பட்டுக்கோட்டையில் போட்டிபோட்டு வந்த பள்ளி வாகனம் மோதி ஆசிரியை படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் லாரல் தனியார் பள்ளியில் இருந்து மாலை மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு இரு பள்ளி வாகனங்கள் யார் முன்னால் செல்வது என்று போட்டி போட்டு வெளியே வந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் லாரல் தனியார் பள்ளியில் இருந்து மாலை மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு இரு பள்ளி வாகனங்கள் யார் முன்னால் செல்வது என்று போட்டி போட்டு வெளியே வந்துள்ளது.
அந்த நேரத்தில் பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு செல்ல பள்ளியை விட்டு வெளியே வந்த ஒரு ஆசிரியை மீது போட்டி போட்டு வந்த ஒரு வேன் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆசிரியையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவிச் சிகிச்சை முடிந்த நிலையில் ஆசிரியையின் காதில் ரத்தம் வந்தது.
காயம் அதிகமாக உள்ளது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சொன்னதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது. கடந்த வாரத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒரு மாணவன் காயம் அடைந்தான். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆங்கில தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி ஆசிரியர் அவமானப்படுத்தியதாக ஒரு மாணவன் தீ குளித்து இறந்தான். இது போன்ற சம்பவங்கள் இந்தப்பள்ளியில் தொடர்ந்து நடந்து வருவதால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இரா.பகத்சிங்.
நன்றி:நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்