Breaking News
recent

அபுதாபியில் ஹிஜிரா இஸ்லாமிய‌ப் புத்தாண்டு நிக‌ழ்ச்சி

அபுதாபியில் ஹிஜிரா இஸ்லாமிய‌ப் புத்தாண்டு நிக‌ழ்ச்சி

அபுதாபி அய்மான் ச‌ங்க‌ம் ( http://www.aimansangam.com ) ச‌னிக்கிழ‌மை 27 டிச‌ம்ப‌ர் 2008 ( ஹிஜிரி 1, 1430 ) மாலை ந‌ஜ்தா சாலையில் அமைந்துள்ள‌ ச‌னா பில்டிங்கில் ஹிஜிரா இஸ்லாமிய‌ப் புத்தாண்டு நிக‌ழ்ச்சியினை ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்விற்கு அய்மான் ச‌ங்க‌த் த‌லைவ‌ர் காழி ஏ.எம்.எம். காத‌ர் ப‌க்ஸ் ஹுசைன் சித்திக்கீ த‌லைமை தாங்க‌ இருக்கிறார். அய்மான் ச‌ங்க‌ உல‌மாக்க‌ள் அணித்த‌லைவ‌ர் ம‌வ்ல‌வி ஹாபிழ் அப்துல் ர‌ஹ்மான் ஆலிம் ம‌ஹ்ழ‌ரி துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்துகிறார்.

அய்மான் ச‌ங்க‌ மார்க்க‌த்துறை செய‌லாள‌ர் ம‌வ்ல‌வி ஹாபிழ் ஹுசைன் ம‌க்கி ஆலிம் ம‌ஹ்ழ‌ரி ஹிஜ்ர‌த்தின் ஒப்பிலா தியாக‌த்தின் உன்ன‌த‌ வ‌ர‌லாறு குறித்து சிற‌ப்புரை நிக‌ழ்த்துகிறார்.

மேற்கண்ட‌ த‌க‌வ‌லை அய்மான் ச‌ங்க‌ பொதுச் செய‌லாள‌ர் எஸ்.ஏ.சி. ஹ‌மீது ( 050 621 25 69 ) தெரிவித்தார்.

அய்மான் ச‌ங்க‌ம் அல்லாஹ்வை வ‌ண‌ங்கி வாழ்வோம், இல்லாதோருக்கு வ‌ழ‌ங்கி வாழ்வோம், எல்லோருட‌னும் இண‌ங்கி வாழ்வோம் என்ற‌ உன்ன‌த‌ குறிக்கோளுட‌ன் க‌ட‌ந்த‌ 1981 ஆம் ஆண்டு துவ‌க்கப்ப‌ட்டு செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.