Breaking News
recent

ராமநாதபுரத்தில் கணினி பயிற்சி மையம்: தேமுதிக அறிவிப்பு

ராமநாதபுரத்தில் கணினி பயிற்சி மையம்: தேமுதிக அறிவிப்பு

ராமநாதபுரம், டிச. 22: ராமநாதபுரத்தில் விரைவில் கணினி பயிற்சி மையம் திறப்பு விழாவும் வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறும் என தேமுதிக மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்று வெளியேறாமல் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு வெளியேற்றவில்லையெனில் தேமுதிக சார்பில் அத்தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முறைப்படி ஆட்சியரிடம் மனு அளித்தும் அக்கோரிக்கை நிறைவேறவில்லையெனில் தேமுதிக அதனை வெளியேற்றும்.

ராமநாதபுரத்தில் விரைவில் இலவச கணினி பயிற்சி மைய திறப்பு விழாவும், வேலை வாய்ப்பு முகாமும் நடத்தப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் ஆட்சியரிடம் நிதி வழங்கப்படும் எனவும் சிங்கை ஜின்னா தெரிவித்தார்.

முன்னதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். நகர் பொறுப்பாளர் முத்தீஸ்வரன் வரவேற்றுப் பேசினார்.

தேமுதிக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.