Breaking News
recent

சிங்க‌ப்பூர் காய‌ல் ந‌ல‌ ம‌ன்ற‌ பொதுக்குழுவில் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு

சிங்க‌ப்பூர் காய‌ல் ந‌ல‌ ம‌ன்ற‌ பொதுக்குழுவில் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் 2008ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம் 20.12.2008 சனிக்கிழமை மாலை மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் சிங்கப்பூர் ஆங்கன் ரெஸ்டாரன்டில் நடைபெற்றது.

துவக்கமாக ஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர் ஸ‌பி கிராஅத் ஓதினார்.

2008ஆம் ஆண்டில் நடைபெற்ற செயற்குழுக் கூட்ட அறிக்கைகள் மற்றும் வரவு-செலவு கணக்கறிக்கை ஆகியவற்றை மன்றச் செயலாளர் ரஷீத் ஜமான் சமர்ப்பிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக அங்கீகரித்தனர்.

இக்கூட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான (2009‍-10) புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டது:-

தலைவர் பொறுப்புக்கு ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் புதிய தலைவர் மன்றத்தின் செயலாளராக ரஷீத் ஜமான், பொருளாளராக எஸ்.ஹெச்.அன்ஸாரீ, துணைச் செயலாளராக எம்.எம்.மொகுதூம் முஹம்மத் மற்றும் துணைப் பொருளாளராக கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் ஆகியோர் பெயரை அறிவிக்க பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரித்தது.

பின்னர் அடுத்த 6 மாதங்களுக்கான (2009 ஜனவரி முதல் ஜூன் வரை) செயற்குழு உறுப்பினர்களாக எம்.ஆர்.அபூ ஜமான், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத், சாளை நவாஸ், எம்.ஏ.ஹஸன் சுலைமான், கே.எஸ்.ஐ.அபூபக்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட‌ன‌ர்.
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

காயல்பட்டணத்தில் துவக்கப்பட்டுள்ள இக்ராஃ கல்விச் சங்கத்தையே அனைத்து மன்றங்களையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாகக் கொள்ளலாம் எனவும்,மன்றத்தின் காயல்பட்டணம் நகர பிரதிநிதியாக எஸ்.கே.ஸாலிஹை நிய‌மிப்ப‌து, விரைவில் காயல்பட்டணத்தில் மருத்துவ இலவச முகாம் மற்றும் கல்வி வழிகாட்டு கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்துவது,மன்ற உறுப்பினர்கள் அதிகமாக இரத்த தானம் செய்ய வேண்டும் என வலியுறுத்துவ‌து, வேலைவாய்ப்பு தேடி சிங்க‌ப்பூர் வ‌ருகை த‌ரும் காய‌ல‌ர்க‌ளுக்கு உத‌வுத‌வ‌து உள்ளிட்ட‌ தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

இரவு உணவு அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வகைக்காக ஹாஜி பி.எம்.ஐ.அப்துல்லாஹ் ஜவ்ஹரீ, ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன் மற்றும் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் ஆகியோர் அணுசரணை வழங்கியிருந்தனர்.
மன்றச் செயலாளர் ரஷீத் ஜமான் நன்றியுரைக்குப் பின், மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆ ஓத, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல்: எஸ்.கே.எஸ். ம‌ற்றும் ரஷீத் ஜமான்,செயலாளர்,
காயல் நல மன்றம்,
சிங்கப்பூர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.