Breaking News
recent

சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் இருக்கும் தமிழக இளைஞர்களை மீட்க நடவடிக்கை

சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் இருக்கும் தமிழக இளைஞர்களை மீட்க நடவடிக்கை


மதுரை, டிச.21-

சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் இருக்கும் தமிழக இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய காமல்வெல்த் வக்கீல் சங்க தலைவர் செல்வம் பாரிமன்னன் கூறினார்.

சுற்றுலா விசாவில்

இந்திய காமல்வெல்த் வக்கீல் சங்கம் மற்றும் சமரச தீர்ப்பாயத்தின் மாநில தலைவர் செல்லம் பாரிமன்னன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து நமது இளைஞர்கள் வேலைக்காக பலநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்கிறார்கள். விசாவின் காலம் முடிந்த பிறகும் அவர்கள் சொந்த நாடு திரும்புவதில்லை. அங்குள்ள இந்திய ஏஜெண்டுகளின் உதவியுடன் தலைமறைவாக வேலை பார்க்கிறார்கள். போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

3 ஆயிரம் தமிழர்

தண்டனை காலம் முடிந்த பிறகும் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுபோல சிறையில் இருக்கிறார்கள். அதில் சுமார் 3 ஆயிரம் பேர் தமிழர்கள். இவர்களை மீட்பதற்காக காமன்வெல்த் வக்கீல்கள் சங்கம் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பலனாக முதல்கட்டமாக சிங்கப்பூர், மலேசியா சிறைகளில் உள்ள தமிழர்களை மீட்பதற்காக எங்கள் சங்கம் சார்பில் ஒரு குழு இந்த மாத கடைசியில் செல்கிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.