Breaking News
recent

(டைரி) நடமாடும் நாள்குறிப்பு

டைரி யென்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சேக் அப்துல் காதர் காக்கா காலங்காலமாய் நமதூரில் நடக்கும் விழா,மாநாடுகள்.முக்கிய சம்பவங்கள்.திருமணம்,காதனி நல் நிகழ்வுகள்.பிறப்பு,இறப்பு. இன்னார் இதை இன்னேரத்தில் செய்தார்-இதனால் நமதூருக்கு இன்ன நன்மைகள் அல்லது தீமைகள் ஏற்பட்டது. என்பதை தனது நாள் குறிப்பேட்டில் குறித்து வந்த தோடல்லாமல் எங்கு எப்பொழுது சம்பந்தப்பட்ட நடப்புகளை கேட்டாலும்,பட்..பட்டென நினைவுகூறும் ஆற்றலை வல்ல நாயன் அல்லாஹ் அவருக்கு வழ்ங்கியிருந்தான்.
ஒரு சம்பவம் எனக்கு நினைவு வருகிறது.எங்க வாப்பாகாலங்காலமாய் இருக்கும் பழங்கால சங்கத்தில் எங்கள் வாப்பிச்சாவுக்கும்,அப்பாவுக்கும் நடந்த கல்யாண திகதி(தேதி)கேட்டிருந்தார்கள்.சங்கத்தின் மிக மூத்த உறுப்பினரும் அரசியல் பிரமுகரும் தற்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பெரிய மனிதர் சொன்னார்கள்(அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுப்பானாக-ஆமின்). உங்க அப்பாவுக்கு கல்யாணம் முடிக்கும் போது நம்ம சங்கம் இருந்தது அப்ப இருந்த தஸ்தாவேஜில பாத்து சான்றிதழ் தருகிறேன்.அப்ப நான் தான் தலைவரு!
இரண்டு நாள் கழித்து என்னிடம் சொன்னார் திகதி விபரம் சரியா தெரியல-இக்கால புள்ளயொட்ட கொடுத்தோம் கானோம்ங்றாங்க ஆனாகா ரப்பர் ஸ்டாம்பும்,அந்த கால சங்கத்தின் காயிதமும்(லட்டர் பேட்)இருக்கு உங்க வாப்பாட்ட சொல்லி திகதி நாபகப்படுத்தி வா! நான் கையெழுத்துப்போட்டு காயிதம் தரேன்.(என்னடா இது வம்பா போச்சு தேதி கேட்டுத்தானே உறுதி கடிதம் கேட்டுப்போனோம்,இப்ப தேதிக்கு எங்கே போறது?-வாப்பாட்ட நடந்த விபரம் சொன்னேன்.வாப்பாவும் யோசிச்சாங்க ஒன்னும் புலப்பட வில்லை அவங்க காக்கா மார்களிடமும்,தம்பியிடமும் கேட்டும் அவங்களுக்கும் தெரியல!)
தீடீரன நான் விளையாட்ட சொன்னேன் - வாப்பா!
டைரி யிருக்காகல்ல அவொட்ட கேட்ட என்ன? வாப்பா முகத்தில் பிரகாசம்,சரியான ஆளத்தான் சொல்லியிருக்கே,ஆனா அவரு அந்த நேரத்துல சின்னப்புள்ள இருந்தாலும் கேட்டுப்பாரு அவரிடம் இருக்கும்!அதன் படி நான் கேட்டு அவர் பட்டென ஏதும் யோசிக்காம-ஒரு தேதி சொன்னாகள் அதன் பிறகு ஒப்பிட்டு சரிப்பார்த்து வாப்ப மிகச்சரின்னு சொன்னார்கள்.
அதென் பிரகாரமே சான்றிதல் பெறப்பட்டது. தம்முடைய சிரு வயதிலிருந்தே தன் வயதையும் மீறி முன்பு நடந்த முக்கிய நிகழ்வுகளை,கணினி வரும் முன்பே பதிந்தவர் -டைரி அப்பா!(காக்கா)!. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு நிகழ்வுகள் அவர்களின் மூளையில் பதிந்திருந்தது.அன்னாரின் குடும்பத்திற்கு அல்லாஹ் சாந்தியும் சமாதானமும் உண்டாக்குவானாக!ஆமின்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.