ஞாயிறு, 3 ஜூன், 2012

நவீனகால சைத்தானுக்கு தூக்குதண்டனை இல்லை!


முன்னாள் எகிப்து அதிபரும் நவீனகால சைத்தானுமான ஹோஸ்னி முபாரக் (84). இவனது 32 ஆண்டு கால சைத்தானிய ஆட்சியை எதிர்த்து கடந்த ஆண்டு பொதுமக்கள் புரட்சி நடத்தினர். இதைத்தொடர்ந்து அவனது ஆட்சி வீழ்ந்தது.  
சைதான் முபாரக்கும் அவனது குட்டி சைத்தான்களான (மகன்கள்) அலா, கமால் முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவன்கள் மீது ராணுவ கோர்ட்டில் 846 பேரை படுகொலை செய்ததாகவும் ஊழல் செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கு விசாரணை முடிந்து, அவன் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை(02/06/12) அவனது தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு கூறப்பட்டது. அத்தீர்ப்பில் சைத்தான் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவனது மகன்கள் அலா, கமால் முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 அதிகாரிகளுக்கும்  ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சைத்தான் முபாரக் மற்றும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் எழுதின.  அவனது ஆதரவாளர்கள் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
சைத்தானின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால், அதை சமாளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கலவரத்தில் ஈடுபடு பவர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இஸ்ராயிலில் தஞ்சம் புக விரும்பிய சைத்தான் ஹோஸ்னி முபாரக்!

சைத்தானை எதிர்த்து நடந்த புரட்சியில் ஆட்சி இழந்ததும் ஸவூதி அரேபியாவில் தஞ்சம் புக நினைத்தான்.(வழக்கமாக இது போன்ற இஸ்லாமிய எதிர்ப்பு ஆட்சியாளர்களுக்கு ஸவூதி அரசு தஞ்சம் அளிக்கும்)ஆனால்,
துனிஷிய சர்வாதிகாரியை ஏற்றுக்கொண்டு, இந்த முபாரக்கை 
 கை கழுவி விட்டது .தங்களது நாட்டிலும் ஏதேனும் புரட்சி எற்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில்தான்,சைத்தான் ஹோஸ்னி முபாரக் இஸ்ராயிலில் தஞ்சம் புக விரும்பினான் 


உலகின் நம்பர் ஒன் பணக்காரன்

இந்த சைத்தான் உலகின் நன்பர் பணக்காரனாகவும் இருக்கிறான்.  என்று "தி கார்டியன்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. சைத்தான் முபாரக் ஆடம்பர பங்களா மற்றும் ஓட்டல்களில் முதலீடு செய்துள்ளான். வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ளான். இவற்றை கணக்கிட்டால் இவனது சொத்து மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரன் இவன் தான்' என்று தெரிவித்துள்ளது.பணக்காரர் பட்டியலில் 2,40,750 கோடி ரூபாயுடன் மெக்சிகோ தொழிலதிபர் கார்லஸ் சிலிம் இரண்டாம் இடத்திலும், 2,38,500 கோடி ரூபாயுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

கோர்ட்டில் தீர்ப்பு அளித்தபோது...

சனி, 2 ஜூன், 2012

மின்வெட்டு இல்லாத தமிழகம்:தமிழக முதல்வரின் சாதனை!

தமிழகத்தின் மின் நிலைமை குறித்து முதல்வர் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று(ஜூன்1) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மின்வெட்டை படிப்படியாகக் குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:


கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிகளவு மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மாநிலத்தின் மின் நிலைமை இப்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாது, மே 10-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.


இதையடுத்து, வெள்ளிக்கிழமை(1/06/12) முதல் மீண்டும் மேட்டூர் அனல் மின் நிலையம், தனது முழு உற்பத்தித்திறனான 840 மெகாவாட் மின்னுற்பத்தியை தொடங்கி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், மின் தட்டுப்பாடு காரணமாக இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இன்று (ஜூன் 2) முதல் தளர்த்துவது என முடிவு எடுக்கப்பட்டது.


உயர் மின் அழுத்த மற்றும் குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியன முற்றிலுமாக நீக்கப்படுகின்றன.
சென்னையில் வீட்டுப் பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு இரண்டு மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் இருந்து மூன்று நேரமாகவும் குறைக்கப்படும்.


இப்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் நிலையத் திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் ஆகியன விரைவில் செயல்படத் தொடங்கும். எனவே, இப்போதுள்ள மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இது குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டு, உரிய முடிவுகள் எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



மின்வெட்டில்லாத தமிழகம்!
தமிழகத்தின் ஒரு நாள் மின்தேவை சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இன்றைய நிலவரப்படி மின்னுற்பத்தி அளவு 10,400 மெகாவாட்டாக உள்ளது. எனவே மின் பற்றாக்குறை ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.

இனி வரும் மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையமும், மேலும் சில அனல் மின் நிலையத் திட்டப் பணிகளும் செயல்பாட்டுக்கு வரும்போது மின் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கிவிடும்.
மின் பற்றாகுறை ஏற்பட்டதும், பல கண்டங்கள்,ஆர்பாட்டங்கள்,அறிக்கைகள்,கடையடைப்பு,மறியல் என்று அரசியல் கட்சிகள் செய்தபோதும் பதற்றம் அடையாமல் மின் உற்பத்தி உண்மைநிலையை மக்களுக்கு அறிவித்து அத்துடன் மின் தட்டுப்பாட்டை முற்றிலும் நீக்க துரிதமகாவும்,விவேகத்துடனும் செயல்பட்டு,சாதனை செய்துள்ள தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்களை மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

மறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி : BAFTA விருதுப் படங்கள்


இணையத்தளத்தில் சாதாரணமாக நடத்தப்படும் ஒரு கருத்துக்கணிப்பில் பல மில்லியன் மக்கள் வாக்களித்திருக்க முடியுமா?
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கருத்துக்கணிப்பு எனில் அது நிச்சயம் சாத்தியமென நிரூபித்திருக்கிறது Radio Times.

அமெரிக்காவின் ஆஸ்காருக்கு சமமாக அழைக்கப்படும் பிரித்தானியாவின் BAFTA விருதுகளுக்காக (British Academy of Film and Television Arts) இம்முறை பரிந்துரைக்கப்பட்ட இரு முக்கிய தொலைக்காட்சி ஆவணத்திரைபடங்கள்

1. சேனல் 4 இன் Sri Lanka's Killing Field
2. அல் ஜசீராவின் Bharain : Shouting in the Dark

இதில் சேனல் 4 இன் Sri Lanka's Killing Field - இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்டுவந்த சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, இலங்கை அரசு இறுதியாக மேற்கொண்ட வழி என்ன என்பதை சாட்சிப்படுத்தியது. நம்மில் பலர் இத்திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த திரைப்படத்தை பற்றிப் பார்க்கலாம்.

அல்ஜசீராவின் Bharain : Shouting in the Dark -  துனிசியா, எகிப்து, லிபியா என மத்திய கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சி மூலம், புதிய வரலாறு படைத்து வர,  அம்முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்ள  கடும் முயற்சி மேற்கொண்டு தோற்றுப்போன Bahrain நாட்டை பற்றியது.

ஆக்ரோஷமாக உருவெடுத்த பஹ்ரேய்ன் மக்கள் புரட்சி எப்படி அதைவிட ஆக்ரோஷமாக அடக்கப்பட்டது என்பதை படம்பிடிக்க தவறிய மேற்குலக கமெராக்கள் மத்தியில் அல்ஜெசிரா சரியாக படம்பிடித்து கொண்டது. பயன்படுத்தியும் கொண்டது.

இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் யூடியூப்பில் 200,000 ஹிட்ஸ் குவிந்தன.  கட்டாருடன் (அல் ஜசீராவின் தலைமையகம் அமைந்துள்ள நாடு) தனது உறவை முறித்து கொள்ளும் அளவுக்கு பஹ்ரேன் அரசுக்கு கடுப்பேற்றிய டாக்குமெண்டரி இது. இதில் சாட்சியமளித்த பலர் இத்திரைப்படம் வெளியான பின்னர் கைது செய்யப்பட்டு இப்போதும் சிறைக்குள் உள்ளார்கள்.

ஆனால் குறித்த இரு திரைப்படங்களுமே,  ஊடக சக்தியை சிறைப்படுத்த முடியாதவை என நிரூபித்தவை.

Sri Lanka's Killing Field & Bahrain : Shouting in the Dark இவற்றில் எதை BAFTA விருதுக்கு எதை பரிந்துரைப்பீர்கள்? என்பது தான் Radio Times நடத்திய கருத்துக்கணிப்பு.
மொத்தம் 7,783,000 வாக்குகள் இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தன. இதில் Bahrain : Shouting in the Dark திரைப்படத்திற்கு 63% வாக்குகளும், Sri Lanka's Killing Field க்கு 37% வீத வாக்குகளும் கிடைத்தன.  Radio Times இல் ஒரு கருத்துக்கணிப்புக்கு 7 மில்லியன் பேர் வாக்களித்தது இதுவே முதன்முறை.

ஆனால் இரு படங்களையுமே  Bafta நடுவர் குழு விருதுக்கு தேர்ந்தெடுக்கவில்லை. நாம் நடத்துவது வாக்கெடுப்பு மட்டுமே. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என Radio Times முன்னரே அறிவித்திருந்தது.

இலங்கை, பஹ்ரேய்ன் இரு நாடுகளாலும் BAFTA விற்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் இரு திரைப்படங்களுக்கும் இருந்த எதிர் விமர்சனங்கள் தீர்ப்பில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியாயின் விருதை வென்ற திரைப்படமெது?

பிபிசியின் Panroma வகை புலனாய்வு திரைப்படமான Undercover Care - The Abuse Exposed

பிரிட்டனின் விண்டர்போர்னே நகரில் உள்ள மருத்துவமனையில் கடுமையாக உடல் ஊனமுற்ற மற்றும் மிக பலவீனமான நோயாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு மருத்துவ பணியாளர்களாக சேவை செய்பவர்களினால் இந்நோயாளிகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதனை, இரகசிய கமெராக்கள் மூலம் படம்பிடித்து உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி இது.

மேற்குறிப்பிட்ட மூன்று ஆவணத்திரைப்படங்களும் BAFTA விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவை என்பதற்காக மாத்திரமல்ல. மனிதத்தை நேசிக்கும் எவரும் ஒருமுறையேனும் பார்த்திருக்க வேண்டியவை என்ற ரீதியில் இங்கு மீண்டும் பதிவிடுகிறோம்.

(எச்சரிக்கை : மூன்று திரைப்படங்களுமே இதயம் பலவீனமானவர்களுக்கு, 18 வயதுக்குட்பட்டோருக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததல்ல)
 
Sri Lanka's Killing Field
 Bahrain : Shouting in the Dark
 Panorama Undercover Care, The Abuse Exposed

வியாழன், 31 மே, 2012

MoonTv Live



துபாய் பயணிகளை பரிதவிக்கச் செய்யும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

துபாயில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜுன் 30 ஆம் தேதி வரை புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களுக்கான சேவையினை ரத்து செய்துள்ளதால் பயணிகள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் சையது பயாஸுதீன் ( + 971 50 53 566 50 ). கடந்த 2006ம் ஆண்டு முதல் துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் வரும் ஜுன் 7ம் தேதி துபாயில் இருந்து திருச்சி செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தார். விடுமுறையில் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களைக் காண ஆவலுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சேவையினை ஜுன் 30ம் தேதி வரை புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் ரத்து செய்துள்ளது என்ற தகவலை தனது நண்பர் மூலம் தெரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு ஏஜெண்டான அல் மஹா டிராவல்ஸுக்கு சென்றார். அங்குள்ள ஊழியர்களிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்கள் ஆம் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் ஜுன் 30 வரை சேவையில்லை. அதற்கான முழுக்கட்டணத்தை திரும்பப் பெறலாம் அல்லது அடுத்த விமானத்தில் செல்லாம் என்றனர். 

விமான சேவை ரத்து செய்யப்பட்ட தகவல் பயணிகளுக்கு அனுப்பவில்லையே எனக் கேட்டபோது இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தான் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

அதனையடுத்து தனது பயணத்திட்டத்தை மாற்றிக் கொண்டு திரும்பினார். இவரது நண்பர் மூலம் தெரிந்ததால் பஸாதீன் தனது பயணத்திட்டத்தை முன்பே திட்டமிட வசதியாக இருந்துள்ளது. இது குறித்து விபரமறியாத பயணிகளின் பாடு பெருந் திண்டாட்டம் தான்.
நன்றி:தட்ஸ்தமிழ்

Free VIsa 2 U.K.,U.S.A.& AUSTRALIA

புதன், 30 மே, 2012

BSNL சார்பில் கையடக்க கணினி அறிமுகம்: விலை ரூ.3495


பி.எஸ்.என்.எல். சார்பில் புதுவகை கையடக்க கணினிகள் அறிமுகம்: ரூ.3495-க்கு விற்பனை
சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைபேசி வட்டாரங்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான கையடக்க கணினிகளை (டி-பேட்) இன்று (30/05/12)அறிமுகப்படுத்தின. இதன் அறிமுக விழா அண்ணாசாலை தொலை பேசி அலுவலகத்தில் நடந்தது.
 
சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்பிரமணியன், ஐ.எஸ். 70, ஐ.ஆர். என்ற கையடக்க கணினியை அறிமுகப்படுத்தி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தொழில் அதிபர் துரைசாமி, முதல் கணினியை பெற்றுக் கொண்டார்.
 
703-சி என்ற மாடலை தமிழ்நாடு தொலைபேசி தலைமை பொது மேலளர் அஷ்ரப்கான் அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தமிழக கலை மற்றும் பன்னாட்டு துறை செயலாளர் குணசேகரன் முதல் 703-சி மாடல் கணினியை பெற்றுக் கொண்டார். பள்ளி மாணவி மயூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காவ்யா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
 
பின்னர் இந்த புதிய வகை கையடக்க கணினிகளின் சிறப்பு அம்சங்கள் குறித்து தொலைபேசி பொது மேலாளர்கள் கூறிய தாவது:-
 
ஐ.எஸ்.70 ஐ.ஆர். என்ற மாடலின் விலை ரூ.3495. இதில் ஆண்டிராய்டு 2.3 ஆபேரட்டிங் சிஸ்டம், 2 ஜி.பி. மெமரி, 3டி விளையாட்கள், கேமிரா வசதியும் உள்ளன.
 
703-சி மாடலில் ஆண்டிராய்டு 4.1 ஆபரேட்டிங் சிஸ்டம், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, வை-பை இணைப்பு பெறும் வசதி உள்ளன. இதன் விலை ரூ.6499. இந்த 2 மாடல்களுமே செல்போனை விட சற்று பெரிதாக கையடக்கமாக உள்ளன. மிக எளிதாக கையில் கொண்டு செல்ல முடியும்.
 
லேப்-டாப்பில் என்னென்ன பணிகள் செய்யலாமோ அத்தனையும் இவற்றில் மேற்கொள்ள முடியும். பி.எஸ்.என். எல்.-ன் 2ஜி மற்றும் 3 ஜி சிம்கார்டுகளை இதில் பயன்படுத்தலாம். இந்த சிம்கார்டுகளை டேட்டா - கார்டுகள் மூலம் கருவியில் பொருத்த வேண்டும்.
 
இன்னும் 15 நாட்களில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மேலும் ஒரு நவீன மாடல் அறிமுகம் செய்யப்படும். இதில் பேசும் வசதியும் இடம் பெறும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

செவ்வாய், 29 மே, 2012

தமிழக முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய இலங்கை அரசியல்!


(முசலியூர் கே.சி.எம். அஸ்ஹர்)
அண்மைக் காலமாக ஊடகங்களில் அமைச்சர் றிசாட் பதியுதீனை அவமதிக்கும் வகையிலான செய்திகளை ஆயரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ, செல்வம் போன்றோரும் வெளியிட்டு வருகின்றனர். இச்செய்திகளை அமைச்சருக்கு எதிரான செய்தியாக நாம் பார்க்கவில்லை. புலிகளால் இனச்சுத்திகரிப்பின் மூலம் வெளியேற்றப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த ஒரு இலட்சம் மக்களுக்கும் எதிரான கருத்தாகவே நாம் பார்க்கிறோம்.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இனிமேல் ஒருபோதும் மீளத்திரும்பமாட்டார்கள் என்றே சிலர் நினைத்திருந்தனர். அவர்களை விட்டுவிட்டு தாம் நினைத்த விதமாக அரச காணிகளை ஆலயங்களுக்கும் கோயில்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளித்ததை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். கொக்குப்படையான், சவேரியார் புரம் போன்ற இடங்களில் திட்டமிட்ட குடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளதை நியாயமாகச் சிந்திக்கும் அப்பகுதி தமிழ்மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

எம்.பி.க்களான செல்வமும், வினோவும் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் றிசாட் அமைச்சரானார் என அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளனர். முஸ்லிம் ஒருவருக்கு வாக்களிக்கும் மனோநிலை தமிழர்களிடம் இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. 100% முஸ்லிம்களின் வாக்குகளாலேயே றிசாட் அமைச்சரானார். இது தெரியாமல் பொறாமையால் கண்டபடி அறிக்கை விடுவது சிறு பிள்ளைத்தனமானது.


தமிழ் கூட்டமைப்புக்குள் இருக்கும் விஷப் பாம்புகளாகவே இவர்களை நாம் பார்க்கிறோம். விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களினை 22 வருடங்களுக்குள் என்றாவது ஒருநாள் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பார்க்க வந்துள்ளனரா? எம்மால் வஞ்சிக்கப்பட்ட சமூகம் என்று பிராயச்சித்தமாக ஏதாவது உதவி செய்துள்ளனரா? புறாவுக்கு சதையையும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் கொடுத்தது எம் சமூகமே என புராணம் படிப்பதிலும் இராமன், மனுநீதிச் சோழன் பற்றிப் புகழ்பாடுவதிலும் என்ன நியாயம் இருக்கிறது.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்பு அனைத்து வளங்களையும் பல்கலைக்கழக கோட்டாக்களையும் அரச தொழில்களையும் நிவாரணங்களையும் அரச காணிகளையும் பெற்று சுகமாக வாழ்ந்தோர் நீங்கள்தானே. வன்னி யுத்தத்தில் வாழ்விழந்து வவுனியா முகாம்களில் வதைபட்ட உங்கள் இனத்திற்கு எம் அமைச்சர் புனர்வாழ்வு அமைச்சு மூலம் செய்த அத்தனை உதவிகளையும் அடியோடே மறந்துவிட்டீர்களே.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’. எம் இன அமைச்சர்கள்கூட எம்மக்களின் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடந்துள்ளனர். உதாரணமாக முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப்கூட ஆயிரக்கணக்கில் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு வழங்கியபோது எம்மின மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்பு வழங்கினார். இப்படியான பின்னணியில்தான் அல்லாஹ் அமைச்சர் றிசாட் அவர்களை எம்சமூகத்திற்கு அருட்கொடையாகத் தந்துள்ளான்.


22 வருடங்களாக நாம் இழந்தவைகளை அவர் மூலமாக பெறும்போது துவேசப் பேச்சுக்களும் அறிக்கைகளும் வெளிவருகின்றன. காணிகள், வீடுகள், அரச பதவிகள், நிவாரணங்கள் ஏனைய உதவிகளை அமைச்சர் செய்யும்போது நீங்கள் ஏன் துள்ளிக் குதிக்கிறீர்கள். இப்படியான நிலையில் காணியும் பொலிஸ் அதிகாரமும் உங்கள் கையில் கிடைத்து விட்டால் அரை மணிநேரத்தில் முஸ்லிம்களை வெளியேற்றி விடுவீர்கள் போலிருக்கிறது.

தம்புள்ள பள்ளி உடைப்புக்கு எதிராக குரல் எழுப்பிவிட்டால் மட்டும் நீங்கள் புனிதராக முடியாது. உங்களால் உடைக்கப்பட்ட (சமூகத்தால்) எம்பள்ளிகளின் படங்கள் இங்கே உள்ளன. அவற்றிற்கு முதலில் விடை சொல்லுங்கள். அரச காணிகளை யாரும் பிடித்தால் அதனை காணி அமைச்சு, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பொலிஸார், நீதிமன்றம் போன்றோர் பார்த்துக் கொள்வர். இதற்குள் ஏன் மதிப்புக்குரிய ஆயரவர்கள் தலையிட வேண்டும். அரச நிர்வாக இயந்திரம் அதனைப் பார்த்துக்கொள்ளும்.


மன்னார் ஆயரிடம் சில கேள்விகள்
* ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலா சாபம் விடுகிறீர்கள்? (ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி)
* புனித சவேரியாரின் வருகைக்கு முன்பே எம் அரேபியர்களின் வருகை மன்னாரிலிருந்தது என்பதை அறிவீர்களா?
* எம்மக்கள் வெளியேற்றப்பட்டபோது அது பிழையெனக்கூறி ஏன் நீங்கள் தடுக்க முன்வரவில்லை?
* எமது இறை இல்லங்கள் உடைக்கப்பட்டதை நீங்கள் ஏன் தடுக்கவில்லை?
* முசலிப் பிரதேச வீடுகள் யாவும் உடைக்கப்பட்டு கதவு, நிலை, மரங்கள், ஓடுகள், கற்கள் என்பன வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு விற்கப்பட்டதையும் மாவீரர் குடும்பங்களுக்காக மடுப்பிரதேசத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதையும் அறிவீர்களா?
* எம் பிரதேச மக்களின் ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் என்ன நடந்தது? யார் உடமையாக்கிக் கொண்டனர்.
* நீங்கள் வைத்துள்ள சர்வமத அமைப்பு என்பது வெறும் லேபலா?

யார் என்ன சொன்னாலும் உங்களின் பைபிளின் பழைய ஏற்பாட்டிற்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கும் தொடர்பை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் ஆமென் என்கிறீர்கள். நாம் ஆமீன் என்கிறோம். முதல் மனிதனை நாம் ஆதம் எனக்கூற, நீங்கள் ஆதாம் என்கிறீர்கள். இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இறைவனின் தண்டனைக்கு பயந்து ஒன்றுபடுவோமாக.
நன்றி: துருவம்  

திங்கள், 28 மே, 2012

கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?


தினசரி வாழ்க்கையில் இயற்பியல் எப்படி பயன்படுத்தப்படுகிறதுஇயற்பியலை மாணவர்களுக்கு புரியும் வகையில் எப்படிக் கற்றுத்தரலாம் என்பதிலிருந்துபள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை வழங்கி வருகிறார் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் டி.உத்ரா.

ந்த யோசனை எப்படி வந்தது என்று பேராசிரியை உத்ராவிடம் கேட்டபோதுஎன் மகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தபோதுஎன் பெற்றோர்  எனக்குச் சொன்ன கதைபுத்தகத்தில் நான் படித்த கதைகள் இவற்றை தவிர அவளுக்கு புதிதாக பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்தேன். அதன் அடிப்படையில் தினசரி வாழ்க்கையில் அறிவியலை நாம் எந்தெந்த வகையில் பயன்படுத்துகிறோம் என்பதை அவளுக்கு சின்னச் சின்னக் கதைகள் மூலம் சொல்ல ஆரம்பித்தேன். விளையாட்டாக கேட்க ஆரம்பித்த அவள்பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள அறிவியலை அவளாக கேட்டுத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு என் மகள் தெரிந்துகொண்ட அறிவியலை மற்ற குழந்தைகளும் தெரிந்துகொள்வதற்காக  கை கழுவுதல் ஆரம்பித்துசமையல் செய்தல் உள்பட எல்லாவற்றிலும் இயற்பியல் விதிகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை இதழ்களில் எழுத ஆரம்பித்தேன்.

இதுதவிர பள்ளி ஆரம்பித்து கல்லூரி வரை படிக்கவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்,பல மாணவர்கள் தங்கள் கல்வியை பின் தொடர முடியாத நிலை இருக்கிறது. இம்மாதிரியான மாணவர்களுக்கு  பல்வேறு தனியார்  நிறுவனங்கள்அரசு  அமைப்புகள்சமூகத் தொண்டு நிறுவனங்கள் கல்வி உதவித்தொகைகள்பாடப் புத்தகங்கள்கல்வி உபகரணங்கள்சீருடைகள்வழங்கி வருகின்றன. இம்மாதிரியான விஷயங்களை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொண்டால்இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு உதவித்தொகையை வைத்துக்கொண்டே படித்து முடித்துவிடலாம் என்று கூறும் உத்ராஇதுவரை 96 அறிவியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு  சர்வதேச அறிவியல் மாநாட்டில்நிறமாலைமானியியல் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.

கலை அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரிமுதுநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்து உத்ரா தொகுத்துத் தந்த தகவல்கள் இதோ:

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் என்ற அமைப்பு பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மூன்று ஆண்டுகாலம் படிப்புக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை அளிக்கிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னைசெங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். சாதிபாலினம் போன்ற எந்த விதிவிலக்கும் இந்த உதவித்தொகைக்கு கிடையாது.

விவரங்களுக்கு: www.ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட்

டிக்கும் ஆர்வமும் அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட். இந்த தனியார் நிறுவனம் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களும் சிறந்த கல்வியை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த உதவித்தொகையை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புதொழிற்கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள்Jaigopal Garodia Scholarships Centre, Jaigopal Garodia Vivekananda Vidyalaya Trust, U – 6, Seventh Street, Anna Nagar, Chennaiதொலைபேசி எண் : 26206261 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கௌரவ் ஃபவுண்டேஷன்

சென்னையில் இயங்கி வரும் கௌரவ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம்இந்திய மாணவர்களுக்கு ஆய்வு மற்றும்  உயர்கல்வி மேற்கொள்வதற்கு உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புஎம்.பி.பி.எஸ். பி.இ.பி.டெக். படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள்சி.ஏ.சி.எஸ்.இன்டீரியர் டெக்கரேஷன்ஃபேஷன்/டிசைன் சம்பந்தமான படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களும் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: http://gauravfoundation.org/scholarship.html
எஸ்.கே.டி.பி. தொண்டு நிறுவனம்

சென்னை  தி.நகரில் உள்ள எஸ்.கே.டி.பி. எனும் சமூக தொண்டு நிறுவனம் படிக்க வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை உதவித்தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.  சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் இந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கும் மற்றும் பிற பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது.

விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html
ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட் அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னைகாஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது
பிளஸ் டூ வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தற்போது ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : B-1, Narumukai apartment, Brindavan Nagar Extension, Adambakkam, Chennai – 88 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சோபியா நிறுவனம்

சென்னையில் உள்ள சோபியா என்ற தனியார் நிறுவனம்கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. பொறியியல் கல்லூரிமருத்துவக் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும்போதே இந்த உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதுகல்வி உதவித்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பிக்க முடியாது.

விவரங்களுக்கு : www.sophiascholarship.org

சாகு ஜெயின் டிரஸ்ட்

சாகு ஜெயின் டிரஸ்ட் என்ற அமைப்பு தொழிற்கல்விதொழில்நுட்பக் கல்வி மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக மாதம்தோறும் ரூ.150லிருந்து ரூ.1000 வரை உதவித்தொகை அளித்து வருகிறது. பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள்  பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பொருத்து இந்த உதவித்தொகை பெறுவதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விவரங்களுக்கு : http://sahujaintrust.timesofindia.com
ஃபவுண்டேஷன் ஃபார் அகாதெமிக்  எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம்

புதுதில்லியில் உள்ள பவுண்டேஷன் ஃபார் அகாதெமிக்  எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம் கலைவணிகம்,அறிவியல்மருத்துவம்பொறியியல்தொழில்நுட்பம் மற்றும் தொழிற்படிப்புஇளநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. பயணச்செலவாக ஆண்டுக்கு ரூ.1,000, கல்லூரியில் தங்கியிருந்து படிக்க ஆண்டுக்கு ரூ.9,000, ஆடைகள் வாங்க ஆண்டுக்கு ரூ.1000,புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.  மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு: www.faeaindia.org/index.asp

சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட்

பெங்களூருவில் உள்ள சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மாணவிகள் மற்றும் பிளஸ் டூ வகுப்பு முடித்துவிட்டு பட்டப் படிப்பு மேற்கொள்ளவிருக்கும் பிராமண சமுதாய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கிறது. பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : www.tamilbrahmins.com
டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பிளஸ் டூ முடித்துவிட்டு உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nellorebrahmins.com
ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ்

மும்பையைச் சேர்ந்த  ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ் என்ற அமைப்பு ஆண்டுதோறும்பிளஸ் டூ முடித்துவிட்டு முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்.பி.டி.எஸ்.ஆயுர்வேதம்ஹோமியோபதிஎன்ஜினீயரிங்பார்மஸி,கம்ப்யூட்டர் சயின்ஸ்வேளாண்மைகால்நடை அறிவியல்நர்ஸிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் பிளஸ் டூ வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்களும்இந்திய மாணவர்களாக இருப்பின் 60  சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்இந்த இலவச கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : shri brihad Bharatiya samaj, 178 NK Mehta International House, behind LIC Yogakshema, Babubhai chinai Marg, Backbay Reclamation, Mumbai – 400020.

இன்போசிஸ் அறக்கட்டளை

இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம்இன்போசிஸ்  அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பில் 80சதவீத மதிப்பெண்களுக்கு அதிகம் பெற்ற மாணவர்கள் தங்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : www.infosys.com/infosys_foundation/about.htm
தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு சமுதாயத்தில்  பொருளாதார அளவில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி சீருடை மற்றும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு.

விவரங்களுக்கு: womens voluntary service of tamilnadu, old no.19, New no.6, Near presidency school, mayor VR Ramanathan Road, chetpet, chennai. Phone: 044 – 28361434 , 28361825.

பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்

சென்னையைச் சேர்ந்த பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பார்வைத்திறன் அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவராக இருக்கவேண்டும் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம்புத்தகச் செலவு மற்றும் சீருடைகளுக்காக இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு : www.brightfutureforblind.com

Blog Archive