Breaking News
recent

பொருட்கள் வாங்கும் போது அவசியம் ரசீது பெற வேண்டும்

பொருட்கள் வாங்கும் போது அவசியம் ரசீது பெற வேண்டும்
நுகர்வோர் தினவிழாவில் கலெக்டர் அறிவுரை


ராமநாதபுரம், டிச.26-

பொருட்கள் வாங்கும் போது அவசியம் அதற் கான ரசீது பெற வேண் டும் என்று நுகர்வோர் தின விழாவில் கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசி னார்.

நுகர்வோர் தின விழா

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கலெக்டர் கிர்லோஷ் குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி தமிழ்மணி வரவேற்றார். விழாவில் கலெக்டர் கிர் லோஷ்குமார் பேசியதாவது:- உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் நுகர்வோர் ஆவர். நுகர்வோருக்கு பாது காப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, முறையிடும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகள் உள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர் 24-ந்தேதி தேசிய நுகர்வோர் தினமாகவும், மார்ச் 15-ந் தேதி உலக நுகர் வோர் உரிமை தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க கடந்த 1984ம் ஆண்டு நுகர்வோர் பாது காப்பு சட்டம் உருவாக்கப்பட் டது. நுகர்வோர் தங்களது குறைகளை தீர்த்துக்கொள் ளும் வகையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இதில் பாதிக்கப்பட்ட நபரே வாதிடலாம். நுகர்வோர் உரிய இழப்பீடு பெறவும் வாய்ப்பு உண்டு. வாங்குகின்ற பொருட்களுக்கு அவசியம் ரசீது வாங்க வேண்டும். பொருள் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, அதிகபட்ச விற்பனை விலை, தரச்சான்று போன்றவற்றை எல்லாம் கவனமாக கண் காணித்து வாங்க வேண் டும்.

நுகர்வோர் உரிமைகள், கடமைகள் குறித்து அறிந்து கொள்ள இது போன்ற கருத்தரங்குகள் பெரி தும் உதவியாக அமையும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

கலந்து கொண்டோர்

நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை ஆணையர் சந்திரசேகரன், அசன் அலி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட் டமைப்பு தலைவர் துரை சிங்கம், கூட்டுறவு இணை பதி வாளர் பாபு, தமிழ்நாடு நுகர் வோர் வாணிப கழக மண்டல மேலாளர் கருணாநிதி, டாக் டர் உமா மகேசுவரி, பனை தொழிலாளர் நலவாரிய உறுப் பினர் சிவலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வழங்கல் அதிகாரி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.