சைனீஸ், தந்தூரி, செட்டிநாடு, கொங்குநாடு, தாய், கான்டினென்டல் என்று உணவு வகைகள் பிரபலமாகி வருகிற காலம் இது. விதவிதமான சமையலுக்கு ஏங்கும் உள்ளங்கள் இருக்கிறவரை இதன் மவுஸும் குறைவதில்லை.
அதனால் படிப்பதற்கு, குறிப்பாக சம்பாதிப்பதற்கு ரொம்பவே உதவும் துறை தான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்!
ஓட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் என்பது எதைப் பற்றியது?
ே ஓட்டலை நிர்வகிக்கும் திறன்
ே வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம்
ே சுகாதாரத்துடன் உணவு சமைப்பது
ே உணவைச் சரிவரப் பரிமாறுவது போன்ற A to Z விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பதற்கு அடிப்படைத் தகுதிகள் என்னென்ன?
பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்கும் யாரும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கலாம்.
எங்கே படிக்கலாம்?
ே மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் இரண்டு வருடம் பி.எஸ்.சி. ஓட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் சேரலாம்.
ே பாரதியார் யுனிவர்சிட்டியில் _ MBA., இரண்டு ஆண்டுகள் ஓட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் டூரிஸம் கோர்ஸ் சேரலாம்.
வேலைவாய்ப்புகள்
ே வங்கிகளின் மூலம் கடன் உதவி பெற்று, சுயமாக ஓட்டல், ரெஸ்டாரண்ட், ஃபாஸ்ட்ஃபுட் சென்டர்கள் நடத்தி நிறைய சம்பாதிக்கலாம்.
ே பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் உயர்ந்த பதவிகளை அடையலாம்!
ே மேலை நாடுகளில் உள்ள ஸ்டார் ஓட்டல்களில், நம் இந்தியப் பெண்மணிகள் ஓட்டல் மேனேஜராகப் பணிபுரிகிறார்கள். அவர்களுக்குத்தான் இப்போது கிராக்கி அதிகமாக இருக்கிறது.
எவ்வளவு சம்பாதிக்கலாம்?
ஓட்டலைப் பொறுத்து சம்பளம் மாறுபடும். சூப்பர்வைசர், சர்வர், குக் செய்பவர்கள் ரூ. 5000 முதல் ரூ. 50,000 வரை அனுபவத்திற்கேற்ப சம்பாதிக்கலாம். மேனேஜர் பதவிக்கு லட்சங்களில் சம்பளம் கிடைக்கும்.
பெரிய பெரிய ஹோட்டல்களில் HR பதவி காத்திருக்கிறது!
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸை சாதாரணமாக நினைக்காதீர்கள். மல்ட்டி டாஸ்கிங் என்று சொல்லப்படுகின்ற ஒரே நேரத்தில் பல பிரச்னைகளை சமாளிக்கின்ற திறமை பெண்களுக்கு இயல்பாகவே இருப்பதால், பெரிய ஸ்டார் ஹோட்டல்களில்HR(human resource) டிபார்ட்மெண்ட்டின் தலைமைப் பொறுப்புகளில் பெண்களே இருக்கிறார்கள். இது மட்டுமில்லை, ஹோட்டல் ரிஜப்ஜனிஸ்ட்,செஃப், மேனேஜர்.... என்று பல வேலைகள் காத்திருக்கின்றன. ஸ்டார் ஹோட்டல்களில் வருகின்ற வி.ஐ.பி.களுக்கு முறைப்படி உணவைப் பரிமாறுவதற்கென்றே ஆட்கள் தனியாக தேவைப்படுகிறார்கள். `எடுத்தோம் கவிழ்த்தோம்' என்ற மனநிலை பெண்களுக்குக் கிடையாது. அதனால் தாராளமா இந்தத் துறையில் ஜொலிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்