Breaking News
recent

கவிக்கோவின் கவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்! மமக தீர்மாணம்!!

மனித நேய மக்கள் கட்சியின் மக்கள் திரள் கூட்டம் சென்னை தக்க சாலையில் நடந்தது அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்​​​​​​​​

1) தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொன்டு டாஸ்மாக் மதுக்கடைகளை தடை செய்து மதுவில்லா தமிழகத்தைஏற்படுத்த தமிழக அரசை இப்பொதுக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது

2) பண்மைச் சமூகம் வாழும் இந்தியத்திருநாட்டில் மாட்டுக்கறிக்கு எதிராக  உணவிலும் வகுப்பு வாதத்தை புகுத்தி மக்களை பிரித்து– கலவரங்களை தூண்டும்  காவி மதவாதஅரசியலை கண்டிப்பதுடன் மனித நேயத்துடன்மக்கள் ஒன்றுபட்டு வகுப்புவாதத்தை முறியடிக்கவேண்டும் என்று இப்பொதுக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது

3) எப்பொழுதும் போல் இவ்வாண்டும்,10ம் வகுப்புமாணவர்கள் உருது மொழியிலேயே தேர்வெழுததமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் எனஇப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது

4) விண்ணை முட்டிய பருப்பு விலையை கட்டுப்படுத்தி மலிவுவிலையில்ரேஷன் கடை மூலம் விற்பனைசெய்யும் தமிழக அரசை இப்பொதுக் கூட்டம் மனதாரபாராட்டுகிறது

5) 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைசிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்,   என தமிழக அரசை இப்பொதுக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது

6) இந்துத்துவா அரசியல் பின்னனியில் நாடு முழுவதும்சிறுபான்மை சமுதாயத்தவர்கள்தலித்கள்சமூகசிந்தனையாளர்கள்எழுத்தாளர்கள்பத்திரிக்கையாளர்களை படுகொலை செய்வதும்அச்சுறுத்துவதும் அவமானப்படுத்துவதும் தொடர்ந்துவருகிறதுஇதனை இப்பொதுக்கூட்டம்கண்டிப்பதுடன் இவற்றை எதிர்க்கவும் மதசார்பற்றஅரசியலை முன் நிறுத்தவும் அனைவரும் முன்வரவேண்டு என்று மனித நேய மக்கள் கட்சி அழைப்புவிடுக்கிறது

7) இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் தமிழகமீனவர்களை சுட்டுக் கொல்வதும்சிறைப்பிடிப்பதும்படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்துவது எனஇலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள்தொடர்ந்து வருகிறதுஇதனை வண்மையாககண்டிப்பதுடன் இந்த விவகாரத்தில் இலங்கைஅதிபர் சிரிசேனா நேரடியாக தலையிட்டு இலங்கைகடற்படையின் காட்டுமிராண்டித் தனத்தைகட்டுப்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது


8) இந்த மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும்ஒத்துழைப்பும் தந்த சென்னைஉயர்நீதிமன்றத்திற்கும்சென்னை காவல்துறைக்கும் இப்பொதுக்கூட்டம் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறது.

9) பல்வேறு சமூகப்பிரச்சினைகளை தனது கவிதைகள்மூலம் விழிப்புனர்வு ஏற்படுத்தி வரும் கவிக்கோஅப்துல் ரஹ்மான் அவர்களின் கவிதைகளை வரும்கல்வியாண்டில் இருந்து பள்ளிகல்லூரிபாடத்திட்டங்களில் சேர்க்குமாறு தமிழக அரசைஇப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

10) வேலையில்லா திண்டாத்தை முடிவுக்கு கொண்டுவரவேலையில்லா பட்டதாரிகளுக்கும்இளைஞர்களுக்கும் குறு சிறு தொழில்கள்தங்குதடையின்றி தொடங்க அனுமதி சான்றிதழ்மாணியம் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் சலுகைகளைதமிழக அரசு வழங்க வேண்டும் எனஇப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

11)  மத்திய அரசின் தொடர் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான போக்கை கண்டித்து, தங்கள் விருதுகளை திருப்பி அளித்த எழுத்தாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள் என அனைவரையும் இப்பொதுக்கூட்டம் பாராட்டுவதோடு, மத்திய அரசு  காவி சிந்தனைகளை கைவிட்டு மக்கள் நலப்பணியாற்ற வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது 

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.