லஞ்சம் வாங்கியதாக கைது ஆன அதிகாரி வீட்டில் அரசின் ரூ.20 கோடி செக்குகள் சிக்கின
200 பவுன் நகைகள், சொத்து தஸ்தாவேஜ×கள் பறிமுதல்
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி வீட்டில் அரசுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள செக்குகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் 200 பவுன் நகைகள் மற்றும் பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்ததற்கான தஸ்தாவேஜ×களும் சிக்கி உள்ளன.
மாவட்ட வருவாய் அதிகாரி கைது
கரூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தவர் ஜவஹர் சாந்தகுமார். இவர் செல்வகுமார் என்ற விவசாயியிடம் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் பங்குத்தொகை பெற்ற தலைமை எழுத்தர் ஆனந்தசேகர் என்ற ஊழியரும் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட வருவாய் அதிகாரியையும், தலைமை எழுத்தரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட வருவாய் அதிகாரியின் வீட்டில் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்த பத்திரங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
ரூ.20 கோடிக்கு செக்குகள்
இந்த சோதனையின் போது அதிகாரி ஜவஹர் சாந்தகுமார் வீட்டில் ரூ.19 கோடியே 88 லட்சத்துக்கான செக்குகள் மறைத்து வைத்து இருந்ததை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த செக்குகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அவைகள் அரசுக்கு சொந்தமான செக்குகள்.
இந்த செக்குகள் அனைத்தும் கரூரில் கோவை ரோட்டில் சாலையை அகலப்படுத்த நிலம் கையகப்படுத்தப்பட்ட 460 பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகை அளிக்க அரசால் ஒதுக்கப்பட்ட செக்குகள். இந்த செக்குகளை கைப்பற்றிய போலீசார் அதனை கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் ஒப்படைத்து உரிய பயனாளிகளுக்கு கொடுக்க கேட்டுக்கொண்டனர். இந்த செக்குகளை அவர் ஏன் வீட்டில் வைத்து இருந்தார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை வீட்டில்...
ஜவஹர் சாந்தகுமாருக்கு சென்னை அண்ணாநகரில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தி ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் ரொக்க பணம், 200 பவுன் தங்க நகைகளும் மற்றும் பல்வேறு வங்கிகளின் கணக்கு புத்தகங்களையும் கைப்பற்றினார்கள்.
கைது செய்யப்பட்ட ஜவஹர் சாந்தகுமாரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆகும். கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி முதல் கரூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
மாவட்ட அளவில் ஒரு பெரிய அதிகாரி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டது கரூர் மாவட்ட அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
AdiraiPost
அதிகாரி
லஞ்சம்
லஞ்சம் வாங்கியதாக கைது ஆன அதிகாரி வீட்டில் அரசின் ரூ.20 கோடி செக்குகள் சிக்கின
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதிகாரி என்ற போர்வைக்குள் இதுவரை ஒளிந்துக்கொண்டிருந்த லஞ்சபேய் வெளிவந்தது வியப்பாகதான் இருக்கு.
பதிலளிநீக்குநாடு கடத்த வேண்டும்......
பதிலளிநீக்குசமீப காலமாக நம்ம தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் ஆபிஸ் பாயிலிருந்து - அதிகாரிகள் வரை "லஞ்ச ஒழிப்பு "காவல்தூறையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது பாராட்டதக்கது.
பதிலளிநீக்குமக்களை கசக்கிபிழியும் இத்தகைய அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை கொடுத்து
தமிழகத்திலிருந்து லஞ்ச லாவண்யங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவேண்டும்