Breaking News
recent

அபிராமம் பேரூராட்சியில் மருத்துவமனை பஸ் நிலையம் இல்லாததால் மக்கள் அவதி

அபிராமம் பேரூராட்சியில் மருத்துவமனை பஸ் நிலையம் இல்லாததால் மக்கள் அவதி

கமுதி, டிச. 22: அபிராமம் பேரூராட்சியில் அரசு மருத்துவமனையும், பஸ் நிலையமும் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, பேரூராட்சித் தலைவர் போ. கணேஷ்குமார் (எ) கணேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில், அபிராமம் பேரூராட்சி தவிர மற்ற பேரூராட்சிகளில் பஸ் நிலையம் உள்ளன.

இங்கு பஸ் நிலையம் இல்லாததால், சாலையோரமாக பொதுமக்கள் நின்று பஸ்களில் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக பஸ் நிலையம் அமைக்க, சாலையோரமுள்ள கண்மாய்க்கரைப் பகுதியில் சிறிது இடத்தை பொதுப்பணித்துறை ஒதுக்கித் தருமேயானால், பஸ் நிலையம் அமைத்து பொது மக்களுக்கு வசதியை பேரூராட்சி ஏற்படுத்தித் தரும்.

இதேபோன்று, இங்கு அரசு மருத்துவமனை வசதியும் இல்லை. மருத்துவ சிகிச்சை பெற கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி போன்ற வெளியூர்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதில், ஏழை, எளியோர் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

எனவே, விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்குவதற்கான இடத்துக்கு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இடத்தையும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால், பரமக்குடி கோட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

மாவட்ட அமைச்சராக உள்ள குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன், முருகவேல் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு அபிராமம் பேரூராட்சி மக்களின் நீண்ட நாளைய அவசியமான கோரிக்கைகளான பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை வசதியை உடனடியாக செய்து தரவேண்டும் என்றார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.