ஆங்கில கையெழுத்தில் மாநிலத்தில் 2-ம் இடம்பெற்ற மாணவிக்கு பாராட்டு
மாநில அளவில் ஆங்கில கையெழுத்தில் இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கு காயல்பட்டினத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் பள்ளி 4-ம் வகுப்பு மாணவி எஸ். பாத்திமா நுûஸபா அண்மையில் தனியார் நிறுவனம் நடத்திய மாநில அளவிலான ஆங்கில கையெழுத்துப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.
இவருக்கு காயல்பட்டினம் தாயிம் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தாயிம் பள்ளிச் செயலர் எம். அஹமது தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், மாணவிக்கு பள்ளிப் பொருளாளர் கே.எம். தவ்லத் பரிசு வழங்கினார்.
விழாவில் ஏ.ஆர். தாஹா, மஜ்லிசுல் கெüது சங்க துணைத் தலைவர் எம்.எச். நியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சங்கத் தலைவர் ஏ. லெப்பை சாகிப் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்