Breaking News
recent

ரிட்டன் விசா 8

அந்த ஜென்ரல் வார்டை அடைந்தவுடன்,கபூர் மூக்கப்பொத்திக்கொண்டான்.(அமேரிக்கா ரிட்டன்)சே!! இந்தியா இன்னும் முன்னேறல!ஒரே பினாயில் வாட,இதுவே நோயாளிய மேலும் நோயாளியாக்கிடும்.சாதாரண விசிட்டர்கலுக்கு நோய் தொத்திக்கும். உங்களுக்கு ஏதும் பன்னல? என்ன தம்பி சொல்றியோ இதெல்லம் நமக்கு பலக்கமானது தானே?- நானா.
மச்சான் அமேரிக்கவுல அஞ்சு வருசம் இருந்துட்ட்டு வந்திருகாக அதான் இந்த வாட புடிக்கல!-அப்பாஸ்.அப்படியா தம்பி நல்லது.இப்ப எப்படி அம்ரிக்க பொறுளாதாரம் இருக்குது?ரொம்ப மோசமச்சாமே?யாருதம்பி எலக்சனுல ஜெயிப்பா?யாருன்னு தெளிவா தெரியல-ஒபாமா கொஞ்சம் மெக்கைனவிட முண்ணனி சதவித ஆதரவுடன் இருக்கிறார்.(ஜமால் இருந்த பெட்டை அடைந்தனர்.குளுக்கோஸ்-ட்ரிப் ஏறி கொண்டிருந்தது.தலையில் கட்டு கட்டியிருந்தது.வலது கையில் மூன்று இடத்திலும்,இடது கையில் இரண்டு இடத்திலும் சின்ன,சின்னதாய் கட்டு போடப்பட்டிருந்தது).ஜமால்!மெதுவாக கூப்பிடுப்பார்த்தான்.இந்த சலனமும் ஜமாலிடம் இல்லை ஆனால் மூச்சு விடுவது நன்கு கேட்டதுடன் அவன் நெஞ்சு கூடு ஏறி இறங்கியது.ஜமால் கொஞ்சம் சத்தம் ஏற்றி கூப்பிட்டான். யார் சார் நீங்கள்?
உங்கள யார் இங்க விட்டது? பேசண்ட பாக்க அனுமதி வாங்கி இருகியலா? முத்துப்பேட்டை உஜாலா உடுத்தும் கலரில் நர்ஸ் உடை உடுத்தியிருந்தால். கதையில வரமாதிரி வர்ணிக்கலான்னா- அப்புறமா செக்கடி மோடுல என் பேர நாறடிச்சுடுவாங்க.
மன்னிச்சுகம்மா இவரு அவருடைய அத்தான் -இஸ்மாயில் நானா.
அதுக்கில்ல சார் பேசன்டுக்கு ஏதாச்சம் ஆச்சுன்னா நாதான் பதில் சொல்லியாவனும்.மேலும், நீங்க உங்க பேசன்ட்டுட்ட பேசும்போது மத்த பேசன்டுக்கும் எடன்சலா இருக்கும்.பாக்க முஸ்லிம் பாய்ங்க மாரி தெரியிரிங்க தனி ரூம்ல செலவ பாக்காம சேக்க வேண்டியதுதானே சார்? அது இல்லமா நா இந்த தம்பிய அட்மிட் பண்னும்போது என்ட்ட வெரும் ரெண்டாயிரது முன்னூத்தி சொச்சம் மட்டும் இருந்தது.அவசரமா ஸ்டிசிங் போடனுன்னு சொன்னதுனால கையில இருந்தத கட்டிட்டேன் -இஸ்மாயில் நானா. இப்ப இவர வேற ரூம்ல அட்மிட் பன்ன முடியுமா?-கபூர் நர்ஸிடம் கேட்டான்.எங்கலால முடியாது டாக்டர் செக்கிங் வரும் போது கேளுங்க.மீதிப்பணத்தை ஆபிஸ்ல கட்டிடிங்கன்னா வேறு ரூம்ல மாத்திடுவாங்க!இப்பத்தான் இவருக்கு வலி தெரியாம இருக்க மயக்க ஊசி போட்டிருக்கோம்.ஏழு மணி வாகில் நினவு திரும்பிடும்.டாக்டர் எட்டு மணிக்கு வருவாரு,அப்புறமா மாத்திக்கலாம்.
சரி நாங்க போயி டீ சாப்ட்டுட்டு வரோம்.அஙேந்து கிளம்பி காபி சாப் நோக்கி போனாங்க. நானா நீங்க வீட்டுக்குப் போங்க மத்தத பொறவு பாக்கலாம்,மொதல்ல நல்ல ஹோட்டலுக்கு போயி சாப்புடலாம் .பாவம் காலைலேந்து பட்டினிக்கடப்பியோ.
சொல்லி விட்டு அவரு கையில் பத்தாயிரத்த திணிச்சான்.
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.