சூதாட்டம்: 6 பேர் கைது
திருவாடானை, டிச. 14: திருவாடானை அருகே தொண்டியில் சீட்டு விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானை தாலுகா, தொண்டியில் சனிக்கிழமை இரவு தபால் அலுவலகக் கட்டடத்தின் மேல் மாடியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக தொண்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
காவல் துறை உதவி ஆய்வாளர் சிலைமணி தலைமையில் போலீஸôர் விரைந்து சென்று அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தொண்டியைச் சேர்ந்த ராவுத்தர் (40), கண்ணன் (25), அலி (40), கண்ணன் (35), நம்புதாளையைச் சேர்ந்த மன்சூர் (48), ஷேக் (47) ஆகிய 6 பேரையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்த ரூ. 4,900-ஐ பறிமுதல் செய்தனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்