Breaking News
recent

இஸ்லாமியா பள்ளி மாணவர்களின் அமைதி அஞ்சலி

இஸ்லாமியா பள்ளி மாணவர்களின் அமைதி அஞ்சலி

கீழக்கரை டிச.11
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்தும்,மனித நேயத்தை வலியுறுத்தியும் இந்திய இறையாண்மையைப் பேணவும் மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த படைவீரர்கள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களுக்கு இஸ்லாமியா பள்ளிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் ஜனாப்.எம்.ஏ.ஹாரூன் ரசீது அவர்கள் தலைமையில் கீழக்கரை நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் ஜனாப்.எம்.எம்.கே.முகம்மது காசிம் மற்றும் 18வது வார்டு கவுன்சிலர் ஜனாப் எம்.எம்.கே.முகம்மது ஜமால் இப்ராகீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் ஜனாப்.எம்.முகைதீன் இப்ராகீம்,முதல்வர் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.