Breaking News
recent

வாஞ்ஜூர் காக்காவும் ஞாநி அண்ணும்

நம்ம 'உணர்வு' பத்திரிக்கையிலேயே இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதம்' என்று ஞானி பேட்டிகொடுத்து அதை அந்த பத்திரிக்கை அப்படியே வெளியிட்டுள்ளதையும் பாருங்கள்

உணர்வு: நாட்டில் எங்கு குண்டுவெடித்தாலும் விசாரணை மேற்க்கொள்வதற்கு முன்பே,முஸ்லீம் இயக்கங்கள் மீது பலி போடப்படுவது என்..?

ஞானி: இது தவறான போக்கு. அணுகுமுறை. அரசுநிர்வாகங்களில் இருக்கும் இஸ்லாம் எதிப்பு உணர்வாளர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதால் இது நடக்கிறது.
உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதமும் ,மும்பைக்குண்டு வெடிப்புகளும்,ஜிகாத் என்ற பெயரால் இஸ்லாமிய மத வெறியுடைய சில பயங்கரவாதிகள் செய்யப்படுவதால் சாதரண மக்கள் மனதில் எல்லா பயங்கரவாதமும் முஸ்லிம்கள் செய்வதாகத்தான் இருக்கும் என்ற தவறான கருத்தை ஏற்க செய்யும் சாதகமான அம்சங்களாகி விட்டன.

இங்கே ஞானி நடுநிலையாக கருத்து சொல்வது போல் சொல்லி , உலகளாவிய பயங்கரவாதம் எதோ முஸ்லிம்கள் மட்டும் செய்வது போன்ற கருத்தை உதிர்த்துள்ளார்.

ஞானியும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்று நாம் சொல்லவரவில்லை. தீவிரவாதம் விசயத்தில் மற்றவர்கள் எப்படி முஸ்லிம்களை தவறாக புரிந்து உள்ளார்களோ அப்படித்தான் ஞானியும் புரிந்துள்ளார்கள்.

என்று வாஞ்ஜுர் காக்கா சொல்லிவைக்க....

//முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாகப் படிக்காமல் கவனமாகப் படித்துக் கருத்தைப் புரியுங்கள் என்ற வாஞ்சூரின் ”அறிவுரை” அவர் எழுதுவதற்கும் பொருந்தும்.

என் பதில்களிலிருந்து ஒரு வரியைப் பிய்த்துக் கொடுத்து இன்னொரு அர்த்தம் வருவது போலச் செய்வது தவறானது.

தொடர்ந்து என் எல்லா கட்டுரைகளையும் படித்து வருபவர்களுக்கு நான் எந்த பயங்கரவாதத்தையும் மத அடைமொழியுடன் குறிப்பிடுவதை ஆதரிக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் போக்கை தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வருகிறேன் என்பதும் தெரியும்.

ஆதரவு சக்திகளை எதிர் சக்திகளாக சித்திரிக்கும் புத்திசாலித்தனம் உண்மையில் முட்டாள்தனமானது.மேற்படி வாக்கியத்தில் கூட உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை செய்பவர்கள் இஸ்லாமிய மத வெறியுடைய ஒரு சில பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதற்கு வாஞ்சூர் சொல்லும் தவறான அர்த்தத்தில் நான் எழுதவில்லை.நான் ஓர் நாத்திகன் என்பது இந்து மதவாதிகளுக்கும் போலி பகுத்தறிவாலர்களுக்கும்தான் சிக்கலாக இருக்கிறது என்று கருதினேன்.

வாஞ்சூர் போன்ற இஸ்லாமிய மதவாதிக்கும் இது ஒருவேளை சிக்கலோ ?

அன்புடன் ஞாநி.//


என்று மறுபடியும் வாழைப்பழத்தில் ஊசியை பலமாக குத்தியுள்ளார்...!

நம்ம காக்காவும்...தாங்களுடைய‌ விள‌க்க‌த்தால் தெளிவ‌டைந்தோம். ஞானி அவர்களுக்கு என்னுடைய நன்றி.- வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்...!!!


ஞாநி நீங்க, பார்பணீயத்தை காப்பாற்றும் கம்யூனிஸ்டுகளைப்போல்....

பார்பணீயத்தை காப்பாற்றும்

நாத்திகறோ......?
- அபு ஜுலைஹா-
Unknown

Unknown

1 கருத்து:

  1. "ஞாநி நீங்க, பார்பணீயத்தை காப்பாற்றும் கம்யூனிஸ்டுகளைப்போல்....

    பார்பணீயத்தை காப்பாற்றும்

    நாத்திகறோ......?"

    உன்மையான வரிகள் பதில் ஞாநியிடம் உண்டா?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.