Breaking News
recent

ரிட்டன் விசா5

அவர்கள் சாப்பிட்டு கிட்டு இருக்கும் போது கபூரின் செல் போன் அடிச்சது.எடுத்து பேசியவன் ஒரேபதடத்துடன் பேசியவரிடம் ''இப்ப வந்துட்டேன்,ஆஸ்பத்திரி அட்ரஸ் வாங்கிக்குங்க, நல்லது, நல்லது அவன்ட ரத்த குருப்கேட்டு போன் பன்றேன், நீங்க இந்த நம்பர்ள தானே இருப்பிய?கேட்க மறந்துட்டே உங்க பேரு என்ன?இஸ்மயிலா,முத்துப்பேட்டையா நல்லது,அல்லாஹ் உங்களுக்கு நல்ல வாழ்க தருவா, னல்ல இருப்பியோ போலிஸ் ஏதுன்னா கேசு அப்படியிப்படின்னா நா பாத்துக்குறேன்.
கொஞ்ச் அட்மிட் பன்ன பாருங்க நானா.
நா இன்னொன்னு நம்பரும் தர்ரேன்.கேக்குதா? ச்சே சிக்னல்லு வீக்கா ஈக்குதே! ஹலோ..இப்ப கேக்குதா? நானா! நா இன்னனு நம்பர் தரேன் ,இது எடுக்கலனா,அதுக்கு கால பண்னுங்க!நீங்க ஒக்க இருந்தா ரொம்ப நல்லது, 96543210,என்னாங்க எட்டு நம்பரு?கடசில என்னா நம்பர் எழுதினியோ,சைபர் அப்புரம் ஒக்க8, ஒரு5, ஒக்க ஒரு 5 இப்ப சரியா? நானா அவன் ரத்த குருப் கேட்டுட்டுப்போன் பன்னுரேன்.
தம்பி! யாருக்கு என்னாச்சி? வாப்பாநம்ம ஜாமாலுக்குஆக்ஸிடன்ட்.
யா அல்லாஹ் இப்ப ஜமாலு எங்க? யாரு உனக்கு போன் பண்னது வாப்பா இப்ப ஜமால முத்துபேட்ட நானா ஒருத்தரு டாக்ஸில போட்டுக்குட்டு தஞ்சாவூர் போறார்,
நல்ல வேல அவரு டாக்ஸி ட்ரைவர் ஜமாலுடய,பேங் பாஸ் புக்குல இந்த செல்போன் நம்பர் இருந்துச்சாம் அவனுடய செல் போன் நான் யூஸ் பன்றதுனால இந்த மேட்டர் எனக்கு வந்துருச்சி நல்ல வேல அவ பொண்டாட்டிக்கு போகல! வாப்பா விசயம் யாருக்கும் தெரியாம பாத்துக்குங்க!அவ பொன்டாட்டிட ரெண்டு பேரோட ரிப்பொர்ட் வாங்கப்போரேன், நல்ல டாக்டரு அமெரிக்காவுல எம் பிரன்டுக்கு பேக்ஸ் பன்ன போரதா சொல்லித்தான் வாங்குவே(ன்) உம்மா நீங்க எதுவும் சொல்லிடாதிங்க! ரெத்தம் நல்லா போயிடுச்சாம் மயக்கமாதான் இருக்கானாம், நல்ல வேல ஒரத்த நாடுக்கு அங்குட்டு ஆக்ஸிடன்டு நடந்ததால தஞ்சாவூர் போய்ட்டார், நல்ல டாக்டர்ட முதலுதவி சேர்த்துட்டா போதும் பொரவு நல்ல பெரிய ஆஸ்பத்ரியெலே காட்டிக்கலாம், நா போரென்,அப்பாஸுக்கு போன் போட்டு விசயத்த சொல்லி நம்ம ஊட்டுக்கு வரச்சொல்லுங்க.பாம்புட்ட(தாஜுதீன்) சொல்லி வேன ரெடி பண்ண சொல்லுங்க.
நா போய் ரிப்போர்ட வாங்கி போன் பன்னனும்.
(தொடரும்)
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. கலைக் களஞ்சியமா?
    கலை களஞ்சியமா?

    பதிலளிநீக்கு
  2. கலைக் களஞ்சியமே- சுட்டி காட்டியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.