வேலூர்- சென்னை பீச் ரயில் நிலையம் இடையே மெயின் லைனில் புறநகர் மின்சார ரயில், வரும் 22ம் தேதியிலிருந்து இயக்கப் படுகிறது. இந்த ரயிலுக் கான துவக்க விழா வரும் 21ம் தேதி வேலூரில் நடக் கிறது. வேலூர் கன்டோன் மென்ட் ரயில் நிலையத் தில் 21ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில், மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, இப்புதிய ரயில் போக்குவரத்தை துவக்கிவைக் கிறார்.
அதன் பிறகு, 22ம் தேதியிலிருந்து இந்த ரயில் கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படுகிறது. இதன்படி, வேலூரிலிருந்து சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு மெயின் லைனில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் (எண். 186) அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, காலை 9.10 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையம் வந்தடையும்.
சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப் படும் புறநகர் மின்சார ரயில் (எண். 185) மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வேலூர் சென்றடையும். சென்னை பீச் - திருமால்பூர் இடையே இயக்கப் படும் புறநகர் மின்சார ரயில் (பிடிஎல் 1 ஏ) பீச் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.12 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.15 மணிக்கு திருமால்பூர் சென்றடையும். திருமால்பூரிலிருந்து இயக்கப்படும் (எண்.டி எல்பி 6 ஏ) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலை யத்திலிருந்து அரக்கோணத் திற்கு இயக்கப்படும் விரைவு புறநகர் மின்சார ரயில் (எண்.எம்ஏ 23) மூர் மார்க்கெட் ரயில் நிலையத் திலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு அரக் கோணம் சென்றடையும்.
இந்த ரயில் பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத் தூர், திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர் மற்றும் திருவாலங்காடு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித் துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்