Breaking News
recent

அதிரை - பட்டுக்கோட்டையில் சாலையின் குறுக்கே தடுப்புகள்: வாகன ஓட்டிகள் அவதி!

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைப்பெற்றது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் சாலையோர மின்கம்பங்கள் எல்லாம் ரோட்டின் நடுவே இருக்கிறது.

முன்பு சாலைகள் குறுகலாக இருந்த போது சாலையை ஓட்டி மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது வாகனங்கள் பெருகிய நிலையில் வாகனங்கள் செல்லவே சாலைகள் போதுமானதாக இல்லாத நிலையில் பட்டுக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிக சிரமப்பட்டனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று கலெக்டரின் உத்தரவின் பேரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் சமீபத்தில் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின் சாலையோர மின் கம்பங்கள் எல்லாம் சாலையின் நடுவில் இருக்கும் அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்த பணியின் தொடர்ச்சியாக மின்கம்பங்களை சாலையின் ஓரத்திற்கு நகர்த்தினால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி டாக்டர்.புனல் ரவி கூறியதாவது:-

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட உடன் பின்னாலேயே கடைகள் சாலையை ஆக்கிரமித்துவிடும். ஆனால் தற்போது உள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் அவரை பாராட்டுங்கள். மின் கம்பங்களை சாலையின் ஓரத்திற்கு நகர்த்த வேண்டும்.

அதேபோல பட்டுக்கோட்டை- அதிராம்பட்டிணம் சாலையில் எந்த பயனும் இல்லாமல் சாலையின் நடுவே கான்கிரீட் கட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டையை அடையாளப்படுத்த எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதுவரை 8க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அந்த தடுப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:மாலைமலர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.