இன்று சுனாமி தாக்கியதன் 4ம் ஆண்டு நினைவு நாள்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 2008, 9:23 [IST]
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளையும், ஆசிய நாடுகளையும் சுனாமி ஆழிப் பேரலை சுழற்றிப் போட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது.
லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்.
தமிழகம் இந்த ஆழிப் பேரலைத் தாக்குதலில் பேரிழப்பை சந்தித்தது. நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை என தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் பாதி்ப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தன. ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.
சுனாமி தாக்கி நான்கு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இதையொட்டி சுனாமி பாதித்த பகுதிகளில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சலிக் கூட்டங்கள், அமைதிப் பேரணிகள், கூட்டுப் பிரார்த்தனை என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி முழுமையான அளவில் நடந்து முடிந்துள்ளதாக நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுனாமி தாக்குதலில் உயிரிழந்த 6605 பேரில் 18 பேரின் குடும்பங்களைத் தவிர மற்றவர்களுக்கு நிவாரண உதவிகள் முழு அளவில் வழங்கப்பட்டு விட்டன.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 17,852 நிரந்தர வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
சுனாமி மறு வாழ்வுப் பணிகளுக்காக ரூ. 876 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ. 656 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
// ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.//
பதிலளிநீக்குசத்தியமான உண்மை. இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு. இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service" யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணையதள முகவரி http://www.ina.in/itws/
குறிப்பு : தட்ஸ் தமிழ் தளத்திற்க்கு பின்னூட்டமிட்டதையே திருத்தி இங்கும் இட்டுள்ளேன்.
with care and love,
Muhammad Ismail .H, PHD