Breaking News
recent

நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் பேட்டி

கோவை, டிச.25: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

27-ம் தேதி காயல்பட்டினத்தில் கட்சிப் பொதுக்குழு கூடுகிறது. இதில், கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்.

தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலும், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் அடங்கிய கூட்டணியிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணியிலேயே இடம் பெறுவோம். எங்களின் தனித்தன்மையை நிலைநிறுத்த இம்முறை கூடுதல் தொகுதி ஒதுக்குமாறு திமுக-வை வலியுறுத்துவதுடன் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம்.

திருமங்கலம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். மும்பை சம்பவத்துக்குப் பின்பு பாகிஸ்தான், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எங்களது கட்சியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமது, ஐநா சபை கூட்டத்தில் பேசிய கருத்து உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பாகிஸ்தானை நிர்பந்திக்க வேண்டும். இல்லையெனில் போர்தான் இறுதி முடிவாக இருக்கும் என்றார் அவர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.