Breaking News
recent

ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு!

1. சீதக்காதி அறக்கட்டளையினரால் ஆண்டுதோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு வழங்கி வருகிறது.2. 2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெறும் சிறந்த நூலுக்கு ரூ. 30,000/- பரிசு வழங்கப் பெறும்.3. இப்பரிசுக்காக இவ்வாண்டு 'இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாறு - தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை' எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.4. நூல்கள் ஏ4 அளவில் கணினி அச்சில், இடம் விட்டு 200 பக்கங்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும். ( இது புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ - டெம்மி புத்தக அளவு 200 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் )5. தாளில் ஒரு புறம் மட்டும் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும்.6. தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்து படிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.7. தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2009 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு வந்து சேர வேண்டும்8. நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000 வழங்கப்படும்.9. தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.10. தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையை பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.11. தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது.12. 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும்விவரமான விதிமுறைகளுக்கு எழுதவும்.செயலாளர் சீதக்காதி அறக்கட்டளைஇஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்சீதக்காதி மணிமாடம்272 ( 688 ) அண்ணா சாலைசென்னை 600 006
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.