Breaking News
recent

எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஆட்சியர் சமபந்தி

எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஆட்சியர் சமபந்தி

ராமநாதபுரம், டிச. 23: ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுடனான சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் கலந்து கொண்டார்.

ராமநாதபுரத்தில் உலக எய்ட்ஸ் தின விழாவை முன்னிட்டு வலம்புரி மகாலில் சமபந்தி போஜனம் மற்றும் உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தலைமை வகித்து, சமபந்தி போஜனம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுகாதாரத் துறை இணை இயக்குநர் இப்ராஹிம் அலி, காச நோய் பிரிவு துணை இயக்குநர் கே. பழனிநாதன், குடும்ப நலத் துறை துணை இயக்குநர் என். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சொ.முருகன் (வளர்ச்சி) வரவேற்றுப் பேசினார்.

விழாவில், நலப் பணிகள் துறை துணை இயக்குநர் வி. உமாமகேஸ்வரி, ஆர். மாலதி, மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ம. தென்னரசு, ஜெ.மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழாவில் ஆட்சியர் பேசியதாவது:

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.30 கோடி. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 23.10 லட்சம். தமிழகத்தில் 2.40 லட்சம் உள்ளது. மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 924 எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 571, பெண்கள் 325, சிறுவர் 26 பேர் மற்றும் 2 திருநங்கைகளும் உள்ளனர்.

மாவட்டத்தில் எச்.ஐ.வி. சிகிச்சைக்காக 27 இடங்களில் ஏ.ஆர்.டி. மையம் செயல்பட்டு வருகிறது. விரைவில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இந்த மையம் அமைய உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.