பக்ரீத் குர்பானிக்காக 5 ஒட்டகங்கள் நெல்லை வந்தன
நெல்லை,டிச.9-
பக்ரீத் பெருநாளையொட்டி குர்பானி கொடுப்பதற்காக நெல்லை மாவட்டத்துக்கு 5 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன.
பக்ரீத் பண்டிகை
முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பார்கள்.
நெல்லை மாவட்டத்துக்கு குர்பானி கொடுப்பதற்காக 5 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இவற்றில் 2 ஒட்டகங்கள் ஏர்வாடிக்கும், ஒரு ஒட்டகம் களக்காட்டுக்கும், ஒரு ஒட்டகம் செங்கோட்டைக்கும், ஒரு ஒட்டகம் தாழைïத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இன்று குர்பானி
தாழைïத்து சங்கர்நகர் சாதிக் ஜாமியா ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு ஒட்டகம் கட்டப்பட்டு இருந்தது. இந்த ஒட்டகம் நேற்று முன்தினம் இரவு அங்குஇருந்து தப்பி ஓடி அங்குள்ள காட்டு பகுதியில் நின்றது. அதை நிர்வாகிகள் பிடித்தனர்.
இந்த ஒட்டகம் இன்று (செவ்வாய்க்கிழமை) குர்பானி கொடுக்கப்படுகிறது
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்