அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அதிரைநிருபர் வலைத்தளம் அதன் வெற்றிப் பாதையின் தொடர்ச்சியாக மற்றுமொரு வழிகாட்டும் நிகழ்வுடன் அதிரை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான பொது அறிவுவினாடி-வினா போட்டியை, இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது.
வரும் 26-11-2012 மற்றும் 27-11-2012 ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி புதிய கட்டிட வளாகத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என்று தனித் தனியாக இப்போட்டி நடக்க இருக்கிறது.
கலந்து கொள்ளும் பள்ளிகள்:-
1. கா.மு.மே.பள்ளி (ஆண்கள்)
2. கா.மு.மே.பள்ளி (பெண்கள்)
3. இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
4. ஆக்ஸ்ஃபோட் மெட்ரிக் பள்ளி
5. அரசு பெண்கள் உயர் நிலை பள்ளி
26-11-2012 அன்று மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியை காதிர் முகைதீன் கல்லூரிபேராசிரியை ஆயிஷா மரியம் MSc., Mphil.BEd., மற்றும் பேராசிரியை தஸ்லீமா M.A., Mphil., நடத்த இருக்கிறார்கள்.
27-11-2012 அன்று மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை கா.மு.மே.பள்ளி (ஆண்கள்)முன்னால் தலைமை ஆசிரியர் S.K.M.ஹாஜா முகைதீன் M.A.BSc., B.T. அவர்கள் நடத்த இருக்கிறார்கள்.
மேலும் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவமணிகளுக்கு தனித்தனியாக முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்க இருக்கிறது.
மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித் தனியாக:-
முதல் பரிசு தலா : ரூ 5,000/=
இரண்டாம் பரிசு தலா : ரூ 3,000/=
மூன்றாம் பரிசு தலா : ரூ 2,000/=
கலந்து கொள்ளும் அனைத்து மாணவமணிகளுக்கும் பங்களிப்பிற்கான சான்றிதழ்களும் வழங்க இருக்கிறது.
இதுமட்டுமன்றி, மேலும் சிறப்பு பரிசுகளும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது.
மாணவமணிகளின் பொது அறித்திறனையும் அவர்களின் திறமைகளையும் வெளிக் கொணர்ந்து அவர்களை ஆர்வமூட்டவும், எதிர்காலம் சிறக்கவும் அதிரைநிருபர் வலைத்தளம் இந்த அரிய முயற்சியை துவங்கியிருக்கிறது.
இனிவரும் காலங்களிலும் இவ்வாறான சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்த இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !.
அதிரைநிருபர் குழு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்