Breaking News
recent

'புஷ் புகழ் ஷூ' கம்பெனிக்கு திடீர் கிராக்கி-100 பேருக்கு வேலை!

'புஷ் புகழ் ஷூ' கம்பெனிக்கு திடீர் கிராக்கி-100 பேருக்கு வேலை!

இஸ்தான்புல்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எறியப்பட்ட ஷூவைத் தயாரித்த நிறுவனத்திற்கு பயங்கர கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த கம்பெனிக்கு திடீரென ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் 100 பேரை புதிதாக வேலைக்குப் போட்டு விறுவிறுவென ஷூக்களைத் தயாரித்துத் தள்ளுகிறதாம் அந்த நிறுவனம்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஷூ நிறுவனம் பெய்டன் ஷூ கம்பெனி. இந்த நிறுவனத்தின் ஷூக்களைத்தான் பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி அணிந்திருந்தார். இதைத்தான் புஷ் மீது அவர் வீசினார்.

குவியும் ஆர்டர்கள்

இதையடுத்து பெய்டன் ஷூக்களுக்கும் படு கிராக்கி ஆகி விட்டது. இதனால் உச்சி குளிர்ந்து போயிருப்பவர் பெய்டன் ஷூ நிறுவனத்தின் உரிமையாளரான ரமஸான் பெய்டன்தான். அவரது நிறுவனத்திடம் முன்டாசர் வீசி எறிந்த அதே டைப், அதே கலர் (கருப்பு) ஷூக்களைக் கேட்டு ஆர்டர்கள் குவிந்துள்ளனவாம்.




உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்திருப்பதால் புளகாங்கிதமடைந்துள்ள பெய்டன், இரவு பகலாக ஷூக்களைத் தயாரிக்க தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

100 பேருக்கு வேலை

வருகிற ஆர்டர்களைப் பார்த்தால் இருக்கிற ஆட்களை வைத்து கட்டுப்படியாகாது என்று உணர்ந்து புதிதாக 100 பேரை ரெக்ரூட் செய்து ஜல்தியாக ஷூ தயாரிப்பை முடுக்கி விட்டுள்ளாராம் பெய்டன்.

தற்போது 3 லட்சம் ஷூக்களைக் கேட்டு ஆர்டர்கள் வந்துள்ளதாம். இது அவருடைய நிறுவனத்தின் ஆண்டு தயாரிப்பை விட நான்கு மடங்கு அதிகமாம்.

இதில் வேடிக்கை என்னெவன்றால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்துதான் அதிக அளவில் ஆர்டர்கள் வந்துள்ளதாம். பக்கத்து முஸ்லீம் நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் அதிகம் வந்திருக்கிறதாம்.

ஈராக்கிலிருந்து மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆர்டர்கள் வந்துள்ளதாம். அமெரிக்க நிறுவனம் ஒன்று 18 ஆயிரம் ஷூக்களை சப்ளை செய்யுமாறு கேட்டுள்ளதாம். ஒரு இங்கிலாந்து நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக கணிசமான அளவில் ஆர்டர் போட்டுள்ளதாம்.

'பை பை புஷ் - புஷ் ஷூ'

பெய்டன் ஷூ கம்பெனி 1999ம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு ஷூ, ஜோடி 28 பிராங்குகளுக்கு துருக்கியில் விற்கப்படுகிறது.

தற்போது தங்களது நிறுவன ஷூக்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியைப் பயன்படுத்தி, பெய்டன் நிறுவனம் புஷ் மீது எறியப்பட்ட ஷூ வகைக்கு புஷ் ஷூ அல்லது பை பை புஷ் என்று பெயரிட தீர்மானித்துள்ளதாம்.

ஜெய்தி குடும்பத்துக்கு ஷூ இலவசம்!

இதற்கிடையே, ஜெய்தி புண்ணியத்தில் சிரியா, எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளில் ஷூக்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாம். செருப்பே போடாதவர்கள் கூட ஷூ வாங்க ஆர்வம் காட்டுகின்றனராம்.

இதை விட முக்கியமாக இந்த நாடுகளின் ஷூ தயாரிப்பாளர்கள் சங்கம் ஜெய்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்நாள் முழுவதும் ஷூக்களை இலவசமாக தருவதாக அறிவித்துள்ளன.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

1 கருத்து:

  1. தனது வாழ்நாளில் "புஷ்" செஞ்ச நல்ல காரியம் 100 பேருக்கு வேலை வாங்கிகொடுத்தது தான்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.