அஷ்ஷெய்க் M.I.M. பஸீர் மதனி ( BA)
எமது சமுதாயத்தில் சிறிய ஒரு பகுதியினர் வலுவிழந்தோராக காணப்படுகின்றனர். பல்வேறு விதமான காரணங்களினால் வலுவிழக்க நேரிகின்றது. விழிப்புலன், செவிப்புலன் இழப்பு, பேச்சிழப்பு, கை, கால் மற்றும் உடலின் ஏனைய பகுதிகள் போன்றஅவயவங்களின் இயங்கமுடியாத நிலை, உளவிருத்திக் குறைபாடு போன்ற பல்வேறு நிலைகளினால் வலுவிழந்து காணப்படுகின்றனர். இவர்கள் வலுவிழந்தோர், விஷேட தேவையுடையோர், வலதுகுறைந்தோர், மாற்றுத் திறனாளிகள் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
எமது சமுதாயத்தில் சிறிய ஒரு பகுதியினர் வலுவிழந்தோராக காணப்படுகின்றனர். பல்வேறு விதமான காரணங்களினால் வலுவிழக்க நேரிகின்றது. விழிப்புலன், செவிப்புலன் இழப்பு, பேச்சிழப்பு, கை, கால் மற்றும் உடலின் ஏனைய பகுதிகள் போன்றஅவயவங்களின் இயங்கமுடியாத நிலை, உளவிருத்திக் குறைபாடு போன்ற பல்வேறு நிலைகளினால் வலுவிழந்து காணப்படுகின்றனர். இவர்கள் வலுவிழந்தோர், விஷேட தேவையுடையோர், வலதுகுறைந்தோர், மாற்றுத் திறனாளிகள் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
வலுவிழந்தோர் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற வகையில் இஸ்லாம் அவர்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவம் சமூகத்தில் அவர்கள் நோக்கப்படும் விதம் பற்றி சர்வதேச வலுவிழந்தோர் தினத்தில் நினைவுபடுத்துவது சிறந்த விடயம் என கருதுகின்றேன்.
வலுவிழந்தோர் பற்றி அல்குர்ஆன்
உலகப் பொதுமறையான அல்குர்ஆன் சமூகத்தில் நலிவுற்றவர்களான வலது குறைந்தோர் பற்றி பல இடங்களில் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய முக்கியதுவம் குறித்து கூறுகின்றது. அத்திருமறை வசனங்களை நோக்குவோம்.
01. அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (றழி) விழிப்புலன் அற்ற ஏழை நபித்தோளர். இஸ்லாத்தின் ஆரம்பக் கால கட்டத்திலேயே இஸ்லாத்தை தழுவினார். நபி ஸல் அவர்கள் மீது இறங்கிய அல்குர்ஆன் வசனங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர். நபி(ஸல்) அவர்களை அடிக்கடி சந்தித்து இஸ்லாத்தை கற்றுத் தரும்படி வேண்டுவார்கள.; இஸ்லாத்தின் ஆரம்பக் கால கட்டத்தில் நபி ஸல் அவர்கள் குறைசித் தலைவர்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இதனை அறியாத அப்துல்லாஹிப்னு உம்மி மக்தூம் றழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் இறக்கிவைத்த திருமறை வசனங்களை கற்றுத்தாருங்கள் எனக்கேட்டார்கள். இந் நபித்தோழரின் வேண்டுகோளை நபி ஸல் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் அவர்களை கண்டித்து சூறா அபஸவின் ஆரம்ப பத்து வசனங்களையும் அல்லாஹ் இறக்கிவைத்தான்.
‘ (நமது நபியாகிய) அவர் கடுகடுத்தார் மேலும் புறக்கணித்தார்(1) தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக(2) (நபியே உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தமானவராக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு அறிவித்தது எது? (3) அல்லது அவர் உம்முடைய உபதேசத்தை நினைவுபடுத்திக் கொள்பவராகலாம் அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும். (5) ஆகவே, எவன் பொருளாதார மேம்பாட்டை உடையவனோ (6) அவனுக்கு நீர் செவிமடுக்கின்றீர் (7) மேலும் அவன் இஸ்லாத்தை ஏற்காது பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை (8) மேலும் எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ அவர்(9) அவரோ அல்லாஹ்வை பயந்தவர்(10)அப்போது அவரைவிட்டும் அசட்டை செய்கின்றீர்.
02. பலவீனர்கள் மீதும் நோயாளிகள் மீதும் யுத்தத்திற்கு செல்வதற்கு எதையும் பெற்றுக் கொள்ளவில்லையே அவர்கள் மீதும் அல்லாஹ்விற்காகவும் அவனுடைய தூதருக்காவும் அவர்கள் நன்மையை நாடுவார்களாயின் (போருக்குச் செல்லாது தங்கிவிடுவது) குற்றமில்லை. நன்மை செய்வோர் மீது குறை கூற எந்த வழியுமில்லை மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிக்கிறவன். (9:91)
03. ’விழிப்புலன் அற்றவர் மீதும் குற்றமில்லை கால் ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை
04. நோயாளியின் மீதும் குற்றமில்லை’
இத்திருமறை வசனம் அல்குர்ஆனில் இரு இடங்களில் இடம்பெற்றுள்ளது. அந்நூர் அத்தியாயத்தில் 61ம் வசனத்தில் வலுவிழந்தோர் தங்களது உறவினர் வீடுகளில் உணவுன்பதில் குற்றமில்லை என்றும் அல் பத்ஹ் அத்தியாயத்தில் 16ம் வசனத்தில் வலுவிழந்தோர் யுத்தத்திற்கு செல்லாமலிருப்பதில் குற்றமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
05. விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்யவேண்டாம் (பரிகாசம் செய்யப்பட்ட ) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம் அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்யப்பட்ட ) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மிகச் சிறந்தவர்களாகஇருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம் உங்களில் சிலர் சிலரை அவருக்கு வைக்கப்படாத பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். (49:11)
இவ்வசனம் ஹூஜறாத் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. பொதுவாக இவ்வத்தியாயம் இஸ்லாமிய சமூகத்தின் பண்பியல்புகள் பற்றி எடுத்துக் கூறுகின்றது. மற்றவர்களைக் குறை கூறித்திருவது, மற்றவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டுவது இஸ்லாமிய சமூகத்தில் ஆரோக்கியமான பண்பல்ல. மற்றவர்களை மதிக்கும் மார்க்கம் இஸ்லாம். குறிப்பாக வலதுகுறைந்தோரின் ஊனத்தன்மையை வைத்து பட்டப்பெயர் சூட்டுவதையும் அவர்களை குறை கூறுவதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. இதனால் அவர்கள் மனஅழுத்தற்திற்கு உள்ளாகுவதையும் காண்கின்றோம்.
06. எந்த துன்பமும் அதனை நாம் சிரிஷ்டிப்பதற்கு முன்னதாக ( லவ்ஹூல் மஹ்பூல்) எனும் கிரந்தத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலோ அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும் . உங்களுக்கு தவறி விட்டதன் மீது நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காவும் அல்லாஹ் உங்களுக்க கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான். கர்வம் கொண்டு தற்பெருமையடிப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.( 57: 22-23)
சில தவறான நம்பிக்கைகளின் படி சிலர் தங்களுக்கு ஏற்பட்ட அங்கவீனம் துர் அதிஸ்டம், கர்மவினை, வினைப்பயன், கிரகங்களின் கெட்ட சேர்க்கை கிரக பலன் அல்லது மற்றவர்களினால் செய்யப்பட்ட செய்வினை, சூனியம், என்பவற்றால் ஏற்படுகின்றன என்று நம்புகின்றனர். இவ்வசனம் இந் நம்பிக்கைகளை தகர்த்தெறிகின்றது. அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி நடைபெறுகின்றன. இவ் வசனங்கள் வலது குறைந்தோருக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகின்றது. வலது குறைந்த பிள்ளைகளின் பெற்றோருக்கும் இவ்வசனம் கவலையை போக்குகின்றது.
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் வலுவிழந்தோரின் நிலை
சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் வலுவிழந்தோருக்க சமூக அந்தஸ்தை வழங்கியது. அவர்கள் சமூகத்தின் சுபிட்சத்திலும் பங்கெடுக்கின்றனர் என்ற உண்மையை தெளிவு படுத்தியது. அல்லாஹ்வின் உதவியும் ரிஸ்க்கும் அவர்கள் சமூகத்தில் இருப்பதன் காரணமாகத்தான் கிடைக்கின்றன. ஸஃதுப்னு அபீவக்காஸ் (றழி) அவர்கள் தனக்கு ஏனையவர்களைவிட சிறப்புண்டு என நினைத்த போது நபி (ஸல்) அவர்கள் மறுத்துரைத்த சமூகத்திலுள்ள பலவீனர்கள் காரணமாகத்தான் நிங்கள் அல்லாஹ்வின் உதவியையும் ரிஸ்க்கையும் பெறுகின்றனர் எனக் கூறினார்கள். (ஆதாரம் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல சகாபாக்கள் வலுவிழந்தவர்களாக கானப்பட்டனர். எனினும் அவர்கள் சமூகத்தை விட்டும் ஒதுங்கவில்லை.சமூகம் அவர்களை ஒதுக்கவுமில்லை. அவர்கள் இஸ்லாத்தின் எழுச்சிக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட்டனர்.
அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (றழி) அவர்கள் விழிப்புலனற்ற ஸகாபியாக இருந்;தும் கூட நபி (ஸல்) அவர்கள் மதினாவிலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் போது அவர்களை மதீனாவிற்கு அமீராகவும் ஆக்கியுள்ளார்கள். இஸ்லாத்தில் முக்கிய கடமைகளுள் ஒன்றான தொழுகைக்கு அதான் கூறும் பொறுப்பையும் வழங்கினார்கள், காதிஸிய்யா யுத்தத்தில் யுத்தக் கொடியை சுமந்தவர்களாக ஸஹீதானார்கள்.
மற்றுமொரு ஸஹாபியாகிய அம்ருப்னு ஜமூஹ் (றழி) அவர்களின் கால் ஊனமுற்றிருந்தும் கூட உஹதுப் போரில் அவர்கள் கலந்து கொள்வதற்காக காட்டிய ஆர்வம் அளப்பெரியது. அவர்கள் உஹதுப் போரில் கலந்து கொள்வதற்கு தயாராகிய போது உடல் ஊனமுற்றவர்கள் யுத்தத்தில் கலந்து கொள்வதற்கு விலக்களிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினால் அவர்களது ஆண் மக்கள் அவர்களை யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டாமென தடுத்தார்கள். அம்ருப்னு ஜமூஹ் (றழி) அவர்கள் இவ்விடயத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறி எனது ஊனமுற்ற காலினால் சுவனத்தில்; நடமாட விரும்புகின்றேன். எனவும் கூறினார்கள். அதற்கு நபி ஸல் அல்லாஹ் உங்களுக்கு ஜிஹாத் கடமையிலிருந்து விலக்களித்துள்ளான் என்று கூறிவிட்டு அவர்களது ஆண் பிள்ளைகளிடம் உங்களது தந்தையை ஜிஹாதிற்கு செல்லாமல் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் உங்களுக்கு கிடையாது அல்லாஹ் அவருக்கு ஸஹாதத்தை வழங்கட்டும் எனக் கூறினார்கள். பின்பு அம்ருப்னு ஜமூஹ் (றழி) அவர்கள் உஹதுப் போரில் கலந்து கொண்டார்கள் அங்கே அவர்கள் ஷஹீதானார்கள். அவர்களது ஊனமுற்ற காலினால் நல்ல முறையில் சுவனத்தில் நடமாடுவதை நான் கண்டேன் என நபி (ஸல்) கூறினார்கள்.
முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்கள் கால் ஊனமுற்ற ஸஹாபியா இருந்தும் நபி (ஸல்) அவர்கள் தனது பிரதிநிதியாக யமனுக்கு அனுப்பிவைத்தார்கள்.
இஸ்லாமிய கிலாபத்தில் வலுவிழந்தோரின் நிலை
இஸ்லாமிய கிலாபத்தில் வலுவழந்தோர் அரசாங்கத்தின் கண்கானிப்பின் கீழ் உள்வாங்கப்பட்டார்கள். பொதுவாக உமையாக்கள் ஆட்சியில் உளவிருத்தியில் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஆஸ்பத்திரிகள் நிறுவப்பட்டன. ஹிஜ்ரி 88ல் கலீபா வலீதிப்னு அப்துல் மலிக் குஸ்டரோக நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனையை நிறுவினார்கள். நடக்க முடியாதவர்களுக்கும் விழிப்புலன் அற்றவர்களுக்கும் சேவகர்களை வழங்கினார்கள்.மேலும் வலுவிழந்தோருக்கு மாதாந்த உதவித் தொகையையும் வழங்கினார்கள்.
உமருப்னு அப்துல் அஸீஸ் (றஹ்) அவர்கள் வலுவிழந்தோரை கணக்கிட்டு விழிப்புலன் அற்றவர்களுக்கு வழிகாட்டிகளையும் நடக்க முடியாதவர்களுக்கு சேவகர்களையும் நியமித்தார்கள்.அப்பாசியர்களின் ஆட்சிக் காலத்தில் விழிப்புலன் அற்றோருக்கு தங்குமிட வசதி செய்துகொடுக்கப்பட்டது.
இஸ்லாமிய ஆட்சியிலுள்ள பைதுல் மாலிலிருந்து வலுவிழந்தோருக்கு நிதி ஒதுக்க வேண்டுமென இமாம் அபூ ஹனீபா (றஹ்) அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இஸ்லாமிய அறிவுத்துறைக்கு வலுவிழந்தவர்களின் பங்களிப்பு
இஸ்லாமிய வரலாற்றை நோக்கும் போது இஸ்லாமிய அறிவுத் துறைக்கு வலுவிழந்த பல அறிஞர்கள் பங்களிப்பு செய்துள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர்களை நோக்குவேம்.
01. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் புனித அல்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர்களுக்கு தலைவராக திகழ்கிறார்கள். தனது கண்பார்வையை இழந்திருந்தும் அல்குர்ஆனுக்கு அளப்பெரிய சேவையை ஆற்றியுள்ளார்கள்.
01. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் புனித அல்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர்களுக்கு தலைவராக திகழ்கிறார்கள். தனது கண்பார்வையை இழந்திருந்தும் அல்குர்ஆனுக்கு அளப்பெரிய சேவையை ஆற்றியுள்ளார்கள்.
02. அதாஹ் (றஹ்) அவர்களது உடலில் பல குறைபாடுகள் இருந்தும் மார்க்க தீர்ப்பு வழங்கும் விடயத்தில் வல்லுனராக திகழ்ந்தார்கள். பல அறிஞர்கள் அவர்களிடம் கல்வி கற்றுள்ளார்கள்.
03. அப்துல்லாஹ் இப்னு பாஸ் (றஹ்) அவர்கள் கண்பார்வை இழந்திருந்தும் சவுதி அறபியாவின் முப்ஃதியாக இருந்து அளப்பெரிய சேவையாற்றியுள்ளார்கள்.
04. அப்துல் அஸீஸ் ஆலு ஷேக் (ஹபிழஹூள்ளாஹ்) தனது கண்பார்வை இழந்த நிலையில் சவுதி அறபியாவின் முப்ஃதியாக சேவையாற்றுகிறாகள். றியாதிலுள்ள பள்ளிவாயலொன்றில் ஒவ்வொரு வாரமும் குத்பா பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள். அறபா தினத்தன்று மஸ்ஜித் நமிறாவில் குத்பா பிரசங்கம் நிகழ்துவார்கள்.
வலுவழந்தோருக்க இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை இங்கு ஓரளவு குறிப்பிட முடிந்தது. இதனை அறிந்த உலமாக்கள் கல்விமான்கள் வலதுகுறைந்தோரின் கல்வி விடயத்தில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு வலதுகுறைந்த மாணவர்களுக்கு கல்வி, தொழிற்பயிற்சி, தேவையான மார்க்கக் கல்வி போன்றவற்றை வழங்குகின்றனர். அதற்கு தங்களது உதவியையும், ஒத்துழைப்பையும் பெரிதும் எதிர்பார்கின்றோம்.
அஷ்ஷெய்க் M.I.M. பஸீர் மதனி (BA)
செயலாளர், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலதுகுறைந்தோர் நலன்புரி அமைப்பு, காத்தான்குடி.
செயலாளர், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலதுகுறைந்தோர் நலன்புரி அமைப்பு, காத்தான்குடி.
ந்ன்றி: லங்காமுஸ்லிம்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்