- ஓட்டமும் நடையுமாக,
- வேகமும் விறுவிறுப்புமாக!
- தூக்கத்தை மிச்சம் வைத்து.முதல் நாள் தூக்கத்தை மறுநாள் தொடரும் கண்கள்!
- குளிரை மறைக்க ஒல்லி உடம்பை குண்டாக்கும் சாகசம்!
- ஒரு நாள்-ஒரு வேலை உணவு!மூன்று மிடர் தேணீர் விழுங்கள்!
- கூட்ட நெருசலில் பஸ்ஸிலோ இரைலிலோ-மாறி மாறி செல்லும் அவஸ்தை!
- அப்பாடா...வந்து விட்டோம் வேலைக்கு...!
- என பெருமூச்சு விடும் கணத்தில்...
- சம்ளத்தை கூட்டியோ அல்லது
- -முன் சம்பளத்தையோ கேட்டு விடக்கூடாது என்பதற்காக,
- திட்டிதீர்க்கும் முதலாளி,சூப்பர் வைசர்!
- இன்னும் யாருக்கொள்ளாம் பயப்படக்கூடாது என்ற வெவஸ்த்தையே இல்லாமல்
- "இவன் அவனா இருப்பானோ?" என்ற திகில்!
- வேலை முடித்து நொந்து நூலாகி...
- நடமாடும் பிணமாக அறை வந்து சேர்ந்து
- -மறுநாள் விழிப்பதற்காக உறங்கி....அப்பப்பா.....!சொல்லி முடியாது!
- சம்பளமோ வரி-இன்ஸுரன்ஸ் என்று எடுத்துக்கொண்டு தருகையில்...
- என் நாட்டின் சுதந்திரத்திற்காக....
- எம் முன்னோர்விட்ட குருதியும்,
- மூச்சும் வீணாய் போய்விட்டதே...!
- என்கிற நினைப்பைத்தவிர வேரொன்றும் செய்வதற்கில்லை....!
அபு ஜுலைஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்