத்துள்ள அவர் செயல் விரைவில் ஆதாரத்துடன் நிரூபனமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். சின்னபிள்ளை தனத்துக்கு பதிலளிப்பது நேர விரையம்.
  அவசியம் ஏற்பட்டால் அவரை தொடர்பு கொள்வேன்.//
  இது பக்கா அரசியல்...ஒருவனுக்கு பதில் சொல்ல திராணி இல்லை என்னும்போதும், தன்னிடம் உண்மை இல்லை என்கின்றபோதும், "ஆதாரத்துடன் நிரூபிப்பேன், அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்வேன் " என்ற கோழைத்தனமான வாதத்தை வைக்கும் நிஜ அரசியல் வாதியாகிவிட்டீர்கள்..
  அவசியம் ஏற்பட்டதால்தான் தான் முபீன் உங்களை தொடர்புகொள்ள நினைக்கிறார்..நீங்கள் ஏன் பம்முகிரீர்கள்.?

  //அடிபட்ட மாட்டிம் இறச்சி எப்படி சுகாதரமற்றது என்று ஆதரத்துடன் கொஞ்சம் சொல்லுங்களேன்.//

  பேரூராட்சியிடம் அனுமதி பெற்று இறைச்சியை அறுக்க சொன்னால், மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைப்போதுபோல இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பதிளிருந்து - உங்களிடம் மேற்கொண்டு பேசுவதற்கு சரக்கில்லை என்று தெரிகிறது..

  //நான் குறிப்பிட்டது இன்னார் உதவியுடன் என்றுதானே குறிப்பிட்டேனே தவிற. அவர்களை அழைத்துச்சென்றார்கள் என்று குறிப்பிட்டேனா? சுட்டிக்காட்டுங்களேன்
  .அறிவாளித்தனமா பதில் அளிப்பதாக நினைப்போ ஒங்களுக்கு.//
  கருனாநிதியைப்போல வார்த்தை ஜாலக்காரராக இருப்பீர்கள் போல இருக்கிறது..இதையும் விளக்கம் பெற தமீமிடம் பேச சொன்னால் அவர் என்ன வி ஐ பியா என்று கேட்டு தப்பித்துக்கொள்ள பார்கிறீர்கள்..
  சரி..எனக்காவது போன் செய்வீர்களா? - நான் வி ஐ பி இல்லைதான்..இருந்தாலும் ஊரு மக்கள் மேல் இவ்வளவு (?) அக்கறை உள்ள நீங்கள் .இந்த விஷயத்தை இப்படியே பேசிக்கொண்டிருக்காமல் நமக்குள் பேசி முடிவுக்கு கொண்டுவந்தால் என்ன?

  பதிலளிநீக்கு
 31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 32. "என்னை பொருத்தவரை அஸ்லம் & தமுமுக செயல்பாடுகள்
  இரண்டும் ஒன்றே. மாட்டிக்கொண்டு முழிப்பது ஏழை கறி வியாபாரியும் அப்பாவி அதிரை மக்களும் தான்" என்ற நடுநிலை சிந்தனை புரியவேண்டிய மக்களுக்கு புரிந்திருந்தால் சரி.

  நான் கேட்டது.... அடிபட்ட மாட்டிம் இறச்சி எப்படி சுகாதரமற்றது என்று ஆதரத்துடன் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  நிசாருடைய பதில்.... பேரூராட்சியிடம் அனுமதி பெற்று இறைச்சியை அறுக்க சொன்னால், மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைப்போதுபோல இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பதிளிருந்து - உங்களிடம் மேற்கொண்டு பேசுவதற்கு சரக்கில்லை என்று தெரிகிறது..

  யாரிடம் சரக்கு இருக்கா இல்லையா என்பதல்ல மெட்டரு.. சரியான பதிலை சொல்லுங்க தம்பி..

  சாவுல் லைசன்ஸ் விண்ணபித்து இதுவரை கொடுக்கவில்லையே என்ன காரணம்?

  தன் தவறை திருத்தாத வரை, நடுநிலை சுட்டிக்காட்டல் பொதுவில் தொடரும் அது அஸ்லமாகட்டும் யாராகட்டும்.

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.