மங்களூரில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருந்த நைஜீரியா வாலிபர்கள் 2 பேர் கைது
மங்களூர், டிச.26-
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள், பாஸ்போர்ட் இல்லாமல் கடந்த ஒரு வருடமாக மங்களூரில் தங்கி இருந்தனர். இதையொட்டி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தீவிர நடவடிக்கை
கர்நாடகத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மாநில அரசு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் தங்கி இருக்கும் வெளிநாட்டினரை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி போலீசார் மங்களூர், கார்வார் போன்ற கடற்கரை நகரங்களில் தீவிர சோதனை நடத்தி சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நைஜீரியா வாலிபர்கள்
மங்களூர் நகரில் உள்ள பல்மட்டா சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றின் அருகே போலீசார் ரோந்து சுற்றி வந்தார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் திரிந்து கொண்டு இருந்தார்கள்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது 2 பேரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.
பாஸ்போர்ட் இல்லை
அவர்களிடம், ``உங்கள் பாஸ்போர்ட்டை காட்டுங்கள்'' என்று போலீசார் கேட்டனர். அதற்கு இருவரும், ``நாங்கள் நைஜீரியாவில் இருந்து மும்பை வந்தோம். மும்பை ரெயில் நிலையத்தில் எங்களது பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. இதுகுறித்து மும்பை ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் செய்து இருக்கிறோம்'` என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வருடமாக 2 பேரும் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் மங்களூரில் ரகசியமாக தங்கி இருந்ததும் தெரியவதது.
கைது
இதை தொடர்ந்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பெயர் கென்னல் ஒகை ஏஸ் (வயது 30). இன்னொருவர் பெயர் பென்னில் ஈக் பாண்ட் (32). இவர்களில் கென்னல் இடமிருந்து ஒரு போலி பாஸ்போர்ட்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து இந்திய பணம் ரூ.14 ஆயிரத்து 690, 2 செல்போன்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல் விசாரணைக்காக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்