Breaking News
recent

ஜித்தாவில் ஹாஜிக‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

ஜித்தாவில் ஹாஜிக‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

ஜித்தாவில் தியாக‌த் திருநாளாம் ஹ‌ஜ் பெருநாளைத் தொட‌ர்ந்து இவ் வருடம் ஹஜ் செய்த உள்ளூர் மற்றும் வெளியூர் ஹாஜிகள் கலந்துகொண்ட ஹாஜிக‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 2008 வெகு சிறப்பாக நடை பெற்றது.


இந்நிக‌ழ்வில் ஹஜ்ரத் ஹுசைன் மன்பயீ,ஹஜ்ரத் ஷம்சுதீன் காசிமி மற்றும் மலேசியா ஷேய்க் முஹம்மது நூரி ஆகியோர் முன்னோர்களின் தியாகம், ஹஜ்ஜுக்குப் பின்... மற்றும் சகிப்புத் தன்மை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தலைப்புகளிள் பேசினர்

இதில் புஷ்ரா ஹ‌ஜ் ச‌ர்வீஸ், டால்பின் ஹ‌ஜ் ச‌ர்வீஸ், ம‌க்கா டூர் ஏஜெண்ட்களும் மற்றும் சங்கரன் பந்தல்,அய்யம்பேட்டை, ராஜகிரி, காயல்பட்னம், மதுரை சிவகங்கை போன்ற ஊர் ஹாஜிகள் மற்றும் மலேசியா அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புஸ்ரா ரஜாக் ஹாஜியார், டால்பின் தீன் ஹாஜியார், MSM முஹம்மது சாலிஹு ஹாஜியார், மாடர்ன் ப்ராசெஸ் பாக்கர் ஹாஜியார் போன்றோர்களும் பெண்களும் வருகை தந்தனர் ஜித்தா வாழ் அதிரை சகோதர சகோதரிகள் நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இந்தியா பிரெட்டின‌ரி ஃபார‌ம் பொறுப்பாளர்கள் அந்த அமைப்பினரின் சகோதார்களின் மினா- அரபா சேவை பாராட்டப்பட்டது. மேலும் ராஜ‌கிரி RDB கல்லூரி தலைவர் ராஜகிரி தாவூது பாட்சா அவர்களின் கல்விச் சேவைக்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. நிகழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ரபி அகமது (ரஃபியா) செய்திருந்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.