Breaking News
recent

உ.பி. மக்களவை உறுப்பினர் முனவர் ஹாசன் சாலை விபத்தில் பலி

உ.பி. மக்களவை உறுப்பினர் முனவர் ஹாசன் சாலை விபத்தில் பலி

புதுதில்லி, டிச.10: மக்களவை உறுப்பினர் முனவர் ஹாசன் ஹரியாணாவிலுள்ள பால்வல் அருகே இன்று அதிகாலை சாலை விபத்தில் பலியானார்.


முனவர் ஹாசன் உத்தரப்பிரதேசத்தின் முஸôஃபர்நகர் தொகுதியிலிருந்து சமாஜவாதிக் கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஜூலை 22ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பகுஜன் சமாஜுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் சமாஜவாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவரை எம்பி பதவிலியிருந்து நீக்க வேண்டும் என சமாஜவாதிக் கட்சி சார்பில் மக்களவைத் தலைவரிடம் முறையிடப்பட்டிருந்தது. அம்மனு மீது இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. 1996 தேர்தலிலும் அவர் சமாஜவாதிக் கட்சி சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.


ஹாசன் மதுராவிலிருந்து தில்லிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 1.15 மணியளவில் பஞ்சாரி அருகே எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹாசன் சிகிச்சைக்காக தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அம்மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.


விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநரும், மற்றொருவரும் ஃபரிதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.