Breaking News
recent

பக்ரீத்: தேமுதிக சார்பில் 200 பேருக்கு குர்பானி வழங்கல்

பக்ரீத்: 200 பேருக்கு குர்பானி வழங்கல்

திருப்பூர், டிச.9: பக்ரீத் பண்டிகையையொட்டி தேமுதிக தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை குர்பானி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏழை முஸ்லிம்கள் 200 பேருக்கு தலா ஒரு கிலோ வீதம் மாமிசம் இலவசமாக வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சிக்கு மாநில தொழிற்சங்க செயலர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். தொழில்அதிபர் லிங்சவுகத்அலி மாமிசங்களை வழங்கினார்.

மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி, நகர செயலாளர் பாஸ்ட் கே.பழனிச்சாமி, தொழிற்சங்க நகர செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.