கத்தார் நாட்டு விமான நிலையத்தில் பரிதவிக்கும் ஆசியத் தொழிலாளர்கள்
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு வேலைக்காக சென்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுக்கு பணி வழங்கும் நிறுவனங்கள் வந்து தங்களை அழைத்துச் செல்லாத காரணத்தால் விமான நிலைய வளாகத்திலேயே முறையான உணவின்றி உறங்கி வருகின்றனர்.
இதில் இந்தியா, பங்களாதேஷ்,இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு தொழிலாளர்களும் அடங்குவர். இதற்குக் காரணம் தொழிலாளர்களை கத்தார் நாட்டுக்கு அனுப்பும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனத்திற்கு முறையான தகவல் தரப்படாததே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கத்தார் நாட்டு தொழிலாளர் நலத்துறை தெரிவிக்கும் போது இது குறித்து அவர்களது நிறுவனத்திற்கு தகவல் பலமுறை தெரிவிக்கப்பட்டும் அவர்கள் உடனடியாக வந்து அவர்களை அழைத்துச் செல்லாமல் தாமதப்படுத்துவது தொழிலாளர்கள் விமானநிலையத்திலேயே தங்கும் சூழ்நிலை நிலவுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டது.
AdiraiPost
கத்தார்
தொழிலாளர்
கத்தார் நாட்டு விமான நிலையத்தில் பரிதவிக்கும் ஆசியத் தொழிலாளர்கள்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்