Breaking News
recent

ரிட்டன் விசா 1

(அதிரை மண் மணம் வீசும் தொடர் கதை)

நெலா சோறு சாப்புடலமுனு என் புள்ள ஆசப்பட்டுச்சி!அதான் மீனாச்சிட்ட சொல்லி கடத்தெருவுல ராலும்,மொச்ச கொட்டயும் வாங்கி வரசொல்லிருக்கேன்,கலுச்சல போறவள இன்னும் கானமே!எங்க புறாக்குப்பாத்டுக்கிட்டு இருக்காளோ தெரியல!ராத்திரிக்கிதானெ ராத்தா நெலா சோரு சாப்புட போரிய அதுக்கு இப்ப ஏ அவல கலுச்சல போக சொரிய ராத்தா! அடி இவள,அவ வந்துட்டாக்கா,கொஞ்சம் கொத்த மல்லி அரைக்க அனுப்பனும் அதான் பாக்குறேன்.அவ வரட்டும் நா போய் அரச்சிட்டு வரனே ராத்தா! நல்லா இருப்பேடி நூறு ஆயுசுக்குக் கெடப்பா போய்ட்டு வா காக்கா எந்திருச்சதும் காசு வாங்கித்தரேன்.(அம்ரிக்காவிலிருந்து மகன் ,மருமக, பேத்திகள் வந்ததுல செலயாமத்தாவுக்கு ரொம்ப சந்தொசம்,பைஞ்சு நாளா ஒரேதடபுடல் கவனிப்பு மகன் கபூரு ஒரே புள்ள) உம்மா வாப்பா எங்கே?-கபூர்.ஆட்டுத்தல வக்க கொடுத்தாக அதான் வாங்க போயிருக்காக,எதுக்கு வாப்ப கேக்குற? சும்மதாம்மா கேட்டேன்!ம்ம் நீயும் போய் அஞ்சு வருசமாய் ஒரு புள்ளயெ பெத்தவ தவிக்கிறது இருக்கே!யாம்ம அதெய சொல்லிக்கிட்டு இருக்கிய இப்பத்தான் நான் வந்துட்டேன்ல.இனி ரெஜினாவும் புள்ளயும் இங்கத்தான் இருப்பாக-ரெண்டு வருசம் கழிச்சி கூப்புடலாமுனு இருக்கேன்.உனக்கும் தொனயா இருக்கும் .அவங் உம்மா,ரெண்டுத்தங்கச்சி யிருக்குரதுனால பிரச்சன இல்ல!ஜாமாலும்(மைத்துணன்)ஊரோடவே இருக்கான்.எ மாமனாருட சொத்து பாக்குறதுலேயே அவன் நேரம் சரியா ஈக்குது. நானே சரியா அவனப்பாத்து அஞ்சு நாளாவுதும்மா! என்ன செய்றது எங்க காக்க மொளத்தான பொறவு இவனா இருக்குரதாலெ, எல்லாசரியா செஞ்சுக்கிட்டு வறான். அப்பப்ப உங்க வாப்பவ கலங்துகிட்டுத்தான் ஏதும் செய்வான்.பாவ அவனுக்குத்தான் ஆண்டவன் ஒரு புள்ளய கொடுக்கனும், நானு எல்லா நேத்தி கடனும் நேந்துட்டேன்.யாம்ம ஒரு நல்ல டாக்டருட்ட அவனும் அவன் பொண்டாட்டியும் காட்ட வேண்டியதுதானே!அவன் காட்டாத எடமில்ல வாப்பா! நேத்துகூட கரயதெருவில இருந்தாரெ,மவுலாஇஸ்லா(ம்)! யாரு?சைக்கள்ள வருவாரெ ,பேரு முஸலியார் அவரா? அவருதா வாப்பா!(அவங்க பேசிகிட்டு இருக்கும் போது மீனாச்சி வீட்டுக்குள் நுழைரா!)
ஏன்டி இவள ஏ இவ்ளோ நேர(ம்).எஙாவது சுத்திட்டு வறீயா?எவ்வள நேரமா நா வாசலுக்கும் நடு ஊட்டுக்குங் லாத்துறது?உன்ன பாத்துட்டு கானாம சாரமாட்ட கொத்த மல்லி அரய்க சொல்லி அனுப்பிருக்கேன். நீங்க வேர ராத்தா வெயில போனாக்கா வெரலியத்துகிட்டு வருது,ரால் காரனுவ நெருப்பு வெல சொல்ரானுவ மரக்க ஊட்டுக்குனு சொன்ன எங்க காதுல வாங்குரானுவ! போ எதாவது நொன்டி சாக்கு சொல்லு! பாருங்க தம்பி ராத்த எப்பவும் இப்படித்தா! கபூர் என்னா சொல்ரதுன்னு நெளிஞ்சான்.இந்தா புள்ளட்ட உன்ன யாருஇதெல்லா(ம்)கொட்டச் சொன்னது போயி புள்ளக்கி டீ போட்டுட்டுவா!
(வாப்பா ஊட்டுக்கு நுழைகிறாங்க- வரும் போதெ ஒரு கனப்பு கனச்சுகிட்டுத்தான் நுழைவாங்க!அதே பலக்கம் தான் கபூருக்கும் வந்திருக்கு)வாங்க வாப்பா-கபூர். வா தம்பி(அப்படிதான் கூப்புடுவாக) இன்ன உங்க உம்மா என்ன சொல்றா,ஏதாவது கொட,கொடன்னு கொட்டிகிட்டு இருப்பல!அதலாம் இல்ல வாப்பா சும்மா நம்ம குடும்ப சேதிதான் பேசிக்கிட்டு இருந்தோ(ம்).என்ன ஏதச்சு சொல்லலன உங்க வாப்பவுக்குத்தூக்கம் வராது-'செலயாமத்தா'
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.