Breaking News
recent

டாக்டர் ஹனீப் குற்றமற்றவர்!: ஆஸ்திரேலிய விசாரணைக் குழு

டாக்டர் ஹனீப் குற்றமற்றவர்!: ஆஸ்திரேலிய விசாரணைக் குழு

மெல்போர்ன், டிச.23 : லண்டன் குண்டுவெடிப்புக்கும், டாக்டர் ஹனீப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் நிரபராதி என ஆஸ்திரேலிய சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்தது.

இதுகுறித்து விசாரணை செய்து வந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் கிளார்கே தலைமையிலான விசாரணைக் குழு, தனது அறிக்கையை அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், லண்டன் குண்டுவெடிப்புக்கும் ஹனீப்புக்கும் தொடர்பிருப்பதாக எவ்விதத் தடயத்தையும் கண்டுபிடிக்க இயவில்லை. அவர் மீது தவறான விதத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார் என நீதிபதி ஜான் கிளார்கே குறிப்பிட்டுள்ளதாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியாவின் அட்டர்னி ஜெனரல் ராபர்ட் மேக்லேலண்ட் தெரிவித்தார்.

ஹனீப் கைது நடவடிக்கையில் கீழ்நிலை அலுவலர்கள் முதல் உயர் நிலை அதிகாரிகள் வரை தவறு நடந்துள்ளது. எனினும், இந்தக் குற்றத்துக்காக அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கும் எண்ணம் இல்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தேவையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்தந்த அலுவலர்களும், அதிகாரிகளும் சார்ந்த துறைகளிடமே விட்டுவிடுகிறோம். எனினும், இந்தத் தவறான கைது நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தார்மீகப் பொறுப்பேற்பது அவசியம் என்றும் ராபர்ட் மேக்லேலண்ட் தெரிவித்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

4 கருத்துகள்:

  1. அவர் முஸலீம் என்பதற்காகவே தீவிரவாதி என்று எழுதிய ஊடகங்களும் பதிவர்களும்..... இப்போது.......

    இப்போது அவர் ஆஸ்திரேலியாவைத் துறந்து விட்டு இங்கு அமீரகத்தில் பணி புரிகின்றாராம்.

    இனிமேல் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளும் என்பதாக ஆஸதிரேலிய அரசு அறிவித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும்

    கருத்திற்கும் நன்றி!
    உங்கள் கருத்துகளை

    "கருத்து களத்தில்"

    www.talkvision.blogspot.com

    பதியளாம் !

    தங்களுடைய இணைப்பில்

    இணைத்துக்கொள்ளாமே!

    பதிலளிநீக்கு
  3. முதல்முதலாக அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா அனுப்பப்பட்டபோது அவருக்கு அடுத்த இருக்கை என்னுது :)))

    அவரை சுற்றீலும் பல்வேறு தலைகள்...இவர் யாரு ஏதாவது ஐ.டி கம்பெனி ஓனரா என்று மண்டைக்குள் ஓரே குழப்பம்...

    தாய்லாந்தில் இறங்கியவுடன் இந்திய ஊடகங்கள் டைம்ஸ் நவ், சி.என்.என் ஐபின் எல்லாம் போர்டிங் ஆவுற எடத்துலவே நிக்குறானுங்க்...

    உண்மையிலே மண்டை குழம்பிருச்சு...

    பெங்களூர் ஏர்ப்போட்ல தான் டிரைவரை விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்...

    ஓக்கே, டாக்டர் ஹனீப் சிம் கார்டு கொடுத்த / க்ளாஸ்கோ ஏர்போட்டில் தாக்குதல் நடத்திய நபர் குற்றவாளிதானே ? அவரை பற்றியும் ஒரு பதிவு வந்தால் நல்லாருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. முஸ்லிம் என்றாலே தீவிரவாத முத்திரை குத்தும் ஊடகங்களுக்கு,இந்தசெய்தி அதர்ச்சியாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.