அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலையம் சார்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டம் திரவுபதையம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 100 கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மீனவர்களிடத்தில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் 1093 இலவச உதவி அழைப்பு நம்பரை பற்றியும் மேலும் கடலில் எந்த பொருள் மிதந்து வந்தாலும் அதை தொடுவதோ அதை எடுப்பதற்கோ முயற்சிக்கக் கூடாது.
அந்நியர்கள் நடமாட்டம் மர்ம படகுகள் தென்பட்டால் 1093 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் மழைக்காலம் துவங்கிவிட்டது கடலில் இந்த நேரத்தில் புயல் சூறாவளி கடும் மழை போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த நேரத்தில் கடலில் மீனவர்கள் இயற்கை இடர்பாடுகளால் சிக்கிக்கொண்டால் உடன் 1093 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
எங்களது படகுகள் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் எங்கள் படகுக்கு தகவல் உடன் வந்து விடும். உடன் வந்து காப்பாற்றுவோம்.
மேலும் இயற்கை இடர்பாடுகளால் மீனவர்கள் காணாமல் போய்விட்டால் நாங்கள் கடலோர பாதுகாப்பு காவல் படைக்கு தகவல் தெரிவிப்போம்.
மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமும் மற்றும் அதிவேக ரோந்து கப்பல் மூலம் விரைந்து சென்று மீனவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆதலால் மீனவர்கள் அனைவரும் 1093 என்ற மீனவர்களை பாதுகாக்கும் எண்ணை மறந்து விடாதீர்கள் என்று கூட்டத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்