இதுவரை நடந்த 12 தேர்தல்கள்: திருமங்கலம் தொகுதி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல்மும்முனை போட்டியால் பிரசாரம் களை கட்டியது
திருமங்கலம், டிச.20-
சுதந்திர காலத்துக்குப் பின்இதுவரைநடந்த தேர்தலில் இப்போது தான் திருமங்கலம் தொகுதி முதல் முறை யாக இடைத்தேர்தலை சந்திக்கிறது.
இதுவரை 12 தேர்தல்கள்
திருமங்கலம் தொகுதி கடந்த 1952 முதல் 2001-ம் ஆண்டு வரை 12 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள் ளது. சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா 1 முறை வெற்றி பெற்றுள் ளது.
இந்த தொகுதியில் காம ராஜரால் அறிமுகப்படுத்தப் பட்ட என்.எஸ்.வி. சித்தன் மட்டும் 6 முறை போட்டி யிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது இவர் இந்த சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்.
சுதந்திரம் அடைந்த பின் அமைந்த முதல் சட்டசபை யிலும், தனிக்கட்சி தொடங்கி எம்.ஜி.ஆர். கடந்த 1977-ம் ஆண்டு ஆட்சி அமைத்த முதல் சட்டசபையிலும் திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரான பி.டி.சரஸ்வதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. ஜெயல லிதா தலைமையில் கடந்த 2001-ம் ஆண்டு ஆட்சி அமைந்த போது இங்கு வெற்றி பெற்ற காளிமுத்து சபாநாயகராக பதவி ஏற்றார்.
கடந்த 77-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.முக. சார்பில் வெற்றி பெற்ற பி.டி. சரஸ்வதி, 89-ல் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சாமிநாதன் ஆகி யோர் 2 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த னர். மற்ற 10 எம்.எல்.ஏ.க்களும் முழுமை யாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தனர்.
1971-ல் இங்கு வெற்றி பெற்ற ரத்தினசாமி தேவர் திருமங் கலம் ஒன்றிய தலைவராகவும், பேரூராட்சி தலைவராகவும் இருந்தார். தற்போது ராமநாத புரம் பாராளுமன்ற உறுப்பின ராக உள்ள பவானி ராஜேந் திரன் இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடைத்தேர்தல்
இத்தனை ஆண்டு கால வரலாற்றில் 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வீர. இளவரசன் மரணம் அடைந் ததை யொட்டி திருமங்கலம் தொகுதி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் ஆகும்.
தற்போது திருமங்கலம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. சார்பில் லதா அதிய மான், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், தே.மு.தி.க. சார்பில் தனபாண்டியன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள் ளனர். இவர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் வேட் பாளர்கள் இடையே தான் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாரம் அங்கு களை கட்டத் தொடங்கி உள்ளது.
AdiraiPost
திருமங்கலம்
இதுவரை நடந்த 12 தேர்தல்கள்: திருமங்கலம் தொகுதி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல்மும்முனை போட்டியால் பிரசாரம் களை கட்டியது
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்