மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
சம்பா பயிருக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் பந்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது.
12 லட்சம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் மனம் உடைந்துபோய் உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தை மதிக்காத கர்நாடக அரசைக் கண்டிக்காமல் மத்திய அரசும் வேடிக்கைப் பார்க்கிறது.
மகாராஷ்டிரா, ஆந்திரா போல தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை முயற்சிக்குப் போகும் ஆபாயத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
எனவே எதிர்வரும் 7ஆம் தேதி காவேரி பாசனப் பகுதிகளான டெல்டா மாவட்டங்களில் விவசாய இயக்கங்கள் நடத்தும் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்திற்கு வணிகர்களும், பொது மக்களும் ஆதரவு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தஞ்சைமாவட்ட பொறுப்பாளர் அறிக்கை:
தஞ்சை மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அதிரை செய்யது முகமது புகாரி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, தலைமையின் கட்டளைப்படி நாளை மறுநாள் 7ஆம் தேதி காவேரி பாசனப் பகுதிகளான டெல்டா மாவட்டங்களில் விவசாய இயக்கங்கள் நடத்தும் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்திற்கு வணிகர்களும், பொது மக்களும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்