விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
விருதுநகர், டிச. 21-
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிறு பான்மையினர் உரிமை கள் தின விழா கலெக்டர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது .
சிறுபான்மையினர் தினம்
விருதுநகர் கலெக்டர் அலு வலகத்தில் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை யின் சார்பில் சிறுபான்மை யினர் உரிமைகள் தின விழா கலெக்டர் ரகுபதி தலைமை யில் நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் ரகுபதி பேசும் போது தெரிவித்த தாவது:-
உலகில் சிறுபான்மையின மக்களுக்கு அரசியல் சட்டத் தின் வாயிலாக அங்கீகாரம் வழங்கியது இந்தியாவில்மட் டும் தான். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சிறுபான்மையின மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள் ளது. ஆனால் எந்த விதமுன் னுரிமையும் வழங்கப்பட வில்லை. சிறுபான்மையின மக்களுக்கான சலுகைகளை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் திகழ் கிறது. சிறுபான்மையின மக் களின் கலாச்சாரம், கல்வி மற் றும் அவர்களது உரிமைகளை பாதுகாக்க அரசு அனைத்து அங்கீகாரங்களையும் வழங்கி யுள்ளது.
சிறுபான்மையின மக்க ளின் பாதுகாப்பு அரணாக தமி ழக அரசு செயல்படுகிறது. சிறு பான்மையின மக்களின் நல்வாழ்விற்காக டாம் செட்கோ, டாப்செட்கோ திட் டங்களின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. மகளிர் குழுக்கள் ஏற் படுத்தப்பட்டு உதவிகள் வழங் கப்பட்டு வருகின்றன.
முன்னேற வேண்டும்
தமிழக அரசு, சிறுபான் மையின மக்க ளுக்கு திட்டங் களை சிறந்த முறையில்செயல் படுத்தி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண உறு துணையாக இருக்கிறது.தொகுப்பு வீடுகள் திட்டமா னாலும் சரி. அரசின் பிற திட்டங்கள் ஆனாலும் சரி. சிறுபான்மையின மக்கள் அவற்றை பயன்படுத்தி தங்க ளது வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ரகு பதி பேசினார்.
முன்னதாக மாவட்டபிற் படுத்தப்பட்டோர் நலஅலு வலர் பத்மா வரவேற்றுப் பேசினார். மாவட்டஊரக வளர்ச்சி முகமை திட்ட அலு வலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். துணை பதிவாளர் (கூட்டுறவு) செல்வராஜ், மோசஸ் ஜான்சன், ரியாஸ் பானு ஆகியோர் பேசினர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தாணப்பாநிகழ்ச் சிகளை தொகுத்து வழங்கி னார். உதவி கணக்கு அலு வலர் சீதாபதி நன்றி கூறி னார். நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாது காப்பு திட்டம்) குருதேவி, துணை ஆட்சியர் (கலர்.டிவி.) வசந்தா, ஆதி திராவிடர் நல அலுவலர் பாக்கியம் தேவ கிருபை உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், சிறுபான்மையினர் நலச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண் டனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்