Breaking News
recent

கடற்படை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடற்படை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, டிச. 25: இந்திய கடற்படையில் ஆர்டிஃபீசர் அப்ரன்டீஸ், சீனியர் செகன்டரி ரெக்ரூட்ஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய கடற்படையில் ஆர்டிஃபீசர் அப்ரன்டீஸ் மற்றும் சீனியர் செகன்டரி ரெக்ரூட்ஸ் பணிகளுக்கான விண்ணப்பங்களை சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் திருமணமாகாத இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 1-8-88 முதல் 31-7-92-க்குள் பிறந்திருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியலை முதல் பாடமாக படித்திருக்க வேண்டும்.

துணைப் பாடங்களாக வேதியல், உயிரியல் மற்றும் கணினி ஆகியவற்றையும், இந்த பாடங்களில் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை த.பெ. எண்.488, gole dak khana, g.p.o. new delhi-1 என்ற முகவரிக்கு 05-01-2009 தேதிக்குள் அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.